ஜெய் ஹிந்த் முழக்கத்தின் வரலாறு

நம் எல்லோருக்கும் ஜெய் ஹிந்த் சொக்கத்தங்கம் சுபாஸ் போஸ் கொண்டு வந்தது என்பது தெரியும். இதற்கும் செண்பராமன் பிள்ளைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது எப்படிப் பிறந்தது என்பதின் வரலாற்றை நான் சுருக்கமாகச் சொல்கிறேன்.

சுபாஸ் போஸ் ஜெர்மனியில் 1941-43 ஆண்டுகளில் இருந்த போது நான்கு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன.
முதலாவது சுபாஸ் போஸை எவ்வாறு அழைப்பது என்ற சர்ச்சை. ராஷ்ரட்ரபதி என்று அழைப்பதா? அல்லது பிரதான்ஜி என்று அழைப்பதா? ஒரு ராணுவ வீரர் ஹமரே நேதா என்று அழைத்தார். அதையே கொஞ்சம் மாற்றி நேதாஜி என்று அவர் அழைக்கபப்ட்டார். நேதாஜி என்ற பட்டம் ஃப்யூரர் டுசே போன்று சர்வாதிகாரத்தை நினைவுறுத்தும் பட்டம் அல்ல. அது மரியாதையும் அன்பிற்கும் உரிய அடையாளம். இன்று நேதாஜி என்றால் சுபாஸ் போஸ் என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். இந்தியக் குழந்தைகளுக்கு. அது அவருடைய தியாகத்திற்கு இந்தியா தந்த பரிசு.

இரண்டாவது கொடி. நமது மூவண்ணக்கொடிதான் இந்திய லீஜனின் கொடியும். ஆனால் நடுவில் ராட்டைக்க்கும் அசோக சக்கரத்திற்கும் பதிலாக பாயும் புலி – ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த திப்புவை நினைவு கூறும் வகையில்.

மூன்றாவ்து தேசிய கீதம். அவர்களது கீதம் ஜனகனமண! ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? சுதந்திர இந்தியா தேர்ந்தெடுத்த கீதம் முதலில் நேதாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டது. வந்தே மாதரம் பாடலை விட சாரே ஜஹா சே அச்ச பாடலை விட இதுதான் உயர்ந்தது என்று அவர் தேர்ந்தெடுத்தார்.
நான்காவது ஒருவரை ஒருவரை வரவேற்கும் முறை. நேதாஜி கூடவே இருந்த அபித் ஹாசன் சொல்வதைக் கேளுங்கள். “One day I heard some Rajput soldiers greet each other with Jai Ramji ki – a phrase that had a musical quality. I changed it to Jai Hindustan Ki. This did not quite work, but the abbreviated form Jai Hind sounded perfect, and Netaji enthusiastically embraced it as India’s national greeting.

எனவே ஜெய்ஹிந்த் என்பது விடுதலையின் முழக்கம் மட்டுமல்ல. இந்து முஸ்லிம் ஒற்றுமையின் முழக்கம்.

நாம் இன்று ஜனகண மண பாடும் போதெல்லாம், ஜெய்ஹிந்த் என்று சொல்லும் போதெல்லாம் போஸ் போன்றவர்கள் இந்தியாவிற்காக கண்ட கனவு நினைவாகி வருகிறதா அல்லது பொய்த்துப் போனதா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பெரியார் தலைமையில் இயங்கிய நீதிக் கட்சி வெள்ளைக்காரர்களின் காலணிகளைத் துடைத்து வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திரு ஸ்டாலின் நாங்கள் நீதிக் கட்சியின் பாதையில்தான் செல்கிறோம் என்று சொன்னது தற்செயல் அல்ல. நீதிக் கட்சிதான் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தையும் திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தையும் கொண்டு வந்தது. அவர்கள் வழித்தோன்றல்களான திமுகவினருக்கு ஜெய்ஹிந்த் பிடிக்காததில் எந்த வியப்பும் இல்லை.

போஸ் 1943ல் சிங்கப்பூர் சென்றது அது INAயின் (இந்திய தேசிய ராணுவம்) முழக்கமாக மாறியது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் நமது தலைவர்கள் சிறையிலிருந்து வந்ததும் ஜெய்ஹிந்த் முழக்கம் சூடு பிடித்தது. இந்திய தேசிய ராணுவ வீரர்களைக் கைது செய்து அவர்கள் மீது தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட போது தேசமெங்கும் அது ஒலித்தது.

ஆனால் காந்தி தெளிவாக இருந்தார். இது ராஜ்மோகன் காந்தி சொல்வது:

Mahatma Gandhi opined that forcing even one person to shout Jai Hind is like putting a nail into the coffin of ‘Swaraj’. In his view, such act of forcing people to shout Jai Hind is like once again killing millions of Indians who could not speak,” he said.

நேருதான் அதை விடுதலை பெற்ற இந்தியாவின் முழக்கமாக மாற்றினார்.

The most famous speech in independent India, Jawahar Lal Nehru’s ‘Tryst with Destiny’, uttered at midnight on August 15, 1947, also ended with the salutation ‘Jai Hind‘. Nehru repeated this from the ramparts of the Red Fort the next day too, which was unusual for a slogan that had been coined just a few years earlier.

நாமும் காந்தி சொன்னதையேதான் சொல்கிறோம். யாரையும் ஜெய்ஹிந்த் என்று சொல்ல வற்புறுத்த முடியாது – அரசுப் பொறுப்பில் இருப்பவர்களைத் தவிர. அதே நேரத்தில் ஜெய்ஹிந்த் முழக்கத்தை அவமானப்படுத்துபவர்களை விமரிசிக்காமலும் இருக்க முடியாது.

மேலும் ஜெய்ஹிந்த் இந்தியாவிற்காக போஸ் தலைமையில் உயிர் விட்ட பல தமிழர்களின் முழக்கம். ஜெய்ஹிந்த் முழக்கத்தை அவமானப்படுத்துவது தமிழர்களை அதுவும் விடுதலைப்போர் தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். திமுகவிற்கு அப்படிச் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் காங்கிரசிற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் பிரச்சினை இல்லை என்றால் அவர்கள் திராவிட அடிமைத்தனத்தில் ஊறி மரத்துப் போய் விட்டார்கள் என்றுதான் பொருள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s