ஆண்டாள் விழித்துக் கொள்கிறார். கனவில் நிகழ்ந்தவையெல்லாம் நினைவிற்கு வருகிறது. அது உண்மையா என்று இறைவன் கையில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற வெண் சங்கைக் கேட்கிறார். உரையாசிரியர்கள் கண்ணனின் வாய்ச்சுவை எவ்வாறு இருக்கும் என்பது ஆண்டாளுக்கு நிச்சயம் தெரியும் என்று கருதுகிறார்கள். ஆனால் இப்போது அவன் மாயமாக விட்டான். அவன் வாயை அடிக்கடித் தொடுவது அவனுடைய சங்கு. பக்தர்களிடம் 'இதோ வருகிறேன்' என்ற அழைப்புகளை அதன் மூலமாகத்தான் அவன் விட்டுக் கொண்டிருக்கிறான். ப்ரீதிப்ரகர்ஷமும் அசூயாதிசயமும் ஆண்டாளுக்கு ஏற்பட்டதாம். அதாவது… Continue reading ஏழாம் திருமொழி -1
ஆறாம் திருமொழி – 2
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூதமுத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ! நான் தோழீ! மத்தளங்கள் கொட்ட, கோடுகளை உடைய சங்குகள் விடாமல் ஊத, என்னை மணம் புரியும் அத்தை மகன், குறையில்லாத முழுமையின் இலக்கணமான மதுசூதனன், முத்துக்களால் நிறைந்த மாலைகள் தொங்கும் பந்தலின் கீழே வந்து என் கையைப் பற்றியதாகக் கனவு கண்டேன். அத்தை மகனையும் மாமன் மகனையும் மணம் செய்வது தமிழர் வழக்கம்.… Continue reading ஆறாம் திருமொழி – 2
ஆறாம் திருமொழி – 1
ஆறாம் திருமொழியின் முதல் பாடலான வாரணமாயிரம் தமிழ் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகமான பாடல். ஆண்டாளின் நாச்சியார் திருமொழியே பெருங்கனவு. அக்கனவிற்குள் கண்ட உட்கனவில் பிறந்தவை ஆறாம் திருமொழியின் பாசுரங்கள். வைணவத் திருமணங்களில் தவறாமல் பாடப்படுபவை. "பகவானுக்கு இடாத அன்னமும், வாரணம் ஆயிரம் பாடப்படாத திருமணமும்” எந்தப் பயனையும் தராது என்று வைணவர்கள் நம்புகிறார்கள். வாரணம் ஆயிரம் பாசுரங்கள் திருமணத்தில் பாடப்படும் நிகழ்ச்சியை "சீர் பாடல்" என்று அவர்கள் அழைக்கிறார்கள். பாடல்கள் பாடப்படும் போது மணமகனும் மணமகளும் எதிர்… Continue reading ஆறாம் திருமொழி – 1
ஐந்தாம் திருமொழி – 2
எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்யமுத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகழிந்தேன் நான்கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளங்குயிலே! என்தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறிலேனே பூக்கள் கொத்துக் கொத்தாக மலரும் சோலையில் உனக்கு உகந்த இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு சுகமாக உறங்குகின்ற இளங்க்குயிலே! எத்திசையிலும் இருக்கும் தேவர்கள் வணங்கிப் போற்றும் பெருமை பெற்ற இருடிகேசன் - எல்லா உலகங்களிலும் இருப்பவர்களின் எல்லா அவயவங்களையும் காக்கும் தலைவன் - என் முன்னால் வரமாட்டேன் என்ற… Continue reading ஐந்தாம் திருமொழி – 2
ஐந்தாம் திருமொழி -1
கண்ணனிடம் சென்று தான் படும் துன்பங்களைக் கூறுமாறு ஆண்டாள் இத்திருமொழியில் குயிலிடம் வேண்டுகிறார. அழகிய குரல் கொண்ட பறவைகள் கவிஞர்களை அதிகம் ஈர்த்திருக்கின்றன. உதாரணமாக, ஷெல்லியில் To a Skylark உலகப் புகழ் பெற்றது. ஸ்கைலார்க் என்ற பறவையின் குரலைக் கேட்டு மயங்கிய அவர் தன் கவிதையில் சொல்கிறார்: Hail to thee, blithe Spirit!Bird thou never wert,That from Heaven, or near it,Pourest thy full heartIn profuse strains of unpremeditated… Continue reading ஐந்தாம் திருமொழி -1
நான்காம் திருமொழி -2
அற்றவன் மருதம் முறிய நடைகற்றவன் கஞ்சனை வஞ்சனையினால்செற்றவன் திகழும் மதுரைப் பதிகொற்றவன் வரில் கூடிடு கூடலே! கூடலே! எனக்காகவே பிறந்தவன் அவன். அவன் தவழ்ந்து தளர் நடை பயிலும் போது இரு மரங்களுக்கிடையே சென்று அம்மரங்களின் வடிவாக வந்த, கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கர்களை அழித்தவன். மாமன் கம்சனின் வஞ்சனையை வஞ்சனையாலேயே அழித்தவன். சுடர் விடும் வடமதுரை நகரத்தின் அரசன். அந்தக் கண்ணன் என்னிடம் வர வேண்டும் என்று நினைத்தால் அதை நடத்திக்கொடு. இங்கு மரத்தில் இருந்தவர் நாரதரால்… Continue reading நான்காம் திருமொழி -2
நான்காம் திருமொழி – 1
நான் என் திருப்பாவை விளக்கத்தில் சொல்லியது போல ஆண்டாளின் உலகம் அவளாக தனக்குள் சமைத்துக் கொண்ட உலகம். அவளுடைய உரையாடல்களில் பல அவ்வுலகத்திள்ளேயே நடக்கின்றன. ஆனாலும் பருண்மை உலகத்தில் அவளுக்குத் தெரிந்தவற்றை வைத்துத்தான் அவளால் உரையாடல்களை நிகழ்த்த முடியும். அவை கவிதைகளாகப் பிறந்து நமக்கும் ஒரு அசாதாரணமான உணர்வை அளிக்கின்றன. அவள் வாழ்ந்த உலகத்திற்கும் அவள் உள்ளத்தில் பிறந்த கனவு உலகத்திற்கும் இடையில் ஏற்படும் முரண்கள் நம்மை வேறு எங்கோ இட்டுச் செல்கின்றன. நான்காம் திருமொழி கூடலிழைத்தலைப்… Continue reading நான்காம் திருமொழி – 1
மூன்றாம் திருமொழி – 2
காதலனை எத்தனை விதமாகக் காதலிப்பது? எலிசபெத் பேரட் ப்ரௌணிங்க் ஏன்ற பத்த்தொன்பதாம் நூற்றாண்டு கவிஞர் சொல்கிறார்: How do I love thee? Let me count the ways.I love thee to the depth and breadth and heightMy soul can reach, when feeling out of sightFor the ends of being and ideal grace.I love thee to the level of every day'sMost quiet… Continue reading மூன்றாம் திருமொழி – 2
மூன்றாம் திருமொழி – 1
கண்ணன் கோபிகளின் ஆடைகளை மறைத்து விளையாடும் கதை வடமொழியில் முதன்முதலாக பாகவத புராணத்தில்தான் வருகிறது என்று நினைக்கிறேன். ஆனால் பாகவத புராணம் ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்னால் எழுதப்பட்டது. எனவே இக்கதை முதலில் தமிழ் வட்டங்களில்தான் எழுந்தது என்று சொன்னால் அது தவறாகாது. மேலும் பாகவத புராணமே தமிழகத்தில்தான் எழுதப்பட்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அகநானுறு 'வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்மரம் செல… Continue reading மூன்றாம் திருமொழி – 1
இரண்டாம் திருமொழி – 2
பெய்யுமா முகில் போல் வண்ணா! உன்தன் பேச்சும் செய்கையும் எங்களைமையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ?நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே பெய்கின்ற கரு முகிலின் வண்ணமுடையவனே! உன் பேச்சும் செயலும் எங்களுக்கு காதலை ஏற்றி மயக்குறச் செய்வதற்குக் காரணம் உன் முகம் செய்யும் மந்திரம்தானோ? உனனைக் குறை சொன்னால் நாங்கள் வலுவில்லாத சிறுமிகள் என்று நீ எங்களைக் கேலி செய்வாய்… Continue reading இரண்டாம் திருமொழி – 2