கீசுகீசென்று!

தில்லியில் காலையில் கீசுகீசென்று பறவைகள் பேசும் பேச்சரவம் இன்றும் எனக்குக் காலையில் கேட்கிறது. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலி வரதராஜப் பெருமாள் சன்னிதித் தெருவில் எனக்கு பறவைகளின் அரவத்தைக் கேட்ட ஞாபகமே இல்லை. அன்று காலையின் அரவங்கள்- ஓசைகள்- வேறு. கனத்த, கறுப்புப் போர்வையையும் துளைத்துக் கொண்டு திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த என்னை எழுப்பியது, பெண்கள் திருப்பாவையை முணுமுணுத்துக் கொண்டு கோலம் போடுவதற்காக வாசலைப் பெருக்கித் தெளிக்கும் ஓசை. எதிர்த்த வீட்டின் முன்னால் பால்காரர் பசுமாட்டைக்… Continue reading கீசுகீசென்று!

புள்ளும் சிலம்பினகாண்!

இறைவன் தூங்குவானா? இஸ்லாமிய மரபில் அல்லா உறங்குவதாகக் குறிப்பிடப் படவில்லை. ஆனால் கிறித்துவ மரபில் இறைவனை உறங்காதே எழுந்திரு என்று குறிப்பிடும் வாசகங்கள் இருக்கின்றன. பைபிளில் ஏழு இடங்களில் இருக்கின்றன. உதாரணமாக, "என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்,' என்று சங்கீதம் 35:23 சொல்கிறது. "ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்," என்று சங்கீதம் 44:23 சொல்கிறது. ஆனால் இந்து மரபில் உறங்கும்… Continue reading புள்ளும் சிலம்பினகாண்!

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை!

ஆண்டாளின் ஐந்தாவது பாட்டை நினைக்கும் போதெல்லாம் அண்ணங்கராச்சாரியார் நினைவும் கூடவே வரும். அவரைச் சந்திக்க என் தந்தை கூட்டிச் சென்ற போது அவர் உடல்நலம் வெகுவாகக் குன்றியிருந்தது. பேச்சு மெல்லிதாக இருந்தது. "சுவாமி திருமேனி இன்னும் க்ஷீணமாகத்தான் இருக்காப்பல தோன்றதே." "வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் பொழுதுன்னு ஆழ்வார் சாதிச்சிருக்கார். வாசிக்கறத்துக்கு கண்ணு சரியாத் தெரியல்ல. கேக்கறத்துக்கு காதில்ல. சாஷ்டாங்கமா பெருமாளைச் சேவிக்கறத்துக்கு கால் முட்டு இடம் கொடுக்க மாட்டேங்கறது. ஆண்டாள் சொன்ன மாதிரி… Continue reading மாயனை மன்னு வடமதுரை மைந்தனை!

ஆழி மழைக் கண்ணா!

சில வருடங்களுக்கு முன்னால் என் மகனும் நானும் போர்னியோ (மலேசியப் பகுதி) சென்றிருந்தோம். ஸபா மாநிலத்தில் கினபடாங்கன் என்ற நதியில் படகுப் பயணம். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, மழை வரும் அறிகுறிகள் தென்பட்டன. வானம் கறுத்துக் கொண்டே வந்தது. கண்ணுக்கு எதிரே, மிக அருகாமையில், பளீரென்று இதுவரை நான் கண்டிராத பிரகாசத்துடன், மின்னல் ஆற்றில் இறங்கியது. உடனே பெரும் சத்தம். இடிமுழக்கம் என்பதின் முழுப் பொருளை அன்றுதான் உணர்ந்தேன். இன்னும் அருகே மின்னல் இறங்கியிருந்தால்… Continue reading ஆழி மழைக் கண்ணா!

ஓங்கி உலகளந்த உத்தமன்!

ஆண்டாளைப் படிக்கும் போது நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் காட்டும் உலகம் அவர் மனதில் பிறந்த உலகம். அவர் வாழ்ந்த உலகமும் அவர் பாடல்களில் வருகின்றது. ஆனால் மனதில் பிறந்த உலகமே முதன்மை பெறுகிறது.  “சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்சிறுமிகள்” அவர் கற்பனையின் சிறுமிகள்.  தான் வாழும் உலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கனவை அவர்களோடு சேர்ந்து தன் அழியாப் பாடல்களின் மூலம் நம் கண்முன் நிறுத்துகிறார். ஆண்டாள் தனக்காகப் பாடவில்லை. வையத்தில்… Continue reading ஓங்கி உலகளந்த உத்தமன்!

வையத்து வாழ்வீர்காள்!

நேற்று இதை மறந்து விட்டேன். ஆண்டாள் பறை என்ற சொல்லை பல தடவைகள் பயன்படுத்துகிறார்.  வியாக்கியானக்காரர்கள் அதை வியாஜம் என்கிறார்கள். அதாவது ஒரு pretense. ஒரு காரணம். போலிக்காரணமாகக் கூட இருக்கலாம். இறைவனுக்கு அருள் புரிய ஒரு வாய்ப்புக் கொடுப்பது. ஆனால் தென்கலையாருக்கு அதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன். நீ செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிரு அவன் நிச்சயம் பறைதருவான், அருள்புரிவான் என்று ஆண்டாள் சொல்கிறதாகவும் கொள்ளலாம். நம்மாழ்வர் அருளிச்செய்தபடி “வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே”. பாவை… Continue reading வையத்து வாழ்வீர்காள்!