முப்பத்து மூவர்!

நம் வாழ்க்கையில் தினமும் புழங்கும் கண்ணாடி, நம்மை நாமே பார்த்து மகிழ்ந்து கொள்ளும் (அல்லது கவலைப்படும்) கண்ணாடி மனித வாழ்வில் எப்போது வந்தது? மனிதன் தன்னுடைய உருவத்தைத் தண்ணீரில் பார்த்துக் கொள்வது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். உலோகங்களை அவன் பயன்படுத்த துவங்கிய காலத்திலேயே நன்றாக சுத்தம் செய்யப் பட்ட உலோகங்களில் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். உலோகக் கண்ணாடி 6000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே துருக்கியில் இருந்தது என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். நன்றாகப் பிரதிபலிக்கும் உலோகக்… Continue reading முப்பத்து மூவர்!

குத்து விளக்கெரிய!

தமிழ் இலக்கிய மரபின்படி பெண்களின் பருவங்கள் இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன. "ஐந்து முதல்ஏழ் ஆண்டும் பேதை; /எட்டு முதல்நான்கு ஆண்டும் பெதும்பை;/ ஆறிரண்டு ஒன்றே ஆகும் மங்கை; /பதினான்கு ஆதிபத் தொன்பான் காறும்/ எதிர்தரும் மடந்தை; மேல் ஆறும் அரிவை. /ஆறுதலை யிட்ட இருபதின் மேல்ஓர்/ ஆறும் தெரிவை; எண் ணைந்துபே ரிளம்பெண் என்று/ ஓரும் பருவத் தோர்க்குஉரைத் தனரே." என்று இலக்கண விளக்கம் கூறுகிறது. 5-7 பேதை; 8-12 பெதும்பை; 13 மங்கை; 14-19 மடந்தை; 20-26 அரிவை; 27-32… Continue reading குத்து விளக்கெரிய!

உந்து மதகளிற்றன்!

யார் இந்த நப்பின்னை? ஆழ்வார்களில் ஒன்பது ஆழ்வார்கள் நப்பின்னையைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். 'ஒருமகளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும்' என்று திருமங்கை ஆழ்வார் பாடியிருக்கிறார். 'பூமகள், மண்மகள், ஆய்மகள்' என்று நம்மாழ்வாரும் பாடியிருக்கிறார். அவர்கள் ஆயர் மடந்தை, ஆய்மகள் என்று சொல்வது நப்பின்னையைத்தான் என்பது தெளிவு. திருமாலுக்கு திருமகள், பூமகள் போன்றே மூன்றாவது மனைவியாக நப்பின்னை இருக்கிறார். வடமொழி ஹரி வம்சம் நூலில் அவர் நீளாதேவியாக வருகிறார். கண்ணன் ஏழு ஏறுகளை வென்று அவளை மணமகளாக… Continue reading உந்து மதகளிற்றன்!

அம்பரமே! தண்ணீரே!

புத்தாண்டு வாழ்த்துகள்! ஆடை, நீர், உணவு இவை மூன்றும் உலக மக்கள் அனைவருக்கும் தடையின்றி, குறையின்றிக் கிடைக்க வேண்டும் என்ற அறத்தை தூக்கிப் பிடிப்பவன் நான். ஆண்டாளும் அதைத்தான் சொல்கிறார். மக்கள் உடையின்றி, தண்ணீருக்காகத் தவித்துக் கொண்டு, உணவில்லாமல் இருந்தால் இறைவனைத் தேட மாட்டார்கள். இவற்றைத்தான் தேடிக் கொண்டிருப்பார்கள். சிறுமி ஆண்டாளின் உலகத்தில் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்கிறது. செந்நெல் ஓங்குகிறது. கண்ணனைத் தேட அவகாசம் கிடைக்கிறது. இங்கு இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். இதே ஆண்டாள்… Continue reading அம்பரமே! தண்ணீரே!