திருப்பாவையில் பாவை நோன்பு நோற்பதாக சில ஆய்க்குலத்துச் சிறுமியர் உறுதி கொண்டு இறைவனை முதலில் வணங்கி அவன் புகழ் பாடுகிறார்கள். பின்னால் கூட்டமாகச் சேர்ந்து தோழிகளை எழுப்புகிறார்கள். தோழிகளுடன் நந்தகோபன், யசோதை, நப்பின்னை போன்றவர்களை எழுப்புகிறார்கள். அவர்கள் எழுந்தபின் கண்ணனை எழுப்புகிறார்கள். எழுந்த கண்ணனிடம் எங்களுக்கு பறை கொடு மற்றைய சன்மானங்களைக் கொடு என்கிறார்கள். அவன் கொடுத்ததும் (அல்லது கொடுக்கத் துவங்கியதும்) எங்களுக்கு பறை மட்டும் போதாது. உன்னோடு எப்போது உறவு கொண்டிருக்க வேண்டும், உனக்கு எந்த… Continue reading வங்கக்கடல் கடைந்த!
Month: January 2022
சிற்றம் சிறுகாலே!
ஆண்டாள் தமிழின் முக்கியமான முதல் கவிஞர் அல்லர். சங்க இலக்கியத்தின் பல பெண் கவிஞர்களை - குறிப்பாக மனிதனை 'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று பாடிய அவ்வையாரை - நமக்குத் தெரியும். பக்தி இலக்கியத்திலும் ஆண்டாளுக்கு முன்னோடியாக காரைக்கால் அம்மையார் இருந்திருக்கிறார். ஆண்டாள் 'சிற்றம் சிறுகாலே' பாசுரத்தில் சொல்வதையே ஏறத்தாழ அவரும் சொல்லியிருக்கிறார். 'அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்/அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்- பவர்ச்சடைமேல்/ பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்/ காகாப்போம் எஞ்ஞான்றும்… Continue reading சிற்றம் சிறுகாலே!
கறவைகள் பின் சென்று!
ஆழ்வார்கள் காலத்தில் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உறவு எவ்வாறு இருந்தது? ஆழ்வார்கள் வடமொழி வேதங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்படும் இறைவன்தான் தமிழ்ப் பாசுரங்களின் இறைவன் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். நம்மாழ்வார் சொல்கிறார்: 'இல்லை நுணுக்கங்க ளேயிதனில் பிறிதென்னும்வண்ணம் தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே'. அதாவது 'மிகப் பழமையான வேதங்களில் உன்னை விட நுணுக்கமானது வேறு ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அவை சொன்ன உருவமும் அருவமும் நீதான்'. ஆனால் நம்மாழ்வார் நேதி, நேதி என்று உபநிடங்களில் சொல்லப்படும்… Continue reading கறவைகள் பின் சென்று!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!
திருநெல்வேலி சந்திப்பு வரதராஜப் பெருமாள் கோவில் கட்டப்பட்டு முன்னூறு வருடங்களுக்குள்தான் இருக்கும். அப்போது கோவிலுக்கு முன்னால் இருந்த சன்னிதித் தெருவில் ராயர்கள்தாம் அதிகம் இருந்தார்கள். ஆனால் 'தின்னு கெட்டான் திருநெல்வேலி ராயன்' என்று ஒரு பழமொழி உண்டு. அவர்கள் சாப்பிட்டே தங்கள் சொத்துக்களை அழித்து விட்டார்களாம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராயர்கள் வீடுகளை எல்லாம் சுமார்த்த, வைஷ்ணவ பிராமணர்கள் வாங்கி விட்டார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தெரு முழுவதும் வழக்கறிஞர்கள், பிராமண நிலச்சுவான்தார்கள், ஒன்றிரண்டு வீடுகளில் கோவிலில் பெருமாளுக்குச்… Continue reading கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!
மாலே மணிவண்ணா!
வைணவ உரையாசிரியர்களைப் படிப்பது என்பது மிகவும் கடினமானது. வடமொழிப் பயிற்சி இருந்தால் ஒழிய அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரிவது கடினம். இதைத் தவிர இன்னொரு பிரச்சினையும் எனக்கு இருந்தது. சொன்னவற்றையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள் என்ற எண்ணம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு புத்தகத்தில் மதநூல்களுக்கு உரை எழுதுவது embroidering a piece of rag போன்றது என்று படித்தேன். அதாவது கந்தல் துணியில் பின்னல் வேலை செய்வது. இதை என்… Continue reading மாலே மணிவண்ணா!
ஒருத்தி மகனாய் பிறந்து!
நேற்று தமிழ் இலக்கியத்தில் கண்ணன் எவ்வாறு பேசப்படுகிறான் என்பதைப் பார்த்தோம். இன்று சமஸ்கிருத நூல்களில் கண்ணனைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம். முதன்முதலாக கிருஷ்ணனின் பெயர் சாந்தோக்கிய உபநிஷதத்தில் வருகிறது. அவன் தேவகியின் புதல்வன் என்று குறிப்பிடப்படுகிறான். பாணினியின் அஷ்டத்யாயி வாசுதேவனும் கிருஷ்ணனும் வழிபடப்படுவதைச் சொல்கிறது. பதஞ்சலி தன்னுடைய அஷ்டத்யாயி உரையில் கம்சனைக் கண்ணன் கொன்ற கதையைக் குறிப்பிடுகிறார். மகாபாரதத்தின் கண்ணனையும், கீதை உபதேசம் செய்த கிருஷ்ணனையும் நமக்கு நன்றாகத் தெரியும். மகாபாரத்திற்குப் பின்னால் எழுதப்பட்ட… Continue reading ஒருத்தி மகனாய் பிறந்து!
அன்றிவ் வுலகம் அளந்தாய்!
தமிழருக்கும் கண்ணனுக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடர்பு இருக்கிறது. உதாரணமாக 'வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை/ அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்/ மரம் செல மிதித்த மாஅல் போல' என்று அகநானூறு பேசுகிறது. யமுனை (தொழுனை)க் கரையில் மரத்தழைகளை ஆய்ச்சியர் கட்டிக் கொள்ள கிளையை வளைத்து கண்ணன் (மாஅல்) கொடுத்தான் என்கிறது. இதே போல, 'மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை/ வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்/ மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு'… Continue reading அன்றிவ் வுலகம் அளந்தாய்!
மாரிமலை முழைஞ்சில்!
தமிழ் இலக்கியப் படைப்பாளிகளை புலியை விட சிங்கம்தான் அதிகம் கவர்ந்திருக்கிறது. ஆண்டாள் விதிவிலக்கல்ல. அவள் இவ்வொப்பற்ற பாடலில் சிங்கத்திற்காக நாலரை அடிகளை ஒதுக்கியிருக்கிறார். ஆண்டாள் சிங்கத்தைப் பார்த்திருக்க முடியுமா? அவள் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி சமீபத்தில் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காடுகள் இருந்த/இருக்கின்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் புலிகளும் சிங்கங்களும் ஒரே பரப்பில் இருக்கவே முடியாது என்றும் கூறி விடலாம். சிங்கஙகளுக்கு புல்வெளிகள், ஒரு சில மரங்களே… Continue reading மாரிமலை முழைஞ்சில்!
அங்கண்மா ஞாலத்து!
உலகம் அழகியது. பெரியது. அது தரும் இன்பங்கள் அளவிறந்தாக இருக்கலாம். ஆனால் தனியாக ஒருவர் எவ்வளவு அனுபவித்தாலும், எவ்வளவுதான் தனக்காகச் சேர்ந்தாலும் கடைசியில் தன்னை அறிவதுதான் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவது. ஆண்டாளின் 'அங்கண்மா ஞாலத்து' தன்னை அறிந்து அகங்காரத்தை அழிப்பது பற்றிய பாடல் என்பார் என் தந்தை. தன்னை எப்படி அறிவது? நம்மாழ்வார் சொல்கிறார்: யானே என்னை அறியகிலாதே,/ யானே என் தனதே என்று இருந்தேன்,/யானே நீ என் உடைமையும் நீயே,/ வானே ஏத்தும் எம் வானவர் ஏறே. யானே நீ… Continue reading அங்கண்மா ஞாலத்து!
ஏற்ற கலங்கள்!
ஆண்டாளை ஏன் அப்படியே படிக்கக் கூடாது? தெரியாத வார்த்தைகளை அகராதியில் தேடிக் கொண்டு அவள் என்ன சொல்கிறாள் எனபதை அவளுடைய வார்த்தைகளிலிருந்தே ஏன் புரிந்து கொள்ள முடியாது? நிச்சயம் படிக்கலாம். புரிந்து கொள்ளலாம். இதே கேள்வியை என் தந்தையிடம் நான் கேட்டேன். அவர் ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டாளைப் படிப்பது அவளுக்குச் செய்யும் அவமானம் என்று சொன்னார். 'ஆனால் நான் சொல்வது வைஷ்ணவர்களுக்கு. உன்னைப் போலக் கம்யூனிஸ்டு கழுதைகளுக்கு அல்ல' என்றார். மேலும் சொன்னார்: 'கம்பன் சீதைக்கு தோழியர்… Continue reading ஏற்ற கலங்கள்!