தமிழ்நாடும் தமிழகமும்

தமிழ்நாடு என்ற பெயர் தமிழ்நாடு என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்ததற்கு முன்பே தமிழன் அறிந்திருந்தது. தமிழனுக்கு என்றும் பிடித்தமான பெயர் அது. செந்தமிழ் நாடு என்னும் போதினிலே என்று பாரதி பாடியிருக்கிறான். நாடு என்றாலே தனி நாடு மட்டும்தான் என்ற பொருள் என்றுமே தமிழில் இருந்ததில்லை. எனவே தமிழ்நாடு என்றால் தனிநாடு என்று வலிந்து பொருள் கொண்டு அதை மாற்ற வேண்டும் என்று கூச்சல் போடுவது முட்டாள்தனம். அதே போல தமிழகம் என்பதும் தமிழனுக்குப் பிடித்த பெயர்.… Continue reading தமிழ்நாடும் தமிழகமும்

ஒன்றியம் என்றால் என்ன?

பெரியார் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் மிகைப்படுத்துபவர்களுக்குப் பஞ்சம் இருந்தது கிடையாது. அன்று ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக இருந்தவர்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்ற கூச்சலை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இன்று திமுக மாநிலத்தில் வெற்றி பெற்று விட்டது என்ற திமிரில் பிரிவினைவாதிகளும் பிரிவினைக்கு எதிராக இருந்தாலும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் 'ஒன்றியம்' என்ற சொல்லை வைத்துக் கொண்டு உளறத் துவங்கி விட்டார்கள். இனி ஒன்றியம் என்ற சொல்லைப் பார்ப்போம். 'ஒன்றியம்' அல்லது Union என்ற… Continue reading ஒன்றியம் என்றால் என்ன?

பெருமாள் முருகனின் கவிதை

" பஞ்சமர் என்றீர்கள் சூத்திரர் என்றீர்கள் வேசி மக்கள் என்றீர்கள் வைப்பாட்டி பிள்ளைகள் என்றீர்கள் கீழ்மக்கள் என்றீர்கள் உங்கள் மொழியில் எத்தனை வசவுகள் உங்கள் மொழி நாகரிகமற்றது உங்கள் மொழி ஆபாசமானது உங்கள் மொழி கேவலமானதுஉங்கள் மொழியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது இன்று என் சகோதரன் கோபக் கணமொன்றில் உங்களை நோக்கி உங்கள் குரைக்கும் தன்மை கண்டு\ ‘நாய், வெறிநாய்’ எனக் குறிப்பிட்டான் உங்கள் மொழி இழிவானது உங்களை நோக்கிக்கூட உங்கள் மொழியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாதுதான்… Continue reading பெருமாள் முருகனின் கவிதை

பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?

திராவிட நாசி இனவெறியர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்கவிடாமல் தடுத்தார்கள் என்பது. இதை தமிழ்நாட்டின் சாபக்கேடான அரையணா அறிஞர்களும் திரும்பத் திரும்ப ஊடகங்களில் சொல்கிறார்கள். பெரியாரியத் தடித்தனத்தில் பிறந்த இவ்வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது. டி 1. நம்முடைய நாட்டில் இதுவரை கிடைத்திருக்கும் ஓலைச் சுவடிகளில் மிகப்பல பௌத்தமதத்தையும் ஜைனமதத்தையும் சார்ந்தவை. இவற்றில் ஒன்று கூட பிராமணர்களால் எழுதப்பட்டது அல்ல. 2. வடமொழியின் மிகப்பெரிய புலவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல. 3. தமிழின் முப்பெரும்… Continue reading பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தார்களா?

கீழடி – என் எட்டு கேள்விகளும் தமிழக அரசின் பதிலும்

காலச்சுவடு நவம்பர் இதழில் திரு சிவானந்தம் மற்றும் திரு சுந்தர் கணேசன் எழுதிய "கீழடி: தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று" என்ற கட்டுரை வெளிவந்திருந்தது. இது அரசு தொல்லியல் துறை சார்பில் எழுதிய கட்டுரை என்பதும் தெளிவாக கட்டுரையின் உள்ளடக்கத்திலிருந்து தெரிந்தது. கட்டுரை தொடர்பாக எனக்குச் சில கேள்விகள் இருந்தன. அவற்றை நான் காலச்சுவடு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். இது என் கடிதம்: எட்டு கேள்விகள் அன்புள்ள கண்ணன், சுகுமாரன், இக்கேள்விகள் திரு சிவானந்தம் சுந்தர் கணேசன்… Continue reading கீழடி – என் எட்டு கேள்விகளும் தமிழக அரசின் பதிலும்

சமணர்களும் சமத்துவமும்

தமிழகத்தில் திராவிடத்தின் சார்பில் எழுதும் பல பேராசிரியர்கள் சோம்பேறிகள், முட்டாள்கள் அல்லது விலை போனவர்கள் என்று நான் ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறேன்? ஒரு முழுச் சோம்பேறிப் பேராசிரியர் வள்ளுவரைத் திராவிடத்தாரகை என்ற அளவில் பேசியிருக்கிறார். அதானால்தான் பெரியார் அவரை ஓரளவு ஏற்றுக் கொண்டாராம். பெரியார் அதிகம் படிக்காதவர். அதுவும் தமிழ் இலக்கியத்தை முழுவதும் வெறுத்தவர். அவர் ஏற்றுக் கொண்டதால் அது திருவள்ளுவருக்குப் பெருமை என்று பெரியார் திடலில் கூலி வேலை பார்க்கும் அடியாட்கள்தாம் சொல்ல… Continue reading சமணர்களும் சமத்துவமும்