பிராமி – சில கேள்விகள்

பிராமிக்கு சமஸ்கிருதத்தோடு தொடர்பு இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமி என்பது ஓர் எழுத்து வடிவம். அவ்வளவுதான். சமஸ்கிருதம் பிராமி வடிவில் பின்னால்தான் எழுதப்பட்டது. அதிகமான கல்வெட்டுக்கள் முதலில் கிடைத்திருப்பது பிராகிருதத்தில்தான். அசோகக் கல்வெட்டுகளில் அது பயன்படுத்தப்படுவதால் அதன் பெயர் அசோகன் பிராமி என்று ஆகி விட்டது. அசோகன் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்கள் மொழிவளம் மிக்க கல்வெட்டுகள். அன்றைய இந்தியாவைக் குறித்த பல செய்திகள் அவற்றில் கிடைக்கின்றன - சமூக, பொருளாதார, அரசியல், மதங்கள் பற்றிய செய்திகள்.… Continue reading பிராமி – சில கேள்விகள்

Periyar EV Ramasamy — The Man Who Opposed Mahatma Gandhi’s Idea Of India

My article in the Outlook Magazine which has come out with a special issue on Gandhi and Dissent. https://www.outlookindia.com/magazine/story/india-news-periyar-ev-ramasamy-the-man-who-opposed-mahatma-gandhis-idea-of-india/302169 Periyar E.V. Rama­samy must easily be one of the most controversial political personalities of 20th-century India. A people’s man, he spent the last 50 years of his long life practically on the move, haranguing at street… Continue reading Periyar EV Ramasamy — The Man Who Opposed Mahatma Gandhi’s Idea Of India

கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?

கீழடியில் கிடைத்திருப்பவை எல்லாம் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கீழடியில் கிடைத்த கலாச்சாரப் பொருள்களின் காலகட்டம் இன்றைக்கு 2300 ஆண்டுகளிலிருந்து 1900 ஆண்டுகள் வரை என்று அரசு எழுதிய புத்தகமே சொல்கிறது. எனவே கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்தி அவற்றின் காலங்கள் என்ன என்பதை விளக்குவது தொல்லியல் துறையின் கடமை. அதை அவர்கள் விரைவில் நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன். மேலும் கீழடி நகர நாகரிகத்தை குறிக்கிறது என்பதை நீங்கள் ஏன்… Continue reading கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?

My article in The Federal on Keeladi

https://thefederal.com/the-eighth-column/2019/09/24/keeladi-excavation-raises-more-questions-than-answers/ Keeladi Excavation raises more questions than answers A famous Tamil folktale speaks about a prince who is able to draw a life-like portrait of a princess based on a lock of her hair. Keeladi — an archaeological site in Tamil Nadu’s Sivaganga district — today is like the princess of the folktale. Recent findings… Continue reading My article in The Federal on Keeladi

கீழடி – சில முக்கியமான கேள்விகள்

தமிழில் ஒரு கதை உண்டு. அரசகுமாரியின் ஒரு தலைமயிர் இழையை வைத்துக் கொண்டு அரசகுமாரன் ஒருவன் அவர் படத்தை தத்ரூபமாக வரைந்தான் என்று. இன்று கீழடி அந்த அரசகுமாரியின் நிலையில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் அது எப்படியிருந்தது என்பதை தற்காலத் தமிழ் அரசகுமாரர்கள் - வரலாற்றோடோ, அகழ்வாராய்ச்சியோடோ எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்- வரையத் தொடங்கியிருக்கிறார்கள். எந்த லட்சணத்தில் அவை இருக்கின்றன என்பதைச் சொல்லவே வேண்டாம். தனது தரப்பிலிருந்து கீழடியை பற்றி தமிழக அரசு ஒரு புத்தகத்தை… Continue reading கீழடி – சில முக்கியமான கேள்விகள்

தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்

காலச்சுவடு செப்டம்பர் 2019ல் வெளியான கட்டுரை. ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்’ புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. எந்த இனம் பழைய இனம் என்பதை ஆராய்ச்சி செய்த எகிப்திய ஃபாரோ ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் இப்புத்தகத்தில் தருகிறார். இரண்டு பிறந்த குழந்தைகளை ஆடு மேய்ப்பவரிடம் கொடுத்து மொழிப் பரிச்சயமே இல்லாமல் ஃபாரோ வளர்க்கச் சொன்னார். அவர் ஒழுங்காக… Continue reading தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்

திப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது?

திப்பு மறுபடியும் பேசப்படுகிறார். சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையரை வெளியேற்ற அயராது பாடுபட்டவர். மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர். இந்திய வரலாற்றின் மிகப் பெரிய கொடுங்கோலர்களில் ஒருவர். வரலாறு என்ன சொல்கிறது? இதை அறிய நாம் சில கேள்விகளக் கேட்க வேண்டும். பதில்களை வரலாற்றுப் புத்தகங்களில், வரலாறு விட்டுச் சென்ற சுவடுகளில் தேட வேண்டும். திப்புவைப் பற்றி வெள்ளைக்காரர்கள் (பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை சார்ந்தவர்… Continue reading திப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது?