கிஷோர் கே சுவாமி கைது

பேசியதற்காகவும் எழுதியதற்காகவும் கைது செய்யப்படுவதை நான் என்றும் ஆதரித்ததில்லை. பல ஆண்டுகளாக என் நிலைப்பாடு இதுதான். கறுப்பர் கூட்டத்தினரைக் கைது செய்த போதும் அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று நான் கண்டித்தேன். இன்று கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் சாக்கடைத்தனமாகப் பேசியும் எழுதியும் வந்தார் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவர் வன்முறையைத் தூண்டி விடவில்லை. அவர் மீது வழக்குத் தொடரலாம். வழக்கில் நீதி மன்றம் தண்டனை கொடுத்தால் வரவேற்கலாம். மாறாக அவரை கைது… Continue reading கிஷோர் கே சுவாமி கைது

எல்லோரும் அர்ச்சகர்/பூசாரிகள் ஆகலாமா?

என் நிலைப்பாட்டை நான் பல தடவைகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன். அரசு கையில் இருக்கும் கோவில்களில் எல்லாச் சாதியினரும் பெண்களும் திருநங்கையரும் அர்ச்சகர்கள்/பூசாரிகள் ஆகலாம் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால் இதை பெரியாரிய நாஜிகள் போன்றோ திராவிடக் கோமாளிகள் போன்றோ கலப்படக் கம்யூனிஸ்டுகள் போன்றோ, போன்றோ தடித்தனமாக அணுகக் கூடாது. பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்களில் மட்டும் இந்த நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. பிராமணர் அல்லாதார் பூசாரிகளாக இருக்கும் கோவில்களிலும் இதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.உள்ளூர்… Continue reading எல்லோரும் அர்ச்சகர்/பூசாரிகள் ஆகலாமா?

இரண்டு தொடர்கள் – The Family Man -2 and John Adams

The Family Man - 2 ( Amazon Prime) தமிழகத்தில் இருக்கும் பிரிவினை வெறியர்களையும் விடுதலைப் புலிகளின் பணத்தில் அரசியல் நடத்துபவர்களையும் இத்தொடர் உலுப்பி விட்டிருக்கிறது. படுகொலைகள் செய்தே உலகத்தின் கவனத்தை ஈர்த்த விடுதலைப் புலிகள் ஆதாரவாளர்களுக்கு தொடர் பிடிக்காததில் எந்த வியப்பும் இல்லை. விடுதலைப்புலிகளைத் தவறுதலாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்று இங்கு இருக்கும் இந்திய விரோதிகள் அலறுகிறார்கள். புலிகள் இந்திய ராணுவத்தை பற்றிச் செய்த அவதூறுகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இவர்கள் அவை அனைத்தும் உண்மை… Continue reading இரண்டு தொடர்கள் – The Family Man -2 and John Adams

ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்

திமுகவிற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் தமிழன் பிரசன்னாவின் மனைவி நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் எப்போதும் போல பல வதந்திகள் உலாவத் துவங்கி விட்டன. என்னைப் பொறுத்தவரை காவல்துறையினர் விசாரணை செய்து ஒரு முடிவிற்கு வரும்வரை கூச்சல் போடாமல் அமைதியாக இருப்பதைத்தான் நேர்மையானவர்கள் செய்வார்கள். இது போன்ற சம்பவம் பூணூல் போட்ட பிரபலம் ஒருவர் வீட்டில் நடந்திருந்தால் சிலர் பெருங்கூத்தாடியிருப்பார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.… Continue reading ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்

திராவிட இரு மூர்த்திகளும் வரவு செலவு கணக்குகளும்

மிகைப்படுத்துவதை ஒரு கலையாக பல ஆண்டுகள் செய்து கொண்டிருப்பவர்கள் திராவிட முன்னேற்றக்கழகக் கோமாளிகள். உதவாக்கரைகளிலிருந்து சிறிது திறமை கொண்டவர்கள் வரை திராவிட இயக்கத்திற்கு கொடி பிடித்தவர்களையும், பெரியாரின் ஹிட்லரிய இனவெறி பிரச்சாரத்திற்கு துணை போனவர்களையும் உலகமகா மேதைகள் போலவும், நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள் போலவும் சித்தரிப்பதில் இவர்களுக்கு ஈடு கிடையாது. இன்று இவர்களுக்கு துணை போகின்றவர்கள் அரையாணா அறிஞர்கள். நேர்மை என்பதைத் துடைத்து விட்டு அலையும் கயவர்கள். கனவு இல்லம் கிடைக்காதா என்ற பேராசையில் மூன்றாம்தர விளம்பரங்கள்… Continue reading திராவிட இரு மூர்த்திகளும் வரவு செலவு கணக்குகளும்

தமிழ்நாடும் தமிழகமும்

தமிழ்நாடு என்ற பெயர் தமிழ்நாடு என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்ததற்கு முன்பே தமிழன் அறிந்திருந்தது. தமிழனுக்கு என்றும் பிடித்தமான பெயர் அது. செந்தமிழ் நாடு என்னும் போதினிலே என்று பாரதி பாடியிருக்கிறான். நாடு என்றாலே தனி நாடு மட்டும்தான் என்ற பொருள் என்றுமே தமிழில் இருந்ததில்லை. எனவே தமிழ்நாடு என்றால் தனிநாடு என்று வலிந்து பொருள் கொண்டு அதை மாற்ற வேண்டும் என்று கூச்சல் போடுவது முட்டாள்தனம். அதே போல தமிழகம் என்பதும் தமிழனுக்குப் பிடித்த பெயர்.… Continue reading தமிழ்நாடும் தமிழகமும்

ஒன்றியம் என்றால் என்ன?

பெரியார் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் மிகைப்படுத்துபவர்களுக்குப் பஞ்சம் இருந்தது கிடையாது. அன்று ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்தவர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கூச்சலை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்று திமுக மாநிலத்தில் வெற்றி பெற்று விட்டது என்ற திமிரில் பிரிவினைவாதிகளும் பிரிவினைக்கு எதிராக இருந்தாலும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் 'ஒன்றியம்' என்ற சொல்லை வைத்துக் கொண்டு உளறத் துவங்கி விட்டார்கள். இனி ஒன்றியம் என்ற சொல்லைப் பார்ப்போம். 'ஒன்றியம்' அல்லது Union என்ற… Continue reading ஒன்றியம் என்றால் என்ன?

பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?

பத்மா சேஷாத்திரி பள்ளியைக் குறித்து திரு சுப்ரமணியன் சுவாமி ஆளுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் நாட்டின் பிராமணர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதியது: The targetting of Brahmins in the state and the verbal terrorizing of this hapless disorganized community is very much like as happened during the early period of Nazi government led by Hitler in Germany. நான்… Continue reading பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?