பெரியாரியர்களை நாசிகள் என்று நான் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாம். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கூறியிருக்கிறார். எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது! திராவிட இயக்கத்தினர் ஹிட்லர் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அண்ணாதுரை சொல்லியிருக்கிறார்: "செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மானியரிடம். ஆதிக்கம் அவர்களிடம். அடிமைத்தனம் ஜெர்மானியரிடம். ஆனந்தம் அவர்களிடம். சோர்வு ஜெர்மானியரிடம். ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்கள் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும் என இட்லர் தனது சுயசரிதையில் எழுதினார்.… Continue reading திராவிட இயக்க வரலாறு என்ன சொல்கிறது?
Category: Uncategorized
Is Keeladi a Place of Magic?
THIS IS IMPORTANT. PLEASE READ CAREFULLY. I wanted to stay away from Keeladi for a few days but fate has decided otherwise! There is a detailed article on Keeladi in Frontline written by Mr Sivanandam and Sundar Ganesan. I have given the link below. The article says this: "The stratigraphy of all the trenches at… Continue reading Is Keeladi a Place of Magic?
அமர்நாத் எழுதிய கீழடி அறிக்கை என்ன சொல்கிறது?
தேனீக்கூடு! நான் கீழடியைப் பற்றி எழுதியிருப்பவையும் பேசியிருப்பவையும் தேனீக்கூட்டைக் கலைத்து விட்டன. பல தேனீகள் என்னையும் என்னை ஆதரிப்பவர்களையும் கொட்டுவதற்குப் பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் என் கேள்விகளுக்கு யாரும் பதில் தரவில்லை -கீழடியின் முதல் இரண்டு கட்டங்களையும் ஆராய்ந்த திரு அமர்நாத் உட்பட. நான் சொல்லாதவற்றை நான் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நான் அவர்கள் நான் சொன்னதாகச் சொல்லுபவை நான் சொன்னவற்றிற்கு நேர் எதிரானவை! எலும்புக் கூடுகள்! நான் கீழடியில் எலும்புக் கூடுகள் கிடைக்கவில்லை என்று… Continue reading அமர்நாத் எழுதிய கீழடி அறிக்கை என்ன சொல்கிறது?
பிராமி – சில கேள்விகள்
பிராமிக்கு சமஸ்கிருதத்தோடு தொடர்பு இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமி என்பது ஓர் எழுத்து வடிவம். அவ்வளவுதான். சமஸ்கிருதம் பிராமி வடிவில் பின்னால்தான் எழுதப்பட்டது. அதிகமான கல்வெட்டுக்கள் முதலில் கிடைத்திருப்பது பிராகிருதத்தில்தான். அசோகக் கல்வெட்டுகளில் அது பயன்படுத்தப்படுவதால் அதன் பெயர் அசோகன் பிராமி என்று ஆகி விட்டது. அசோகன் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்கள் மொழிவளம் மிக்க கல்வெட்டுகள். அன்றைய இந்தியாவைக் குறித்த பல செய்திகள் அவற்றில் கிடைக்கின்றன - சமூக, பொருளாதார, அரசியல், மதங்கள் பற்றிய செய்திகள்.… Continue reading பிராமி – சில கேள்விகள்
காஷ்மீர் – இந்துத்துவப் புளுகுகளும் உண்மைகளும்
இந்துத்துவக் கூட்டம் வரலாறு தெரியாத வெறி பிடித்த கயவர்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 370 பற்றி எழுதும் முழுப் பொய்கள் இணையம் முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, இந்துத்துவ நாசி ஆட்சியை சீக்கிரம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இயங்கும் கேடுகெட்டவர்கள் இவர்கள். எந்தப் பொய்யையும் கூசாமல் சொல்வார்கள். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் இவை: 1. காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கும் மற்றவர்கள் கையெழுத்திட்ட ஒப்பத்தத்திற்கும் எந்த… Continue reading காஷ்மீர் – இந்துத்துவப் புளுகுகளும் உண்மைகளும்
My Views on National Education Policy 2019 – Part II
My views on the National Education Policy 2019
காஷ்மீர் – சில உண்மைகள்
காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை. இன்று அமித்ஷா பேசியிருப்பதால் மீண்டும் பதிவு செய்கிறேன். காஷ்மீர் 1947-48 சில உண்மைகள் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் மிகப் பெரிய அரசியல் அறிஞர்கள் இருந்தார்கள். சிலர் வழக்கையே பார்த்திராத வழக்கறிஞர்கள். சிலர் கிராமத்திலிருந்து வரும் நெல்லைக் குதிருக்குள் போட்டு அது காலியாகிற வரை காவல் காத்துக்கொண்டிருப்பவர்கள். இடையிடையே உலக அரசியலைப்பற்றிப் பேசுவார்கள். அவர்கள் கஷ்கங்களைச் சொறிந்துகொண்டு ‘இந்த நேரு பார்த்த பார்வைதான் காஷ்மீர்ல இந்த நிலமை இருக்கு. அவன்… Continue reading காஷ்மீர் – சில உண்மைகள்
My interview with The Federal
நவீன காலத்திற்கு முந்தையத் தமிழ்ச் சமுதாயம் – சில கேள்விகளும் பதில்களும்
மனிதன் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டதிலிருந்து மிகச் சமீபக் காலம் வரை மிகச் சிலரே செல்வப் பெருக்கில் மிதந்து கொண்டிருந்தனர். பெரும்பான்மையினருக்குக் கிடைத்தது வறுமை மட்டுமே. எனவே பொற்காலம் என்று ஒன்று இருந்திருந்தால் அது என்றைக்கும் மிகச் சிலருக்காகவே இருந்திருக்க வேண்டும். இது கிரேக்கப் பொற்காலத்திற்கும் பொருந்தும். குப்தப் பொற்காலத்திற்கும் பொருந்தும். நமது சோழர்கள் பொற்காலத்திற்கும் பொருந்தும். எல்லா மனிதர்களுக்கும் எட்டக் கூடிய பொற்காலம், குறைந்த பட்சம் பெரும்பான்மையான மனிதர்கள் 'இது எங்கள் பொற்காலம்' என்று சொல்லக்கூடிய காலம்,… Continue reading நவீன காலத்திற்கு முந்தையத் தமிழ்ச் சமுதாயம் – சில கேள்விகளும் பதில்களும்