தமிழ்நாட்டில் இன்று இந்திய ஒருமைப்பாட்டின் முழு விரோதிகளைக் கொண்ட குழுவினர் இருவர் வெளிப்படையாக இயங்கி வருகிறார்கள்.
ஒன்று பெரியாரியவாதிகள்.
ஒரு குறிப்பிட்ட குழுவினரை அக்குழுவில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகப் பழித்துக் கொண்டிருப்பதை ஹிட்லர் செய்து கொண்டிருந்தான். அதைத்தான் பெரியாரியவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவன் மனிதகுல விரோதி என்றால் இவர்களும் எந்த சந்தேகமும் இல்லாமல் மனிதகுல விரோதிகள்தாம். ஹிட்லர் செய்ததைத்தான் இவர்கள் எந்த வெட்கமும் இல்லாமல் செய்து கொண்டு வருகிறார்கள்.
இது திரு கொளத்தூர் மணி சொல்லியிருப்பது:
“பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். ‘திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது.”
இது தெளிவாக, இவர்கள் அமைக்கவிருக்கும் திராவிடநாட்டில், பிராமணருக்கு இடம் இல்லை என்று சொல்கிறது. மக்கள் என்றால் பிராமணர்கள் அல்லாதவர் என்று சொல்வது அப்பட்டமான நாஜி இனவெறி. மனிதகுலத்திற்கே எதிரான வெறி. அழித்தொழிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்திற்குத் சொந்தக்காரர்கள் பெரியாரிய வாதிகள். இவர்கள் இந்திய ஒருமைப்பாட்டின் விரோதிகள் என்பதும் வெளிப்படை. இவர்கள் கணக்கில் இந்திய ஒருமைப்பாட்டிற்குத் தமிழ்நாட்டில் ஆதரவளித்து தீவிரமாக இயங்குபவர்களில் மிக முக்கியமானவர்கள் பிராமணர்கள். எனவே இந்திய ஒருமைப்பாட்டைச் சாட வேண்டுமானால் பிராமணர்களைச் சாடினால் போதும் என்ற உத்தியை இவர்கள் காலம் காலமாகக் கையாண்டு வருகிறார்கள். மத்தியில் இருப்பது பார்ப்பன அடிவருடி அரசு என்று இவர்கள் தொடர்ந்து சொல்லி வருவதன் காரணமும் அதுதான். ஆனாலும் அடிப்படையில் முழுப் பிரிவினைவாதிகள் என்றாலும் இன்றுவரை அதிகம் வன்முறையில் இறங்காதவர்கள். நாளை எப்படி இருக்கும் என்று யாராலும் உறுதி சொல்ல முடியாது.
இரண்டு பிரபாகரன் ஆதரவாளர்கள்.
பிரபாகரன் தமிழர்களையும், முன்னாள் இந்தியப் பிரதமரையும் கொன்ற கொலைக் குற்றவாளி. இவர் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் செய்த கொலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. இவர்களை ஆதரிப்பவர்கள் வன்முறைக்கு அஞ்சாதவர்களாகத்தான் இருப்பார்கள். பிரபாகரன் ஆதரவாளர்களும் இந்திய ஒருமைப்பாட்டின் முழு எதிரிகள். தனித்தமிழ்நாடு கனவைக் கண்டு கொண்டிருப்பவர்கள். பயங்கரவாதத்தின் இலக்கணம் என்று சொல்லக் கூடிய புலிகளின் இயக்கத்தை, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்கள்.
இதில் பெரியாரியவாதிகளாக இருப்பவர்களில் சிலர் (கொளத்தூர் மணி அல்ல) பிரபாகரன் ஆதரவாளர்களை விமரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது கொளத்தூர் மணி போன்ற பெரியாரியவாதிகளையும் பிரபாகரன் ஆதரவாளர்களையும் பொங்க வைத்து விட்டது. இரு குழுவினருக்கும் பெரிய தகராறு. வாதங்கள் வலுப்பெறுவதால் வண்டவாளங்கள் வெளியாகின்றன. இந்திய அரசு இவ்வாதங்களைக் கவனிக்க வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான சக்திகள் பேசிக் கொண்டிருக்கும் வரையில் அரசும் கண்காணித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்களில் சிலர் பேச்சோடு மட்டும் நிறுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்படும் வரை இந்தியத் தலைவர்கள் மீது புலிகள் கையை வைக்க மாட்டார்கள் என்றுதான் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். இந்திய அரசு ராஜீவ் காந்தி விவகாரத்தில் கோட்டை விட்டது போலக் கோட்டை விடக் கூடாது.
இது போன்ற விவாதங்கள் ஏன் எழுவர் விடுதலையை இந்திய அரசு என்றும் அனுமதிக்கக் கூடாது என்பதையும் தெளிவாக்குகின்றன. புலிகளின் ‘ உறங்கும் அறைகள்’ (sleeper cells) இன்றும் தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கலாம். இவர்கள் வெளியில் வந்தால் உறங்கும் அறைகள் விழித்துக் கொண்டு தமிழ்ப்பிரிவினை வாதம் இன்னும் வேகம் பெறும் அபாயம் இருக்கிறது. வேகம் பெற்றால் அமைதி விடை பெற்றுக் கொண்டு விடும். எழுவரை வெளியில் விட வேண்டும் என்று சொல்பவர்களில் பலர் இந்திய ஒருமைப்பாட்டிற்கு நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிராகச் செயல்படுபவர்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. மத்தியில் இருக்கும் அரசு எந்த அரசாக இருந்தாலும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகச் செயல்படாது என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது. எந்த மாறுடையில் வந்தாலும் பிரிவினைவாதத்திற்கு எதிராக மிகக் கடுமையாக இயங்க இந்திய அரசு தயங்கக் கூடாது.
நாதகவின் raison d’être ‘இவர்களுக்குத் திராவிடர்களே தேவலாம்’ என்று தோன்றவைப்பது தானோ என்று எண்ண வாய்ப்புண்டு (I’d say there is even a case for Psephological conspiracy theorists to explore).
இருவருக்கும் யார் ‘US’ யார் ‘THEM’ என்பதில் மட்டும் தானே சண்டை?
மற்றபடி நிஜமாகவே கருத்தியல்(!) வித்தியாசங்கள் இருப்பதுபோல திராவிட ஆதரவாளர்கள் சமீபத்தில் சிலிர்த்துக்கொள்வது நல்லதொரு வேடிக்கை.
The villainy you teach me I will execute—and it shall go hard but I will better the instruction.
என்று ஷைலக் சொல்வது போல தானே நாதக தம்பிகள் சொல்லாமல் சொல்கிறார்கள். இவர்களை கேள்வி கேட்கும் யோக்யதை திராவிட கருத்தியல் உள்ளவர்களுக்கு உண்டா என்ன?
/எழுவர்/
இதில் பல முற்போக்காளர்கள், ‘எது எப்படியோ, மனிதாபிமான அடிப்படையில்….சட்டப்படி எல்லாம் செய்துவிட்டபடியால்’ என்கிற ரீதியில் வரட்டுத்தனமான அபிப்ராயங்கள் முன்வைக்கிறார்கள்.
எந்தச் சூழலில் இந்த விடுதலை சமாசாரம் முன்னெடுக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் முடிவு எடுப்பது பொறுப்பற்ற செயல்பாடுகள்.
இன்றைய தேதியில் நம் சூழலில் இருப்பது தமிழ்தேசிய one-upsmanship on steroids.
பிரபாகரன் படம்போட்ட ஒரு கட்சி 6% வாக்குகள் வாங்குகிறது. அவனது படம் ஒட்டிய ஆட்டோ, கார், பைக் போன்றவற்றை சென்னையிலேயே பரவலாகப் பார்க்கலாம்.
இட, வல, மய்ய அரசியல்வாதிகள் எவரும் அவனைச் சாடத் தயாராக இல்லை. இல்லாதவனை ஏன் சாடுவானேன், என்பது மட்டும் காரணம் இல்லை. புனிதப்பசு ஆக்கப்பட்டுவிட்டான்.
அவனையும், புலிகளையும் அறப்போர் மறவர்களாக வெள்ளையடித்து ஒரு தலைமுறையின் மனதில் பொய்பிம்பம் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு விட்டது.
அதை முழுவதும் வேரறுக்காது கொலைஞர்கள் எழுவரை விடுவிப்பது சமூகத்தின் செல்திசையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமே வேண்டாம்.
திராவிட ஆகர்ஷணத்துக்கு ஆட்பட்ட போதிலும், தமிழ்நாடு காங்கிரஸிடம் எஞ்சியிருக்கும் ஒரு உருப்படியான நிலைப்பாடு: புலி-எதிர்ப்பு. ஆனால், அதுவும் ஏதோ ஒரு அரசியல் பேரத்துக்காக எந்நேரமும் நீர்த்துப் போகக்கூடிய அபாயம் உண்டு.
சென்றமுறை ‘எழுவர் விடுதலை’ சூடுபிடித்தபோது ‘மே-17’ இயக்க ஆசாமிகள் சென்னை எங்கும் ஒரு போஸ்டர் ஒட்டினார்கள்: விடுதலை மட்டும் பத்தாது, இந்திய அரசே எழுவருக்கு இழப்பீடு வழங்கு.
இழப்பீடா?! என்னய்யா விளையாடுகிறீர்களா?!
இம்முறை தமிழ்தேசிய லெட்டர்பேட்கள் பல்கிப் பெருகியுள்ளன. புலித்தலைவரை தம் தலைவராக வரித்துக்கொண்ட ஒருவர் பண்ருட்டி எம்.எல்.ஏ’வாக ஆகிவிட்டார்.
தங்கள் தனித்துவத்தை நிரூபிக்க இன்னும் பலமான குரல்கள் ஒலிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஹிந்துத்வா ஆசாமிகள் இதையும் விட்டுவைக்கவில்லை. பிரபாகரன் தன் ஒரு மகனுக்கு சார்ல்ஸ் ஆண்டனி என்ற பெயர் வைத்ததற்கு காரணம் புரியாமல், ‘அவர் ஹிந்துவாக இருந்தவரை பௌத்த அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். ஆனால் மிஷனரிகளால் மதம் மாற்றப்பட்டு வழிதவறினார். முஸ்லிம் தமிழர்களைக் கொன்றார்….’ என்றெல்லாம் அரிய கண்டுபிடிப்புகளை அவிழ்த்துவிடுகிறார்கள். ( அடடா! உங்களுக்குத் தான் முஸ்லீம்கள் மேல் எத்தனை அக்கறை! கண்ணீர் வருகுதய்யா)
Everyone wants a piece of the TamilDesiya cake now.
LikeLike
This comment is not coming through because I posted a link. So I removed the link and I am reposting.
ஹிட்லர், நாட்ஸி என்று வர்ணித்தால் ‘இப்போ என்ன விஷப்புகை அறைகளிலா தள்ளிவிட்டோம்? இப்படி பிலாக்கணம் வைக்கிறீர்களே’ என்பார்கள்.
‘விஷக் கருத்தியல்’ வன்முறையின் வித்து மட்டுமல்ல, அதுவே ஒரு வன்முறை. முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக தம்மை நினைத்துக்கொள்கிறவர்களும் ஏற்றுக்கொள்ளும் வன்முறை. அதன் பரவல் பகுத்தறியும் விவாதத்துக்கே இடம் இல்லாமல் செய்கிறார். அது முன்வைக்கும் விவாதச் சட்டகமே விஷத்தில் தோய்ந்தது.
நெருக்கினால் 40களில் ஈ.வெ.ரா எழுதினார், அண்ணா எழுதினார், அப்போது ஹொலொகாஸ்டின் முழு உக்கிரம் தெரியவில்லை என்றெல்லாம் சப்பைகட்டு சொல்வர் சிலர்.
ஆனால்,சென்ற வார ‘விடுதலை’ தலையங்கத்தில் வந்த வரிகளைப் பாருங்கள்:
யூதர்களோடு பார்ப்பனர்கள் தங்களை இணைத்துக் கொண்டது ஒரு வகையில் சரிதான்.யூதர்கள் யார்?அய்ரோப்பா முழுவதும் பரவி நேர்மையற்ற தொழில்களால் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டவர்கள். வட்டிக்கடை, நிலங்கள் அபகரிப்பு, நிதி பரிமாற்றத்தில் மோசடி – இவற்றில் கைதேர்ந்தவர்கள்.
And rest is their usual tripe. I am not selectively quoting. You can read the editorial here:
Removed the Link
12th June 2021 editorial Viduthalai.
LikeLike
Please forward me the link. You can do it on my Facebook messenger.
LikeLike