ராமானுஜர் – நம்பிக்கையும் வரலாறும்

(இது நான் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ராமானுஜர் நாடகத்திற்கு எழுதிய முன்னுரை. கிளாசிக் வரிசையில் காலச்சுவடு வெளியீடாக இந்த ஆண்டு (2023) வெளிவந்திருக்கிறது.) நான் இந்திரா பார்த்தசாரதி அவர்களை என் தந்தையைப் போல மதிக்கிறேன். என் தந்தையிடம் எத்துணை மரியாதையும் அன்பும் வைத்திருந்தேனோ அதே மரியாதையையும் அன்பையும் இபா அவர்கள் மீது வைத்திருக்கிறேன். 1999 ஆண்டின் சரஸ்வதி சன்மான் விருது அவருடைய ‘ராமானுஜர்’ நாடகத்திற்கு கிடைத்த செய்தி தெரிந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சி அளவற்றது. அவர் கூடவே… Continue reading ராமானுஜர் – நம்பிக்கையும் வரலாறும்

ஒன்பதாம் திருமொழி – 2

பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்! ஒண் கருவிளைகாள்!வம்பக் களங்கனிகாள்! வண்ணப் பூவை நறுமலர்காள்!ஐம்பெரும் பாதகர்காள்! அணி மாலிருஞ்சோலை நின்றஎம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே? செழிப்பான சோலையில் வாழ்கின்ற குயில்களே! மயில்களே! அழகிய கருவிளைப் பூக்களே! புதிய களாப்பழங்களே! அழகிய நிறத்தையும் மணத்தையும் உடைய காயாம்பூக்களே! ஐந்து பெரும் பாதகர்களே! உங்களுக்கு அழகிய திருமாலிருஞ்சோலையில் இருக்கும் பெருமானுடைய மேனி நிறம் எதற்கு? முதற்பாட்டில் ஆண்டாளுக்கு பார்க்கும் இடம் எல்லாம் சிவப்பாகத் தெரிந்தது. இப்போது கண்ட இடங்களில் எல்லாம்… Continue reading ஒன்பதாம் திருமொழி – 2

ஒன்பதாம் திருமொழி -1

மேகங்கள் ஏதும் பேசவில்லை. ஆண்டாள் செய்வதறியாது சிறிது நேரம் திகைக்கிறார். சுற்றும் முற்றும் பார்க்கிறார். உலகம் அதன் வழியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதர்களை நம்ப முடியாது. ஆனால் ஊர்வன, பறப்பன, அசைவன போன்றவற்றை இன்னும் நம்பலாம். செய்யாமல் போகாவிட்டாலும் செய்வோம் என்று சொல்லி விட்டு ஏமாற்றாது என்று அவர் நினைக்கிறார். அடுத்த இருபது பாடல்களும் ஆண்டாள் காலத்தில் அவரைச் சுற்றியிருந்த இயற்கையின் படைப்புகளுடன் பேசுவதாக அமைந்திருக்கின்றன. தமிழனின் தனிப்படைப்பான அக்கார அடிசிலும் பாட்டில் வருகிறது. தமிழ் மொழியிலோ… Continue reading ஒன்பதாம் திருமொழி -1

எட்டாம் திருமொழி – 2

மின்னாகத்து எழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வர்க்குஎன்னாகத்து இளங்கொங்கை விரும்பித் தாம் நாள் தோறும்பொன்னாகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே மின்னல்களை தேகங்களில் கொண்டு வலம் வருகின்ற மேகங்களே! என் தேகம் கொண்டிருக்கிருக்கும் இள மார்பகங்கள் தன் தேகத்தில் திருமகளைக் கொண்டிருக்கும் அந்த அழகிய மார்பனை விரும்பி அணைக்கவேண்டும் என்று தினமும் எனக்கு ஆசை இருப்பதை. வேங்கடத்தின் உறையும் கரும்பொன் போன்ற தேகம் உடையவனான இறைவனுக்குச் சொல்லுங்கள். ஆண்டாளின் மிக, மிக அழகிய பாடல்களில்… Continue reading எட்டாம் திருமொழி – 2

எட்டாம் திருமொழி -1

இடி போல் அதிரும் வலம்புரிச் சங்கம் ஆண்டாளுக்குப் பதிலளிக்கவில்லை. அதன் மௌனத்தை இன்னும் தாங்க முடியாமல் செய்தது அவர் எதிர்கொண்ட மழைகாலம். மின்னல் அவன் கையில் இருக்கும் சக்கரம் போல் மின்னியது. இப்போது மௌனத்தின் பிடியில் இருக்கும் பாஞ்சஜன்யம் தான் முழக்கமிடும் தருணங்களில் ஏற்படுத்தும் அதிர்வை - இடி நினைவூட்டியது. கூடவே கருமேகங்கள். கண்ணனின் வண்ணம் கொண்டவை. அவனைப் போலவே இருப்பதால் அவை சொல்வதை அவன் கேட்பான் என்ற எண்ணத்தில் ஆண்டாள் பாடுகிறாள். உலக இலக்கியத்திலேயே மனிதர்கள்… Continue reading எட்டாம் திருமொழி -1

ஏழாம் திருமொழி -2

போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டுசேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண்மால் தன்னுடையவாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே! வலம்புரிச்சங்கே! நெடுந்தூரம் நடந்து கங்கை, காவிரி போன்ற ஆறுகளில் நீராடி புண்ணியம் தேடும் துன்பம் உனக்கில்லை. இரட்டை மருத மரங்களாக நின்றவர்களச் (குபேரனின் சிறுவர்களை) சாய்த்துத் தள்ளிய கண்ணனின் கைத்தலத்தில் நீ இருக்கிறாய். அங்கே நீ என்றும் குடியிருப்பாய். (யாரும் உன்னை வெளியேற்ற முடியாது). நீ குடைந்து நீராடும் தீர்த்தங்கள் வேறு. கருணையின் உருவங்களாக இருக்கும்… Continue reading ஏழாம் திருமொழி -2

ஏழாம் திருமொழி -1

ஆண்டாள் விழித்துக் கொள்கிறார். கனவில் நிகழ்ந்தவையெல்லாம் நினைவிற்கு வருகிறது. அது உண்மையா என்று இறைவன் கையில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற வெண் சங்கைக் கேட்கிறார். உரையாசிரியர்கள் கண்ணனின் வாய்ச்சுவை எவ்வாறு இருக்கும் என்பது ஆண்டாளுக்கு நிச்சயம் தெரியும் என்று கருதுகிறார்கள். ஆனால் இப்போது அவன் மாயமாக விட்டான். அவன் வாயை அடிக்கடித் தொடுவது அவனுடைய சங்கு. பக்தர்களிடம் 'இதோ வருகிறேன்' என்ற அழைப்புகளை அதன் மூலமாகத்தான் அவன் விட்டுக் கொண்டிருக்கிறான். ப்ரீதிப்ரகர்ஷமும் அசூயாதிசயமும் ஆண்டாளுக்கு ஏற்பட்டதாம். அதாவது… Continue reading ஏழாம் திருமொழி -1