ஹிட்லரிய வெறியும் இன்றைய வெறிகளும்

ஹிட்லர் கூறியது: யூதர்கள்தான் ஜெர்மனியின் சீரழிவுக்குக் காரணம் இஸ்லாமிய வெறியர்கள் கூறுவது: இஸ்லாமியர் அல்லாதவர்கள்தாம் இஸ்லாமிய நாடுகளின் சீரழிவுக்குக் காரணம். இந்துத்துவ வெறியர்கள் கூறுவது: இந்து அல்லாதவர்கள்தாம் இந்தியாவின் சீரழ்விற்குக் காரணம் திராவிட பெரியாரிய வெறியர்கள் கூறுவது: பிராமணர்கள்தாம் தமிழ்நாட்டின் சீரழிவுக்குக் காரணம். ஹிட்லர் கூறியது: யூதர்கள் எங்கள் வாழ்க்கை முறையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய வெறியர்கள் கூறுவது: இஸ்லாமியர் அல்லாதவர்கள் எங்கள் வாழ்க்கை முறையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ வெறியர்கள் கூறுவது: இந்து அல்லாதவர் எங்கள்… Continue reading ஹிட்லரிய வெறியும் இன்றைய வெறிகளும்

காவிரி நீர் – கூச்சல்களுக்கு நடுவே

காவிரிக் கூச்சலுக்கு நடுவே சில உண்மைகள்: உச்சநீதி மன்றம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதையும் தன் தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. டிரிப்யூனல் கொடுத்தது இது: ஜனவரி 3 டிஎம்சி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே 2.5 டிஎம்சி ஜூன் 10 டிஎம்சி, ஜுலை 34 டிஎம்சி, ஆகஸ்டு 50 டிஎம்சி, செப்டம்பர் 40 டிஎம்சி அக்டோபர் 22 டிஎம்சி நவர்ம்பர் 15 டிஎம்சி டிசம்பர் 10 டிஎம்சி. இது மொத்தம் 192 டிஎம்சி.… Continue reading காவிரி நீர் – கூச்சல்களுக்கு நடுவே

உயிரை வாங்குபவை எவை?

தமிழகத்தில் நியூட்ரினோ, கூடன்குளம், ஸ்டெர்லைட், நெடுவாசல் போராட்டங்களை முன்னின்று நடத்துபவர்கள் செய்ய வேண்டியது என்ன? இதுவரை அப்படி நடந்து விடும் இப்படி நடந்து விடும் என்ற பயமுறுத்தல்கள் வருகின்றனவே தவிர, எதற்கும் அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. உலகில் மற்றைய இடங்களில் இருக்கும் கிறுக்கர்கள் சொல்வதை உள்ளூர் கிறுக்கர்கள் எடுத்துப் போடுவது சான்று ஆகி விடாது. ஆனால் இரண்டு காரணங்களால் உயிரிழப்புகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது. முதலாவது ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் இன்றும்… Continue reading உயிரை வாங்குபவை எவை?

பெரியாரிய நாசி இனவெறி – ஓர் உதாரணம்

தினமும் பெரியாரிய நாசி இனவெறியர்கள் சாக்கடைத்தனமாகப் பேசி வருகிறார்கள். இன்று அது எல்லை மீறிப் போய்விட்டது என்பதற்கு ஓர் உதாரணம்: "தமிழ்நாட்டில் விலைவாசி, பேருந்து கட்டண விலையேற்றம், நீட் தேர்வு, கூடங்குளம், ஸ்டெர்லைட் என்று ஆயிரம் பிரச்சினைகள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு சமூகமும் தனியாகவோ கூட்டாகவோ போராட்டம் செய்வார்கள். ஆனால் கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றை பார்த்தால் ஒரேயொரு சமூகம் மட்டும் அவர்கள் சொந்தப்பிரச்சினை தவிர வேறெந்த போராட்டத்துக்கும் தெருவில் இறங்கி போராடியதே இல்லை. இதைத்தான் பலமுறை… Continue reading பெரியாரிய நாசி இனவெறி – ஓர் உதாரணம்

அமெரிக்கா பல நாடுகளாக உடைய வேண்டும்!

நான் இதை மிகவும் யோசித்தே எழுதுகிறேன். அமெரிக்காவில் ட்ரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்காவால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கலிஃபோர்னியா அறிந்து கொண்டது. கலிஃபோர்னியாவின் வளங்கள் எல்லாம் அமெரிக்காவால் சுரண்டப்படுகின்றன. அமெரிக்கவிற்கே ஆப்பிள் கொடுப்பது நாங்கள் ஆனால் எங்களுக்கு ட்ரம்ப் அல்வா கொடுக்கிறார் என்று கலிஃபோர்னிய மக்கள் குமுறுகிறார்கள். எனவே கலிஃபோர்னியா தனியாகப் பிரிவதை நிச்சயம் பரிசீலனை செய்ய வேண்டும். மேலே இருக்கும் ஓரேகான், வாஷிங்டன் மாநிலங்கள், ஏன் கீழே இருக்கும் மெக்சிகோவோடு சேர்ந்து கூட தனி நாடு… Continue reading அமெரிக்கா பல நாடுகளாக உடைய வேண்டும்!

தமிழகத்தில் விவசாயம் – சில உண்மைகள்

மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் எதிர்காலத்தில் தமிழகத்திற்கும் மற்றைய மாநிலங்களுக்கும் இடையே அதிகப் பிரச்சினைகள் வளராமல் தடுக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதை வைத்துக் கொண்டு திராவிட, தனித்தமிழ் சண்டியர்கள் ஆடும் பேயாட்டம் வெட்ககரமானது. பேயாட்டம் எந்தத் தீர்வையும் தராது. 1924ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் பிரச்சினையை மெதுவாகத்தான் தீர்வை நோக்கி நகர்த்த முடியும். மத்தியில் எந்த அரசு இருந்தாலும் இதே நிலைமைதான். சரி, மேலாண்மை வாரியம் நாளையே வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள்.… Continue reading தமிழகத்தில் விவசாயம் – சில உண்மைகள்

ஸ்டெர்லைட் போராட்டம் – இன்னும் சில உண்மைகள்

ஸ்டெர்லைட் போராட்டம் ஆலையை மூடுவதற்காக என்று பல பத்திரிகைகள் சொல்லுகின்றன. ஆனால் சில பத்திரிகைகள் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக என்று சொல்லுகின்றன. மக்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதைக் கூடத் தெரியாதவர்களால் தமிழக ஊடகங்கள் நிரம்பியிருக்கின்றன என்பது தமிழகத்தின் சாபக்கேடு. இந்தப் போராட்டத்தை முன்னின்று இயக்கும் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் The Toxic Conspiracy என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். 1.அந்த அறிக்கை என்ன சொல்கிறது? சுற்றுச்சூழலை மாசுபடுத்தவில்லை என்று ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் பொய் சொல்வதில் வல்லவர்கள்… Continue reading ஸ்டெர்லைட் போராட்டம் – இன்னும் சில உண்மைகள்

ஸ்டெர்லைட் போராட்டம் – சில உண்மைகள்

1. தாமிரத்தை சுவாசித்தால் புற்று நோய் ஏற்படும் என்று எந்த ஆராய்ச்சியும் கூறவில்லை. விகடன் முட்டாள்கள் நடத்திய ஆராய்ச்சியில் மட்டும் அது கூறப் படுகிறது. 2. தாமிரத்தை பிரிக்கும் போது காற்றில் வெளியாகும் சல்ஃபர் டை ஆக்ஸைடும் புற்று நோயை ஏற்படுத்தும் வாயு அல்ல. 3. ஸ்டெர்லைட் தொழிற்சாலை SIPCOT வளாகத்தில் இருக்கும் ஒரு தொழிற்சாலை. அவ்வளவுதான். தமிழகத்தின் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் வளாகத்தையே மூட வேண்டும் என்று சொல்கிறார்கள். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தைப் பறிக்க இவர்கள் சொல்கிறார்கள்… Continue reading ஸ்டெர்லைட் போராட்டம் – சில உண்மைகள்