ஒன்றியம் என்றால் என்ன?

பெரியார் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் மிகைப்படுத்துபவர்களுக்குப் பஞ்சம் இருந்தது கிடையாது. அன்று ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்தவர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கூச்சலை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்று திமுக மாநிலத்தில் வெற்றி பெற்று விட்டது என்ற திமிரில் பிரிவினைவாதிகளும் பிரிவினைக்கு எதிராக இருந்தாலும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் ‘ஒன்றியம்’ என்ற சொல்லை வைத்துக் கொண்டு உளறத் துவங்கி விட்டார்கள்.

இனி ஒன்றியம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

 1. ‘ஒன்றியம்’ அல்லது Union என்ற சொல் கெட்ட வார்த்தை அல்ல. நம்மிடம் Union Public Service Commission இருக்கிறது. Union territories இருக்கின்றன. வருடா வருடம் மத்திய அரசு நமக்குத் தருவது Union Budget. எனவே மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால், பூமி அதிர்ச்சி ஏற்பட்டு விடாது. திராவிடக் குஞ்சுகள் புளகாங்கிதம் அடையலாம். இதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
 2. ஆனால் இதை வைத்துக் கொண்டு இந்தியா தேசிய இனங்களின் கூட்டு என்று புலம்புவது நகைப்பிற்குரியது. தமிழ் தேசிய இனம், இந்தி தேசிய இனம் என்று ஒரு இனமும் கிடையாது. தமிழ்நாட்டில் இன்று இருப்பதில் 40 சதவீதம் பிற மொழி பேசுபவர்கள்.
 3. ஒன்றியம் என்று அலறுவது Dravidian Stock என்று உளறுவது போல்தான். Dravidian Stock, திராவிட இனம் என்ற சொற்றொடரே வரலாற்றிற்கும் அறிவியலுக்கும் எதிரானது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பிடித்துக் கொண்டு தொங்குவதில் எந்த வியப்பும் இல்லை. இவர்கள் ஹிட்லரின் இனவெறிக் கொள்கையை இந்தியாவில் தொடர்ந்து பரப்பிய பெரியாரின் சீடர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அடிப்படையில் இனவாதிகள். ஆனால் இனவாதம் தமிழ்நாட்டில் மட்டுமே செல்லுபடியாகும். இங்கு இருக்கும் பிறமொழி பேசும் பிராமணர் அல்லாதவர்கள் தங்குதடை இல்லாமல் அரசியல் செய்ய திராவிடம் பயன்படலாம். ஆனால் இவர்கள் திராவிட இனம் என்று கேரளாவிலோ, ஆந்திராவிலோ, தெலிங்கானாவிலோ அல்லது கர்நாடகாவிலோ சொன்னால் வாரியலை எடுத்துக் கொண்டு வருவார்கள். திராவிட இனம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது போலத்தான் ஒன்றியம் என்று சொல்லி ஏதோ புரட்சி நிகழ்ந்து விட்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுவது. இவர்கள் ஒன்றியம் என்று சொல்லி விட்டதனால் இந்திய அரசியல் சட்டம் மாறப் போவதில்லை. மத்திய அரசிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
 4. நமது அரசியல் சாசனம் இவ்வாறு சொல்கிறது:

India, that is Bharat, shall be a Union of States. The States and the territories thereof shall be as specified in the First Schedule. The territory of India shall comprise—
(a)the territories of the States; (b) the Union territories specified in the First Schedule; and (c) such other territories as may be acquired.

இதில் என்று நிலைத்து நிற்பது இந்தியா மட்டும்தான். மற்றவை எல்லாம் மாறக் கூடியவை. தமிழ்நாடு என்ற மாநிலமே அரசியல் சாசனம் பிறந்த 1949ல் இல்லை என்பதை திராவிடக் கோமாளிகள் மறந்து விடுகிறார்கள். அன்று இருந்தது மதராஸ் மாநிலம். அது மாற்றப்பட்டு தமிழ்நாடானது 1954ல்தான். தமிழ்நாடு என்பது இந்திய யூனியனால் உருவாக்கப்பட்டது. இந்திய யூனியன் அல்லது இந்திய ஒன்றியம் நினைத்தால் தமிழ்நாட்டின் வரைபடத்தை மாற்றி அமைக்கவும் முடியும். இதுதான் சமீபத்தில் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு நடந்தது. இந்திய ஒன்றியம் நினைத்தால் கோவையைச் சுற்றியிருக்கும் நிலப்பரப்பையும் மாவட்டங்களையும் தமிழ்நாட்டிலிருந்து பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க முடியும். அப்படி அறிவிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது மக்களாட்சி முறைக்கு எதிரானது. இதே போன்று, இந்தியாவிற்கும் இந்திய அரசியல் சட்டத்திற்கும் எதிராக அலறுவதும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இந்திய மக்களுக்கும் எதிரானது என்பதைக் கோமாளிகள் உணர வேண்டும்.

5. ஒன்றியம் என்பதை வலியுறுத்தி, இந்தியா தேசிய இனங்களின் ஒன்றியம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அது பிரிவினைப் பாதையில் மக்கள் செல்ல வழிவகுக்கும் என்று நினைப்பவர்களும் பலர் தமிழ்நாட்டில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா எப்படிப் பிரியும்?

1. இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் தாங்களாகவே பிரிய முடிவு எடுக்கும் போது.

2. போர் மூண்டு இந்தியாவைப் பிரிக்க பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் முயன்று வெற்றியடையும் போது.

3. உள்நாட்டுப் போர் மூண்டு மாநிலங்கள் குழுக்களாகச் சேர்ந்து தனியரசு அமைக்க முயலும் போது.

4. மாநிலங்கள் தனித்து நின்று போரிட்டு இந்தியாவிலிருந்து பிரியும் முயற்சியில் வெற்றி அடையும் போது.

5. அமைதியாக பிரிவோம் என்ற முடிவை எல்லா மாநிலங்களும் எடுக்கும் போது.

இவற்றை ஒன்றொன்றாக ஆராய்வோம்.

1. இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் தாங்களாகவே பிரிய முடிவு எடுக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் வளர்ச்சி பெற்றதே அவை இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதால்தான். இது எல்லா மாநிலங்களுக்கும் தெரியும்.

2. போர் மூண்டால் இந்தியாவின் ஒற்றுமை வலுவடைய வாய்ப்புக்கள் இருக்கின்றனவே தவிர பிரிவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. சீனாவோ, பாகிஸ்தானோ போரில் (சண்டைகளில் அல்ல) வெற்றி பெற்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய வெற்றி ஒரு அணு ஆயுதப் போரிற்கு பின்னால்தான் நிகழ முடியும். அணு ஆயுதப் போரிற்குப் பின்னால் பிரிப்பதற்கு அதிகம் ஏதும் இருக்காது.

3. குழுக்களாகச் சேர்ந்து தனியரசு அதாவது திராவிட நாடு போன்ற ஒன்றை டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கோமாளிகள் அமைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று. உள்நாட்டுப் போர் மூளும் சாத்தியம் இல்லை. அப்படியே போர் மூண்டாலும் அது பேரழிவிற்குத்தான் கொண்டு சேர்க்கும். அது நடக்கும் போது முள்ளி வாய்க்கால் பிள்ளை விளையாட்டாகத் தெரியும். வெளிநாட்டு உதவியில்லாமல் இந்தியாவில் உள்நாட்டுப் போர் மூள்வது முடியாத காரியம். போருக்கு உதவி செய்பவர்கள் ஜீவகாருண்யத்திற்காகச் செய்ய மாட்டார்கள் என்பது திராவிட, தனித்தமிழ் கோமாளிளுக்கே உறைக்கும் என்று நம்புகிறேன்.

4. இந்தியாவின் மீது உரிமை எல்லா இந்தியர்களுக்கும் இருக்கிறது. எனக்கு தில்லி மீதும் தமிழ்நாடு மீதும் உத்தரப் பிரதேசம் மீதும் உரிமை இருக்கிறது. எனவே என்னுடைய உரிமை குறைக்கப்படுவதை என்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டும். தமிழ்நாடு தனியாகப் பிரியலாம் என்ற முடிவை பெரும்பாலான இந்தியர்கள் சம்மதம் தந்தால்தான் எடுக்க முடியும். அது நடைபெறும் என்று நினைப்பது கனவு. மேலும் தமிழ்நாடு தனித்து நின்று போர் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போரில் இந்தியாதான் வெற்றி பெறும். தமிழகம் ஒருவேளை கிடைத்தாலும் அது ஆதிச்ச நல்லூர் தமிழகமாகத்தான் இருக்கும். கற்காலத்திலிருந்து திரும்பத் துவங்க வேண்டியதுதான். துவங்கினாலும் தொடர்ந்து போர் மேகங்கள் சுழ்ந்திருக்கும் நாடாகத்தான் அது இருக்கும். முதலீடுகள் அருகி விடும்.

5. அமைதியாக எல்லா மாநிலங்களும் பிரிவோம் என்ற முடிவை எடுக்கும் என்பதற்கு நடைமுறையில் இன்று சாத்தியம் இல்லை. நாளையும் இல்லை. உலகம் ஒன்றாகுமே தவிர துண்டு துண்டுகளாக ஆகி விடாது. மக்கள் வட்டம் பெரிதாகுமே தவிர, சிறு சிறு வட்டங்களாகச் சுருங்கி விடாது.

மாநிலங்கள் மாநிலங்களாக, அதிக உரிமைகளோடு இருக்க வேண்டும் என்று கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தேசிய இனம், திராவிட இனம், ஒன்றியம் என்று உளறிக் கொண்டிருந்தால் அது பிரிவினை வாதத்தை கொல்லைபுறம் வழியாகக் கொண்டு வருவது என்றுதான் இந்தியாவின் மீது நேசம் கொண்டவர்கள் நினைப்பார்கள்.

5 thoughts on “ஒன்றியம் என்றால் என்ன?”

 1. Ambedkar made this amply clear in his speech in the Constituent Assembly on the Draft Constitution.

  “Some critics have taken objection to the description of India in Article 1 of the Draft Constitution as a Union of States. It is said that the correct phraseology should be a Federation of States. It is true that South Africa which is a unitary State is described as a Union. But Canada which is a Federation is also called a Union. Thus the description of India as a Union, though its constitution is Federal, does no violence to usage.

  But what is important is that the use of the word Union is deliberate. I do not know why the word ‘Union’ was used in the Canadian Constitution. But I can tell you why the Drafting Committee has used it. The Drafting Committee wanted to make it clear that though India was to be a federation, the Federation was not the result of an agreement by the States to join in a Federation and that the Federation not being the result of an agreement no State has the right to secede from it.

  The Federation is a Union because it is indestructible. Though the country and the people may be divided into different States for convenience of administration the country is one integral whole, its people a single people living under a single imperium derived from a single source. The Americans had to wage a civil war to establish that the States have no right of secession and that their Federation was indestructible. The Drafting Committee thought that it was better to make it clear at the outset rather than to leave it to speculation or to dispute.”

  Like

   1. Oh. Thank You. I have managed to miss it. I will search for it.

    I just translated the above quoted section and put it up in my blog- for what it’s worth.
    It is just amusing that the neo-proponents of the word who intend to use because they assume it furthers some quasi-secessionist undertone completely miss the fact that that is precisely what Ambedkar resisted in choosing this word.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s