காஷ்மீர் – சில உண்மைகள்

காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை. இன்று அமித்ஷா பேசியிருப்பதால் மீண்டும் பதிவு செய்கிறேன். காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் மிகப் பெரிய அரசியல் அறிஞர்கள் இருந்தார்கள். சிலர் வழக்கையே பார்த்திராத வழக்கறிஞர்கள். சிலர் கிராமத்திலிருந்து வரும் நெல்லைக் குதிருக்குள் போட்டு அது காலியாகிற வரை காவல் காத்துக்கொண்டிருப்பவர்கள். இடையிடையே உலக அரசியலைப்பற்றிப் பேசுவார்கள். அவர்கள் கஷ்கங்களைச் சொறிந்துகொண்டு ‘இந்த நேரு பார்த்த பார்வைதான் காஷ்மீர்ல இந்த நிலமை இருக்கு. அவன்… Continue reading காஷ்மீர் – சில உண்மைகள்

நாடாளுமன்ற நாடகங்கள்

நாடகம் காட்டியே ஐம்பது வருடங்கள் காலம் தள்ளியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். இப்போது நாடாளுமன்றத்தில் நடந்தேறியிருப்பதும் அப்பட்டமான நாடகம்தான். தமிழ் ஊடகங்களில் இதைப்பற்றி விவாதங்கள் நடக்கும் என்பது உறுதி. நாங்கள் தனித்துவம் படைத்தவர்கள் என்று தங்களைத் தாங்களே திமுகவினர் விதந்தோதிக் கொள்வார்கள் என்பதும் உறுதி. நாடாளுமன்றத்தில் பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க, தமிழ் வாழ்க, பெரியாரியம் வாழ்க எம்ஜியார் வாழ்க, ஜெயலலிதா வாழ்க போன்ற பல கோஷங்கள். இவர்களில் யாரும் தமிழ்மக்கள் வாழ்க என்று… Continue reading நாடாளுமன்ற நாடகங்கள்

Pa. Ranjith’s statement

Pa. Ranjith's statement about eating cows cannot be defended at all. Hindus worship everything in nature. That doesn't mean that they cannot eat what they worship. Nammalwar's famous verse உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன் emphasizes this point. God is food. Food is God. Long ago, Jinnah had told a journalist that Hindu and… Continue reading Pa. Ranjith’s statement

நவீன காலத்திற்கு முந்தையத் தமிழ்ச் சமுதாயம் – சில கேள்விகளும் பதில்களும்

மனிதன் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டதிலிருந்து மிகச் சமீபக் காலம் வரை மிகச் சிலரே செல்வப் பெருக்கில் மிதந்து கொண்டிருந்தனர். பெரும்பான்மையினருக்குக் கிடைத்தது வறுமை மட்டுமே. எனவே பொற்காலம் என்று ஒன்று இருந்திருந்தால் அது என்றைக்கும் மிகச் சிலருக்காகவே இருந்திருக்க வேண்டும். இது கிரேக்கப் பொற்காலத்திற்கும் பொருந்தும். குப்தப் பொற்காலத்திற்கும் பொருந்தும். நமது சோழர்கள் பொற்காலத்திற்கும் பொருந்தும். எல்லா மனிதர்களுக்கும் எட்டக் கூடிய பொற்காலம், குறைந்த பட்சம் பெரும்பான்மையான மனிதர்கள் 'இது எங்கள் பொற்காலம்' என்று சொல்லக்கூடிய காலம்,… Continue reading நவீன காலத்திற்கு முந்தையத் தமிழ்ச் சமுதாயம் – சில கேள்விகளும் பதில்களும்

இந்தி நுழைந்து விடுமா?

புதிய கல்வித் திட்ட வரைவில் மொழிகளைப் பற்றி மிகப் புதிதாக ஏதும் இல்லை. பழைய மும்மொழித் திட்டத்தையே அது பேசுகிறது. மும்மொழித் திட்டம் இன்றுவரை பல மாநிலங்களில் ஏட்டளவிலேயே இருக்கிறது. வடமாநிலங்களில் கிட்டத்தட்ட ஒரு மொழித் திட்டம்தான். சர்வதேச எண்களைக் கூட அவர்கள் மதிப்பதில்லை. மத்திய அரசின் கல்வித்த்திட்டம் என்றைக்கு நடைமுறைப்படுத்தப் படாது என்பது உறுதி. இது எல்லோருக்கும் தெரியும். திராவிடச் சண்டியர்களுக்கும் தெரியும். தெரிந்த பிறகும் திராவிட இயக்கங்களும் உதிரி இயக்கங்களும் ஏன் இப்போது அலறுகின்றன?… Continue reading இந்தி நுழைந்து விடுமா?