பிராமி – சில கேள்விகள்

பிராமிக்கு சமஸ்கிருதத்தோடு தொடர்பு இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமி என்பது ஓர் எழுத்து வடிவம். அவ்வளவுதான். சமஸ்கிருதம் பிராமி வடிவில் பின்னால்தான் எழுதப்பட்டது. அதிகமான கல்வெட்டுக்கள் முதலில் கிடைத்திருப்பது பிராகிருதத்தில்தான். அசோகக் கல்வெட்டுகளில் அது பயன்படுத்தப்படுவதால் அதன் பெயர் அசோகன் பிராமி என்று ஆகி விட்டது. அசோகன் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்கள் மொழிவளம் மிக்க கல்வெட்டுகள். அன்றைய இந்தியாவைக் குறித்த பல செய்திகள் அவற்றில் கிடைக்கின்றன – சமூக, பொருளாதார, அரசியல், மதங்கள் பற்றிய செய்திகள். இவ்வளவு அழகாக மொழியை வெளிப்படுத்தும் எழுத்து வடிவம் அசோகர் காலத்தில் உடனே தோன்றி செயல்பட்டிருக்க முடியாது என்பது வெளிப்படை.
மௌரிய அரசு வட இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது இங்கு வந்த மெகஸ்தனிஸ் இந்தியர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று சொன்னதனால் இங்கு எழுத்து வடிவம் இல்லை என்று சொல்வது சரியல்ல. மெகஸ்தனிஸ் சொன்னது சாதாரண மக்களைப் பற்றி. அவரே மக்களில் ஏழுவகைப் பிரிவுகளைக் கூறுகிறார். அதில் முதல் பிரிவான தத்துவவாதிகளைப் பற்றிப் பேசும் போது அவர்கள் அரசர்களுக்கு தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். எனவே மௌரியர் காலத்திலும் எழுத்து இருந்திருக்க வேண்டும்.(Any philosopher who may have committed any suggestion to writing – Strabo – of the seven classes among Indians – page 83 McCrindle’s translation, 1926 Calcutta edition)

மெகஸ்தனிஸ் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவர் சொன்னதாக மற்றவர்கள் எழுதியிருப்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது அவரது ‘இண்டிகா’ புத்தகம் கிடைக்கவில்லை. அவரே தங்கத்தைத் தோண்டும் எறும்புகள் இந்தியாவில் இருக்கின்றன என்று சொல்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இனி கேள்விகளுக்கு வருவோம்.

பிராமி எங்கு பிறந்தது?

பிராமி மொழிக்கு மூதாதைகள் செமெடிக் மொழிகள் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சொல்லுகிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் கூட அது இந்தியாவிற்கு எட்டாம் நூற்றாண்டு BCEல் வந்தது என்று நம்புகிறார்கள். ( (They) are known to believe that Brahmi was introduced in India in the 7th or 8th century
BC(cf. T.W. Rhys Davids,Buddhist India , 1903) இத கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழத்தின் பேராசிரியர் திலீப் சக்ரவர்த்தி சொல்வது. பிராமி சிந்துச் சமவெளி நாகரிக மொழியின் தொடர்ச்சி என்றும் இந்தியாவில் பிறந்தது என்றும் அவர் நினைக்கிறார்

ஏன் அவ்வாறு நினைக்கிறார்?

அவர் சொல்வதையே கேட்கலாம்.

My opinion is that the general problem of the rise of Brahmi script should not be disassociated from the picture of archaeological developments at the dawn of the historical period. The idea that the development of the Brahmi is rooted in the earlier Indus script seems to receive support from two developments. First, the chronological gap between the end of the Indus civilization and the early historic period of the Ganga plain has considerably narrowed. On the one hand, the terminal date of the Indus civilization has comedown to the 13th century
BC, as the occurrence of Indus seals from the Kassite period at Nippurand in Bahrain, and some relevant radiocarbon dates from Harappa, among other places,indicate. On the other hand, the date of the NBP,the most important pottery marker of the Gangetic valley early historic period, is now raised to c. 800 BC, if not somewhat earlier.

அவர் மேலும் சொல்கிறார்:
Looked at from these points of view, the postulated appearance of the Brahmi script around 800 BC is quite probable in at least parts of the Ganga plain, although there is no direct archaeological evidence yet. அதாவது பிராமி கங்கைச் சமவெளியில் 8 நூற்றாண்டு BCEல் தோன்றியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சக்ரவர்த்தி கருதுகிறார்.

பொருந்தலில் கிடைத்த பானைக் கீறலைப் பற்றி வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள்?

சக்ரவர்த்தி அது 5ம் நூற்றாண்டு BCE ஐச் சேர்ந்ததுதான் என்று கருதுகிறார் என்பது உண்மை. ஆனால் அவர் அது கங்கைச் சமவெளியில் பிறந்த பிராமியைத் தழுவியதாகத்தான் கருதுகிறார். அவர் சொல்வது இது: There is no point in forgetting that what is called Tamil-Brahmi is essentially Brahmi script adopted to facilitate the writing of Tamil. அவர் பிராமி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லவில்லை.

சக்ரவர்த்தி சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதையோ அல்லது அங்குள்ளவர்கள் தொல் திராவிட மொழியைப் பேசினார்கள் என்பதையோ முழுமையாக நிராகரிப்பவர். தமிழர்கள்தாம் சிந்துச் சமவெளி மக்கள் என்ற கருத்தை கட்டுக்கதை என்று சொல்பவர். மொழியின் அடிப்படையில் ஒரு நாகரிகம் கட்டமைக்க முடியாது என்று கருதுபவர். ஆரிய, திராவிடப் பிரிவினையை சாடுபவர்.

மகாதேவன் சொல்வது இது: Supposing a large number of carbon-datings are available from various sites, which will take us to the period of the Mauryas and even the Nandas, we can consider. But to push [the date of the origin of the Tamil-Brahmi script] a couple of centuries earlier with a single carbon-dating is not acceptable because chances of contamination and error are there.” அதாவது ஒரே ஆதாரத்தை வைத்துக் கொண்டு சாமியாடக் கூடாது, பல ஆதாரங்கள் வேண்டும் என்கிறார்.

சுப்பராயுலு சொல்வது இது: The date of the Tamil-Brahmi script found at Porunthal, on palaeographic basis, could be put only in the first century BCE/CE and “cannot be pushed back to such an early date [490 BCE].” The three letters “va-y-ra” found on the ring-stands were developed and belonged to the second stage of Mr. Mahadevan’s dating of Tamil-Brahmi. “It is premature to revise the Tamil-Brahmi dating on the basis of a single carbon date, which is governed by complicated statistical probabilities,” Dr. Subbarayalu said. The word “vayra” is an adapted name from the Prakrit or Sanskrit “vajra” and it is difficult to explain convincingly the generally dominant Prakrit element in Tamil-Brahmi inscriptions found on rock and potsherds if Tamil-Brahmi is indigenous and pre-Asokan and transported from south India to north India, he says. இதுதான் உண்மையான வரலாற்றாசிரியரின் அணுகுமுறை. அவர் பானையில் எழுதியிருப்பது காலத்தில் பிந்தையது என்கிறார். தமிழில் இவ்வளவு பிராகிருதக் கலப்பு இருக்கும் போது பிராமி எழுத்து தமிழ்நாட்டில் பிறந்தது என்று சொல்வது சரியாக இருக்காது என்றும் சொல்கிறார்.

இது பேராசிரியர் வாரியர் சொல்வது: Its importance lay in the fact that while the Asokan-Brahmi began in the 3rd century BCE, the Porunthal script could be dated to 5th century BCE, he says. “But we cannot argue that Brahmi was invented by the southern people. That is a different issue.” அதாவது ஐந்தாம் நூற்றாண்டு என்றாலும் பிராமி தெற்கில் இருப்பவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது என்கிறார்.

இது பேராசிரியர் ஃபால்க் சொல்வது: Misinterpreting megalithic logograms for Brāhmī writing at Porunthal he “reads” va-y-ra (“meaning diamond”) on a ring-stand 14C-dated to 490 B. C. by an American laboratory. The non-letters put aside, the presence of stirrups in the same tomb sounds suspicious too. அவர் அது பிராமி எழுத்தே இல்லை என்கிறார்.

எனவே பொருந்தலில் கிடைத்ததை வைத்துக் கொண்டு முக்கியமான வல்லுனர்கள் யாரும் பிராமி தமிழ்நாட்டில் தோன்றியது என்று சொல்லவில்லை. ஒரு பானைத்துண்டை வைத்துக் கொண்டு அதுவும் பிராகிருதமொழியின் தமிழாக்கம் போன்ற சொல் ஒன்றை வைத்துக் கொண்டு, இம்முடிவிற்கு வர முடியாது என்கிறார்கள்.

சரி, இப்போதுதான் கீழடி சொல்கிறதே, அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?

கீழடியில் கரிமப்பகுப்பாய்வு செய்திருக்கப்பட்டிருப்பது ஒரு கரித்துண்டில். தமிழ் பிராமி எழுத்துக்கள் பதித்த பானைத்துண்டுகள் அதே தளத்தில் கிடைத்தன என்று அரசு வெளியீடு சொல்லவில்லை. அதே தளத்தில் இருந்தாலும் தளத்தின் காலம் 600 BCEல் இருந்து 300 BCE வரை என்று தமிழக அகழ்வாராய்ச்சியாளர்களே சொல்லியிருக்கிறார்கள். எனவே பானைத்துண்டு ஆறாம் நூற்றாண்டு என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆறாம் நூற்றாண்டு என்பது உறுதியாகி விட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?

நிச்சயம் மாட்டேன். ஓரிரு சான்றுகள் உதவா. மகாதேவன் சொன்னது போல நிறையச் சான்றுகள் நிறைய இடங்களில் இருந்து வேண்டும். பானைகளில் இருக்கும் பெயர்களை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வரமுடியாது. மொழி வளம் மிக்க கல்வெட்டுகள் வேண்டும்.

ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள்?

என்னுடைய கல்வெட்டுகளைப் பற்றிய பதிவிற்குக் காத்திருங்கள்.

பி ஏ கிருஷ்ணன்

https://www.academia.edu/40197879/Dilip_K._Chakrabarti_1_

https://www.thehindu.com/news/national/tamil-nadu/palani-excavation-triggers-fresh-debate/article2408091.ece

https://www.academia.edu/11754083/Owners_graffiti_on_pottery_from_Tissamaharama

1 thought on “பிராமி – சில கேள்விகள்”

  1. பிராமியில் தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் “எ””ஒ” இல்ல்லை. ஆனால் அனுராதபுரம் மற்றும் தமிழக பானை கீரல் உருகளை எழுத்தாய் படிப்போர் சொல்வது பல வடமொழி சொற்கள் வட மொழி வர்க்க எழுத்தோடு உள்ளது. தமிழில் உயிரில் இவ்வெழுத்துக்கள் மாறியது 18ம் நூற்றாஆண்டில் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) பின் தான் என தெள்ளிவாகிறது.

    Like

Leave a comment