காம தேவனை (அல்லது தேவியை) பாடிய கவிஞர்கள் இருக்கிறார்கள். பெண் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஆண்டாளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பெண் கவிஞர் ஸாஃபோ (Sappho). அவர் கிரேக்கக்கடவுளான அஃப்ருடைடியை (Aphrodite)ப் பாடியிருக்கிறார். Aphrodite, subtle of soul and deathless,Daughter of God, weaver of wiles, I pray thee காதலின் தேவியை, கடவுளின் மகளை வணங்கி, 'நுண்ணிய மனம் உடையவளே, இறப்பே இல்லாதவளே, பல மாயங்களைச் செய்பவளே' என்று தன் கவிதையைத் துவங்கி… Continue reading முதல் திருமொழி – 2
Month: December 2022
முதல் திருமொழி – 1
ஆண்டாள் வைணவத்திற்குக் கிடைத்த அரிய சொத்து என்பதை வைணவ ஆசாரியர்கள் அறிந்திருந்தார்கள். அவரை பத்து ஆழ்வார்களுக்கும் கிடைத்த ஒரே பெண்ணாகத்தான் என்று அவர்கள் கருதினார். ஒரு மகள் தன்னை உடையேன் என்று பெரியாழ்வார் பாடியது எல்லா ஆழ்வார்களையும் கருத்தில் கொண்டுதான் என்றும் நினைத்தனர். உபதேச ரத்தின மாலையில் மணவாளமாமுனிகள் ஆண்டாளைப் பிஞ்சில் பழுத்தவள் என்று அழைக்கிறார். பல்லாண்டுகள் பெருமுயற்சி செய்தும் கிடைக்கப் பெறாத ஞானத்தை அவளுடைய சுடர்மிகும் அறிவு மிக இளவயதிலேயே அடைந்து விட்டது. இங்கு பழுத்தது… Continue reading முதல் திருமொழி – 1
நாச்சியார் திருமொழி
ஆண்டாளின் நாச்சியார் திருமொழியும் தனித்துவம் கொண்டது - திருப்பாவையைப் போலவே. பதினான்கு பத்துகள். 143 பாடல்கள். வைணவப் பெரியவர்கள் ஆண்டாள் திருப்பாவையில் விட்ட இடத்திலிருந்து துவங்குகிறார் என்கிறார்கள். ஆனால் நாம் இங்கு காணும் ஆண்டாள் வேறொரு ஆண்டாள். குழந்தைப் பருவத்திலிருந்து இளம் பெண்ணாக மாறியவர். திருப்பாவையில் அவளுக்கு தோழியர்கள் தேவையாக இருந்தார்கள். ஆனால் இப்போது அந்தத் தேவை அதிகம் இல்லை. தன்னைப் பெரும்பாலும் தனியளாகவே உணர்கிறார். கூடலை விரும்பும் பெண்ணாக. மார்பகங்கள் பெருத்து விட்டன என்பதை அறிவிக்கத்… Continue reading நாச்சியார் திருமொழி