கீழடி – என் எட்டு கேள்விகளும் தமிழக அரசின் பதிலும்

காலச்சுவடு நவம்பர் இதழில் திரு சிவானந்தம் மற்றும் திரு சுந்தர் கணேசன் எழுதிய "கீழடி: தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று" என்ற கட்டுரை வெளிவந்திருந்தது. இது அரசு தொல்லியல் துறை சார்பில் எழுதிய கட்டுரை என்பதும் தெளிவாக கட்டுரையின் உள்ளடக்கத்திலிருந்து தெரிந்தது. கட்டுரை தொடர்பாக எனக்குச் சில கேள்விகள் இருந்தன. அவற்றை நான் காலச்சுவடு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். இது என் கடிதம்: எட்டு கேள்விகள் அன்புள்ள கண்ணன், சுகுமாரன், இக்கேள்விகள் திரு சிவானந்தம் சுந்தர் கணேசன்… Continue reading கீழடி – என் எட்டு கேள்விகளும் தமிழக அரசின் பதிலும்

பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை

காலச்சுவடு நவம்பர் 2019ல் வெளிவந்த கட்டுரை: பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை இன்று பானை ஓடுகள் மிகவும் புகழ் பெற்று விட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஒடுகளைப் பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகள் கிடைப்பது இது முதல்முறை அல்ல. பெயர்கள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதும் இது முதல்முறை அல்ல. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், போன்ற இடங்களிலும் பானையோடுகள் கிடைத்திருக்கின்றன. சொல்லப்போனால் உலகெங்கிலும் பானையோடுகள் தோண்டும் போதெல்லாம் கிடைக்கின்றன. உலகின்… Continue reading பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை

சமணர்களும் சமத்துவமும்

தமிழகத்தில் திராவிடத்தின் சார்பில் எழுதும் பல பேராசிரியர்கள் சோம்பேறிகள், முட்டாள்கள் அல்லது விலை போனவர்கள் என்று நான் ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்? ஒரு முழுச் சோம்பேறிப் பேராசிரியர் வள்ளுவரைத் திராவிடத்தாரகை என்ற அளவில் பேசியிருக்கிறார். அதானால்தான் பெரியார் அவரை ஓரளவு ஏற்றுக் கொண்டாராம். பெரியார் அதிகம் படிக்காதவர். அதுவும் தமிழ் இலக்கியத்தை முழுவதும் வெறுத்தவர். அவர் ஏற்றுக் கொண்டதால் அது திருவள்ளுவருக்குப் பெருமை என்று பெரியார் திடலில் கூலி வேலை பார்க்கும் அடியாட்கள்தாம் சொல்ல… Continue reading சமணர்களும் சமத்துவமும்

பெரியாரியச் சோம்பேறிப் பேராசிரியர்கள் பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஒதுக்கித் தள்ள வேண்டும்!

தமிழன் முதன்முதலில் இயற்கையைத்தான் வழிபட்டான். அதனால் அவனுக்கு மதம் கிடையாது என்று சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். தமிழன் மட்டுமல்ல, உலகெங்கிலும் மனிதன் ஆரம்பகாலங்களில் இயற்கையைத்தான் வழிபட்டான். ஆவி வழிபாடு, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, முன்னோர் வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகள் உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களுக்குச் சொந்தம். அவற்றிலிருந்து வளர்ச்சி அடைந்துதான் மதங்கள் பிறந்தன. வேதங்களும் இயற்கை வழிப்பாட்டை முன்னிறுத்தின. காயத்திரி மந்திரம் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி… Continue reading பெரியாரியச் சோம்பேறிப் பேராசிரியர்கள் பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஒதுக்கித் தள்ள வேண்டும்!

தோண்டக் கிடைக்கும் அதிசயங்கள்!

(சிறுவர்களுக்காக எழுதப்பட்டது. தினமலர் வெளியிடும் 'பட்டம்' இதழில் 4 நவம்பர் 2019ல் வந்தது) நம் எல்லோருக்கும் பூமிக்கு அடியில் என்ன புதைந்து கிடைக்கிறது என்பதை அறிய நிச்சயம் ஆர்வம் இருக்கும். மர்மக்கதைகள் படிப்பவர்களுக்கு எலும்புக் கூடுகள் கிடைக்கலாம் என்று தோன்றும். சிலருக்கு புதையல் கிடைக்கும் என்ற ஆசை இருக்கும். நீங்களும் தோண்டிப் பார்க்கலாம். நண்பர்கள் சிலரைச் சேர்த்துக் கொண்டு தோண்டிப் பார்க்கலாம். தோண்டும் போது என்ன கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியாது. நான் சிறுவனாக இருக்கும் போது… Continue reading தோண்டக் கிடைக்கும் அதிசயங்கள்!