யார் மிரள்கிறார்கள்?

திரு ஸ்டாலின் ஒன்றியம் என்ற சொல்லைக் கேட்டு மிரள வேண்டாம் என்கிறார். உண்மையில் இன்று மிரண்டு போயிருக்கிறவர்கள் திமுகவினர்தான். பதவிக்கு வந்து விட்டோம் ஆனால் நமக்கும் அதிமுக அரசிற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லையே என்று மக்கள் கருதி விடுவார்களே என்ற பயத்தில் அவர்கள் மக்களைத் திசை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். திரு ஸ்டாலின் மத்திய அரசோடு இயைந்து செயல் படுவோம் என்று சொல்லியிருந்தாலும் திமுகவின் பிரச்சார பீரங்கிகள் பிரிவினை என்று மிரட்டுகிறார்கள். இது மக்களைத் தூண்டி விடும்… Continue reading யார் மிரள்கிறார்கள்?

மற்றைய மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பணியாற்றக் கூடாதா?

"தமிழ்நாட்டில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்" என்று இன்றையச் செய்திகள் சொல்கின்றன. இது அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது. திமுகவினர் அரசியல் சட்டத்தை மதிக்காமல் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் மற்றைய கட்சியினர், குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் வாயை மூடிக் கொண்டு இருக்கக் கூடாது.… Continue reading மற்றைய மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பணியாற்றக் கூடாதா?

திரு ஸ்டாலின் அமைத்திருக்கும் பொருளாதார ஆலோசனைக் குழு

முதலில் திரு ஸ்டாலினுக்கு என் வாழ்த்துகள் உரித்தாகின்றன. சமூகநீதி நாடகத்தை விட தமிழகத்தின் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடித்து நிறுத்துவதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர் எடுத்திருக்கும் முடிவு மிகவும் சரியானது. பொருளாதாரம் சரியாகும் போது சமூகநீதியின் அடித்தளம் நிச்சயம் வலுப்பெறும். உடனடியான சமூகநீதிச் செயற்பாடுகள் ஏதும் மிகப் பெரிதாக நடக்க எந்த சாத்தியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. திரு அரவிந்த் சுப்ரமணியம் தொற்றுக்கு முன்னாலேயே இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை சரியில்லை என்று தொடர்ந்து சொல்லிக்… Continue reading திரு ஸ்டாலின் அமைத்திருக்கும் பொருளாதார ஆலோசனைக் குழு

Pre-Gandhi Freedom movement and Caste

It has now become fashionable among some writers to brush the leaders of our Freedom movement, especially the ones who were active before the Gandhian era, with the casteist tar and portray them as ones who upheld caste privilege. Nothing can be more false than such a lazy portrayal. Let us analyze the pre-Gandhi freedom… Continue reading Pre-Gandhi Freedom movement and Caste

ஆஷ் கொலை

நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் செய்த செயல்களுக்குக் காரணங்களில் ஒன்று சாதி என்று சொல்வது தடித்தனத்தின் உச்சம். மனிதகுல விரோதிகளான பெரியாரிஸ்டுகள் அவ்வாறு சொல்வதில் வியப்பில்லை. பட்டியலினத்தவர்கள் அவ்வாறு சொல்வதிலும் வியப்பில்லை. அவர்களுக்கு அயோத்திதாசர் எழுதியதையெல்லாம் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம். திருமாவளவனுக்கு திராவிட இயக்கத்திற்கு வால் பிடிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் காந்தி, நேரு பெயரைச் சொல்லிக் கொண்டு அலைபவர்கள் இவ்வாறு சொல்வது வெட்கக் கேடு. காந்தியும் நேருவும் சாதியைத் தூக்கிப் பிடிப்பதற்காகத்தான், பார்ப்பன-பனியா… Continue reading ஆஷ் கொலை

இந்திய ஒருமைப்பாட்டின் இரண்டு முழு விரோதிகள்

தமிழ்நாட்டில் இன்று இந்திய ஒருமைப்பாட்டின் முழு விரோதிகளைக் கொண்ட குழுவினர் இருவர் வெளிப்படையாக இயங்கி வருகிறார்கள். ஒன்று பெரியாரியவாதிகள். ஒரு குறிப்பிட்ட குழுவினரை அக்குழுவில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகப் பழித்துக் கொண்டிருப்பதை ஹிட்லர் செய்து கொண்டிருந்தான். அதைத்தான் பெரியாரியவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவன் மனிதகுல விரோதி என்றால் இவர்களும் எந்த சந்தேகமும் இல்லாமல் மனிதகுல விரோதிகள்தாம். ஹிட்லர் செய்ததைத்தான் இவர்கள் எந்த வெட்கமும் இல்லாமல் செய்து கொண்டு வருகிறார்கள். இது திரு கொளத்தூர் மணி சொல்லியிருப்பது:… Continue reading இந்திய ஒருமைப்பாட்டின் இரண்டு முழு விரோதிகள்

கிஷோர் கே சுவாமி கைது

பேசியதற்காகவும் எழுதியதற்காகவும் கைது செய்யப்படுவதை நான் என்றும் ஆதரித்ததில்லை. பல ஆண்டுகளாக என் நிலைப்பாடு இதுதான். கறுப்பர் கூட்டத்தினரைக் கைது செய்த போதும் அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று நான் கண்டித்தேன். இன்று கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் சாக்கடைத்தனமாகப் பேசியும் எழுதியும் வந்தார் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவர் வன்முறையைத் தூண்டி விடவில்லை. அவர் மீது வழக்குத் தொடரலாம். வழக்கில் நீதி மன்றம் தண்டனை கொடுத்தால் வரவேற்கலாம். மாறாக அவரை கைது… Continue reading கிஷோர் கே சுவாமி கைது

எல்லோரும் அர்ச்சகர்/பூசாரிகள் ஆகலாமா?

என் நிலைப்பாட்டை நான் பல தடவைகள் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன். அரசு கையில் இருக்கும் கோவில்களில் எல்லாச் சாதியினரும் பெண்களும் திருநங்கையரும் அர்ச்சகர்கள்/பூசாரிகள் ஆகலாம் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால் இதை பெரியாரிய நாஜிகள் போன்றோ திராவிடக் கோமாளிகள் போன்றோ கலப்படக் கம்யூனிஸ்டுகள் போன்றோ, போன்றோ தடித்தனமாக அணுகக் கூடாது. பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்களில் மட்டும் இந்த நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. பிராமணர் அல்லாதார் பூசாரிகளாக இருக்கும் கோவில்களிலும் இதே நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.உள்ளூர்… Continue reading எல்லோரும் அர்ச்சகர்/பூசாரிகள் ஆகலாமா?

ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்

திமுகவிற்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் தமிழன் பிரசன்னாவின் மனைவி நேற்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் எப்போதும் போல பல வதந்திகள் உலாவத் துவங்கி விட்டன. என்னைப் பொறுத்தவரை காவல்துறையினர் விசாரணை செய்து ஒரு முடிவிற்கு வரும்வரை கூச்சல் போடாமல் அமைதியாக இருப்பதைத்தான் நேர்மையானவர்கள் செய்வார்கள். இது போன்ற சம்பவம் பூணூல் போட்ட பிரபலம் ஒருவர் வீட்டில் நடந்திருந்தால் சிலர் பெருங்கூத்தாடியிருப்பார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.… Continue reading ஒரு தற்கொலையும் ஒரு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டும்

திராவிட இரு மூர்த்திகளும் வரவு செலவு கணக்குகளும்

மிகைப்படுத்துவதை ஒரு கலையாக பல ஆண்டுகள் செய்து கொண்டிருப்பவர்கள் திராவிட முன்னேற்றக்கழகக் கோமாளிகள். உதவாக்கரைகளிலிருந்து சிறிது திறமை கொண்டவர்கள் வரை திராவிட இயக்கத்திற்கு கொடி பிடித்தவர்களையும், பெரியாரின் ஹிட்லரிய இனவெறி பிரச்சாரத்திற்கு துணை போனவர்களையும் உலகமகா மேதைகள் போலவும், நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள் போலவும் சித்தரிப்பதில் இவர்களுக்கு ஈடு கிடையாது. இன்று இவர்களுக்கு துணை போகின்றவர்கள் அரையாணா அறிஞர்கள். நேர்மை என்பதைத் துடைத்து விட்டு அலையும் கயவர்கள். கனவு இல்லம் கிடைக்காதா என்ற பேராசையில் மூன்றாம்தர விளம்பரங்கள்… Continue reading திராவிட இரு மூர்த்திகளும் வரவு செலவு கணக்குகளும்