கீழடி – சில முக்கியமான கேள்விகள்

தமிழில் ஒரு கதை உண்டு. அரசகுமாரியின் ஒரு தலைமயிர் இழையை வைத்துக் கொண்டு அரசகுமாரன் ஒருவன் அவர் படத்தை தத்ரூபமாக வரைந்தான் என்று. இன்று கீழடி அந்த அரசகுமாரியின் நிலையில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் அது எப்படியிருந்தது என்பதை தற்காலத் தமிழ் அரசகுமாரர்கள் - வரலாற்றோடோ, அகழ்வாராய்ச்சியோடோ எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்- வரையத் தொடங்கியிருக்கிறார்கள். எந்த லட்சணத்தில் அவை இருக்கின்றன என்பதைச் சொல்லவே வேண்டாம். தனது தரப்பிலிருந்து கீழடியை பற்றி தமிழக அரசு ஒரு புத்தகத்தை… Continue reading கீழடி – சில முக்கியமான கேள்விகள்

தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்

காலச்சுவடு செப்டம்பர் 2019ல் வெளியான கட்டுரை. ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்’ புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. எந்த இனம் பழைய இனம் என்பதை ஆராய்ச்சி செய்த எகிப்திய ஃபாரோ ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் இப்புத்தகத்தில் தருகிறார். இரண்டு பிறந்த குழந்தைகளை ஆடு மேய்ப்பவரிடம் கொடுத்து மொழிப் பரிச்சயமே இல்லாமல் ஃபாரோ வளர்க்கச் சொன்னார். அவர் ஒழுங்காக… Continue reading தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்

சைவ சித்தாந்த நூல்கள்

நேற்று சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களையும் தமிழைத் தூக்கிப் பிடிப்பவர்களையும் பற்றி எழுதியிருந்தேன். இம்முரண் தமிழ்ச் சமுதாயத்தில் குறிப்பாக தமிழ் பிராமணர்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக இருந்திருக்க வேண்டும். சங்க காலத்திலிருந்தே இருந்திருக்கலாம். தமிழின் மிகப் பெரிய புலவர்களில் பிராமணர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அதே சமயத்தில் தமிழகத்திலிருந்து வந்திருக்கும் சமஸ்கிருத நூல்களும் கணக்கிலடங்காதவை. வைணவ சித்தாந்தத்தில் தமிழும் சமஸ்கிருதமும் இணைந்தும், எதிர்பட்டும் இயங்கியது போல, சைவ சித்தாந்தத்திலும் அது நடந்திருக்கிறது. "என்னை நன்றாக… Continue reading சைவ சித்தாந்த நூல்கள்

ஆசார்ய ஹ்ருதயம்

ஆசார்ய ஹ்ருதயம் என்று ஒரு நூல் இருக்கிறது. அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற பெரியவர் எழுதியது. இதற்கு மணவாள மாமுனிகள் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அண்ணங்கராசாரியார் சுவாமியும் பதவுரை எழுதியிருக்கிறார். இந்நூல் ஏன் எழுதப்பட்டது? ஆழ்வார்களின் பெருமையை நிறுவுவதற்காக. தமிழில் எழுதிய பாடல்களை, குறிப்பாக நம்மாழ்வார் எழுதிய பாசுரங்களை எவ்வாறு ஆதாரமாக ஏற்றுக் கொள்வது என்ற கேள்விக்கு, வைதிகப் பிராமணர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக. "ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாக்ச் செய்தார்… Continue reading ஆசார்ய ஹ்ருதயம்

அரைகுறை மார்க்சியவாதிகளின் கைகளில் தமிழ் இலக்கியம் படும் பாடு

எதைப் பற்றியும் எந்தப் புரிதல்களும் இல்லாதவர்கள் தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் விந்தை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். பக்தி இலக்கியத்தில் இயற்கையைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை, கடவுளைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று திரு சு வெங்கடேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்) பிதற்றியிருக்கிறார். அதனால்தான் இப்போது நீர் வரட்சி இருக்கிறதாம். அவர் சொன்னது இது: This cherished, celebrated bond between human beings and nature was lost when Bhakthi literature took over, says… Continue reading அரைகுறை மார்க்சியவாதிகளின் கைகளில் தமிழ் இலக்கியம் படும் பாடு