கமல் என்ன சொல்கிறார்?

அரசியலைப் பொறுத்த அளவில் என்னுடைய பல நிலைப்பாடுகள் கமலின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவை. அது அவருக்கும் தெரியும். நான் அவருக்கு அரசியல் ஆலோசனைகள் சொல்ல எந்தத் தகுதியும் இல்லாதவன் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். நானும் அவரும் பேசிய நேரத்தில் தனிப்பட்ட விஷயங்களே எண்பது சதவீதத்தை எடுத்துக் கொண்டன.

1. தமிழில் இன்னும் தெளிவாகப் பேசவேண்டும், ஆங்கிலத்தில் பேசுவது போலப் பேசவேண்டும் என்று நண்பர்கள் சொல்கிறார்கள் என்றேன்.
‘நான் முன்னால் விடுகதைகளில் பேசியதற்கு காரணங்கள் இருந்தன. இப்போது கூடியவரையில் தெளிவாகப் பேச முயற்சி செய்கிறேன். இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள்,’ என்றார். ‘மக்கள் நெருக்கமாக உணர்வதற்கு, தெளிவு மட்டும் அவசியம் அல்ல என்பதற்கு எம்ஜியார் ஓர் உதாரணம். மக்கள் நெருக்கமாக இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டம் வருகிறது,’ என்றார். சேலம் நிகழ்ச்சி ஒன்றின் விடியோவைப் பார்த்தேன். நல்ல கூட்டம். ‘அவர்கள் ஓட்டுப் போடுவார்களா என்பது தேர்தலில்தான் தெரியும்,’ என்றார்.

2. ‘நேர்மை என்பது வாயால் சொன்னால் போதாது. செயலில் காட்ட வேண்டும் என்றேன். அதற்கு அவர் ‘நான் இன்றுவரை எந்தப் பதவியிலும் இல்லை. என்னால் எவ்வாறு செயலில் காட்ட முடியும்?’ என்ற கேள்வியைக் கேட்டார். ‘கட்சி நிதியைப் பொறுத்தவரையில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். எல்லோரையும் மேற்பார்வை செய்வது கடினம் என்றாலும், கட்சிக்கு நிதியை மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் காசோலை மூலமாகவோ, அல்லது நேரடி மாற்றம் போன்ற வங்கிப் பரிமாற்றங்களின் மூலமாகவோதான் வாங்குகிறோம்,’ என்றார். ‘வளரும் கட்சி என்பதால் இன்னும் பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. எனக்குக் கட்சியில் இருந்து பணம் தேவையில்லை. பணத்தேவைக்காக கட்சியில் சேர்பவர்களை அடையாளம் கண்டு கட்சியிலிருந்து நீக்குவோம்,’ என்றார்.

3. திராவிடம் என்பது தாகூர் சொன்ன திராவிடம் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக அது இருக்கும் என்றார். இனத்தைப் பொறுத்த அளவில், அவருடைய திராவிடர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். ஆனால் ‘எனக்கு இப்போது தமிழ்நாடுதான் முக்கியம். தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். தமிழ்நாட்டை நேர்மையான, ஊழல்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டிய தேவை உடனடியானது,’ என்றார்.

4. தலித், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சிகள், அமைப்புகளோடு கூட்டுச் சேர்வதின் அவசியத்தை அவர் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மிகவும் கடினமானவை என்கிறார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு குலாவுவதை நிறுத்திக் கொண்டால் நடக்கும் என்றார்.

5. `இன்னொரு தனிமனிதக் கட்சியாக மக்கள் நீதி மய்யம் மாறக் கூடாது என்று அவர் உண்மையாக நினைக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் இப்போது அவர் ஒருவர்தான் கட்சியில் மக்களைக் கவரக் கூடிய தலைவராக இருக்கிறார். சில பெயர்களைச் சொன்னார். அடுத்த தலைமுறையினர். அவர்கள் கட்சியில் சேர்ந்தால் நிச்சயம் வரவேற்பேன் என்றார்.

6. பாலியல் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை அவை பெரும்பாலும் இரண்டு பேர்களுக்கு இடையில் சாட்சியங்கள் இல்லாமல் நடக்கின்றன என்பதால் குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டப்பட்டவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். ‘என்னுடைய உறவுகள் உறவு வைத்துக் கொண்டவர்களின் முழு விருப்பத்துடன்தான் நிகழ்ந்திருக்கின்றன,’ என்றார்.

7. பொது இடங்களை நாம் மிகவும் அசுத்தமாக வைத்துக் கொண்டிருப்பதைப் பற்றி மிகுந்த வருத்தம் தெரிவித்தார். மனிதக் கழிவுகள் ஆறாக ஓடும் சாக்கடை ஒன்று தமிழ்நாட்டு நகரம் ஒன்றின் மத்தியில் இருப்பதைச் சொன்னார். நமக்கு இதைச் சரிசெய்வதற்கு நிதி இல்லை என்பதை விட மனம் இல்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்றார்.

8. மய்யம் என்பது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. காந்தியின் கண்டுபிடிப்பு, புத்தரின் கண்டுபிடிப்பு என்றார். ‘மய்யம் என்றால் நடு சென்டர் அல்ல. மய்யம் என்பதற்குப் பொருள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு எது மையமாக இருக்குமோ அதைச் சென்றடைவதுதான் என்றார்.

9. நான் பகுத்தறிவு பேசிக் கொண்டிருப்பதால் என் கட்சியும் அதைப் பேச வேண்டிய கட்டாயம் இல்லை என்றார். மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் கட்சி தலையிடாது என்றார்.

நேரம் சென்றதே தெரியவில்லை. எனக்கு விமானநிலையத்திற்கு என் மகனை வரவேற்கச் செல்ல வேண்டியிருந்தது. மறுபடியும் சென்னையில் சந்திப்போம்.

5 thoughts on “கமல் என்ன சொல்கிறார்?”

  1. Dear PAK,
    Good AN Dear Ananth ,
    Good AN!
    How are you ?
    Nice feedback .
    Kamal needs these kind of intellectual supports in building his new creation.
    His assertive voice ‘நேர்மை’on the TV screen still lingers in my ears .
    When you meet him next you can just refer me to him as a soul who advised him
    to enter politics a few months earlier than he launched his outfit – which he denied then !!
    Cheers
    Ramalingam K S

    Like

  2. That is detailed
    1. Seeing a great improvement in his articulation. Still many what he thinks does not come out
    2. If he can bring out how straight forward he is/ was in his profession that can be a base (Not sure if there exists something to show case)
    3. Think a bit of confusion here. Instead of Dravidam he can talk TN…
    So much feel like writing.
    Do not want to waste the time and space of your blog pages. Your inputs are to the point and also brought out his dilemma and his goal. – Thanks

    Like

  3. Kamal has good intentions and genuine concern for transforming the political culture of Tamil Nadu.His ‘maiyam’ may mean ‘Centrism’ . That has some resemblance of the Golden Middle Path of Buddha,perhaps. Gandhi’s approach to life,including politics ,was Ahimsa ,Satyaghraha and readiness to die for Truth. If these are the concerns of Kamal, then , he should articulate them clearly in simple Tamil.
    I support his moves because he is sincerely trying to bring in a change in Tamil Nadu politics.

    Like

Leave a comment