நாயகனாய் நின்ற

ஆண்டாள் தான் தமிழ்க் கவிஞர் என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறார். திருப்பாவையில் சங்கத்தமிழ் என்கிறார். நாச்சியார் திருமொழியில் செந்தமிழ் என்றும் தூய தமிழ் என்றும் பாடுகிறார். எனவே அவருடைய கவிதைகளில் அகமும் புறமும் இணைந்து மிகவும் இயற்கையாக இயங்குகின்றன. ஆனால் திருப்பாவையின் அக உலகம் நாச்சியார் திருமொழியின் அக உலகத்திலிருந்து வேறுபட்டது. திருப்பாவையின் பெண்கள் அப்போதுதான் பருவத்தின் வாசற்படியைத் தாண்டியிருப்பவர்கள். அவர்கள் காணும் உலகம் அவர்களுக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும், கேள்விகளையும் தருகின்றன. அவர்கள் செல்லுமிடமெல்லாம் சேர்ந்தே செல்கிறார்கள்.… Continue reading நாயகனாய் நின்ற

நயம் கம்யூனிஸ்டு, கலப்படக் கம்யூனிஸ்டு

. திரு விஜயசங்கர் ராமச்சந்திரன் தன் நீண்ட கட்டுரையில் நான் அருஞ்சொல் இணைய இதழுக்கு எழுதிய கட்டுரைகளுக்கு எதிர்வினைகளாக இவற்றைக் குறிப்பிடுகிறார். கிருஷ்ணன் சாவர்க்கருக்கு ஆதரவான நிலைப்பாடை எடுக்கிறார் என்று கூற முடியாது. ஆனால் நேருவியராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர் சாவர்க்கர் மீது கடுமையான விமரிசனத்தை  முன்வைப்பதைத் தவிர்த்து மழுப்பல், நீட்டல், அனுமானங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்களைச் செய்து மல்லிகைப் பூச்செண்டால் அடிக்கிறார்.கிருஷ்ணன் சாவர்க்கரை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பவர்களையும் தவறாக ஒற்றுமைப்படுத்தி false equivalence செய்கிறார்.எளிமைக்கும் எளிமைப்படுத்துதலுக்கும்… Continue reading நயம் கம்யூனிஸ்டு, கலப்படக் கம்யூனிஸ்டு

எல்லே இளங்கிளியே!

பாடலுக்குள் செல்லும் முன்னர் இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். ஆண்டாளின் பாடல்கள் 'குள்ளக் குளிர்ந்து நீராடச்' செல்லும் முன் நடந்தவற்றை விவரிக்கின்றனவே, தவிர குளியலைப் பற்றி விவரிக்கவில்லை. தோழியரோடு சேர்ந்து நீராடும் மரபு நிச்சயமாகத் தமிழ் மரபுதான். பரிபாடல் தை நீராடலைப் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு குளியலைப் பற்றிச் சொல்கிறது: மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்துபொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவரவர்தீ எரிப்பாலும் செறி தவம் முன் பற்றியோதாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்… Continue reading எல்லே இளங்கிளியே!

உங்கள் புழக்கடை!

ஆண்டாள் ஓர் ஆழ்வாரா? ஆண்டாளை ஆழ்வார்கள் பட்டியலில் சேர்ப்பாரும் இருக்கின்றனர்; சேர்க்காதவரும் இருக்கின்றனர். நம்மாழ்வார் ஆழ்வார்களின் முதல்வராகவும் (குலபதி) ஆண்டாள் தாயாராகவும் வைணவர்களால் மதிக்கப்படுகிறார்கள். ஆண்டாள் பூமாதேவியாகவே கருதப்படுவதால் அவர் ஆழ்வார்களுக்கும் மேலான இடத்தில்தான் இருக்கிறார் என்று சொல்பவரும் உளர். ஆண்டாளையே மையமாக வைத்துப் பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஆழ்வார்திருநகரியிலிருந்து வெளி வந்த கோதை நாச்சியார் தாலாட்டு ஆண்டாளை 'எந்தைதந்தை என்று இயம்பும் பெரியாழ்வார்க்கு மைந்தர் விடாய் தீர்த்த மாதே நீ தாலேலோ பொய்கை முதலாழ்வார்க்கும் பூமகளாய்… Continue reading உங்கள் புழக்கடை!

புள்ளின் வாய் கீண்டானை!

ஆண்டாளின் காலம் என்ன? பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை ஆண்டாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 'ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான்' என்று பெரியாழ்வாரே பாடுகிறார். பெரியாழ்வார் பாண்டியன் கோச்சடையன் காலத்திற் தொடங்கி சீமாறன் சீவல்லபன் என்று அழைக்கப்படும் பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) வாழ்ந்தார் என்று அறிஞர் மு ராகவய்யங்கார் 'ஆழ்வார்கள் காலநிலை' புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆண்டாள் காலநிலையை இப்பாடலில் வரும்… Continue reading புள்ளின் வாய் கீண்டானை!

கனைத்திளங் கற்றெருமை!

ஆண்டாளின் திருப்பாவையில் பால் பெருகி ஓடுகின்றது. ஆனால் அவர் ஒருவர்தான் தமிழ்க் கவிஞர்களில் தமிழ் நாட்டின் பால்வளத்தைப் பேசினார் என்பது இல்லை. கம்பன் நாட்டுப் படலத்தில் ஆண்டாளை ஒத்து 'ஈர நீர் படிந்து இன்னிலத்தே சில/கார்கள் என்ன வரும் கரு மேதிகள்/ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை/தாரை கொள்ள தழைப்பன சாலியே' என்று கன்றுகளை நினைத்து எருமைகள் பால் சொரிவதால் செந்நெற் பயிர்கள் தழைக்கின்றன என்று பாடுகிறார். அவரைப் போன்று திரிகூட ராசப்பக் கவிராயர் சூழ மேதி… Continue reading கனைத்திளங் கற்றெருமை!

கற்றுக் கறவை!

பிராமணப் பெயர்கள் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன என்ற கூற்றில் உண்மையிருக்கிறது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கும்போது பிராமணர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. வைணவப் பிராமணர்கள் தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைக்கத் தயங்குவதில்லை அலர்மேல் மங்கை, ஆண்டாள், நப்பின்னை, குறுங்குடி, செல்வி போன்ற பல பெயர்கள் வைணவப் பெண் குழந்தைகளுக்கு வைக்கப் படுகின்றன. ஆனால் எனக்குத் தெரிந்து பொற்கொடி இல்லை. சுடர்க்கொடி இல்லை. ஏன் என்று தெரியவில்லை. தங்கப் பெண்… Continue reading கற்றுக் கறவை!

நோற்றுச் சுவர்க்கம்!

மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதோ? எண்ணி எண்ணி பல நாள் முயன்று இங்கு இறுதியில் சேர்வோமோ -அட விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே! இது பாரதியின் ஆத்மஜெயம். நம் கவிஞனின் பராசக்திதான் ஆண்டாளின் கண்ணன். அவனும் விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் கலந்திருப்பான். தான் என்ற அகந்தையை வெற்றி பெற வேண்டும் என்று பாரதி பாடுகிறான். ஆண்டாள் வழியைச் சொல்கிறார். எளிய வழி. மண்ணிலேயே கிடைக்கும் சொர்க்கம். பல ஆண்டுகள் தவமிருந்து… Continue reading நோற்றுச் சுவர்க்கம்!

தூமணி மாடத்து!

உறக்கத்திலிருந்து எழுப்புதல் மற்றும் உறக்கத்திலிருந்து எழுதல் பற்றி பல கவிதைகள் உலக இலக்கியத்தில் இருக்கின்றன. ஆனால் நான் படித்தவரை அவற்றில் பெரும்பாலானவை காதலைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் மாற்றி மாற்றிப் பேசுகின்றன. உதாரணமாக ஹவ்ஸ்மன் எழுதிய இக்கவிதையில் தலைப்பு Spring Morning. ஆனால் கவிதையின் வரிகளைப் பாருங்கள்: Half the night he longed to die,/ Now are sown on hill and plain/ Pleasures worth his while to try/ Ere… Continue reading தூமணி மாடத்து!

கீழ்வானம் வெள்ளென்று!

காலை நேரத்தை ஆண்டாளைப் போல பாடல்களினால் போற்றிய தமிழ்க் கவிஞர்கள் மிகச் சிலரே. திருப்பள்ளியெழுச்சி பாடிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் மாணிக்கவாசகரும் உடனே நினைவிற்கு வருவார்கள். ஆனால் அவர்கள் பாடல்களில் அதிகாலையோடு இரண்டறக் கலந்த நெருக்கம் வெளிப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் அவர்கள் காலை ஆண்களின் காலை. பெண்கள் அதிகம் தென்படாத காலை. ஆனால் ஆண்டாளின் காலை பெண்களின் காலை. இளம்பெண்களின் காலை. 'விருத்தைகள்' (வயது முதிர்ந்த பெண்கள்) எழுந்து அவர்களை தடை செய்ய முற்படும் முன்னர்… Continue reading கீழ்வானம் வெள்ளென்று!