யார் மிரள்கிறார்கள்?

திரு ஸ்டாலின் ஒன்றியம் என்ற சொல்லைக் கேட்டு மிரள வேண்டாம் என்கிறார். உண்மையில் இன்று மிரண்டு போயிருக்கிறவர்கள் திமுகவினர்தான். பதவிக்கு வந்து விட்டோம் ஆனால் நமக்கும் அதிமுக அரசிற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லையே என்று மக்கள் கருதி விடுவார்களே என்ற பயத்தில் அவர்கள் மக்களைத் திசை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். திரு ஸ்டாலின் மத்திய அரசோடு இயைந்து செயல் படுவோம் என்று சொல்லியிருந்தாலும் திமுகவின் பிரச்சார பீரங்கிகள் பிரிவினை என்று மிரட்டுகிறார்கள். இது மக்களைத் தூண்டி விடும் செயல். பிரிவினை வாதம் தலையெடுத்தால் மத்திய அரசு கையைக் கட்டிக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்காது. மோதல்கள் ஏற்பட்டால் அதில் இழப்புகள் தமிழ்நாட்டிற்குத்தான் அதிகமாக இருக்கும். இலங்கையின் வடக்குப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் இழந்ததை விட பல மடங்குகள் இழக்க நேரிடும்.

நான் மீண்டும் சொல்கிறேன்.

இந்தியாவைப் பிரிக்க யாராலும் முடியாது. மேடையில் வெத்துவேட்டுப் பிரச்சாரம் செய்பவர்களால் அது முடியவே முடியாது. பேச்சு அதிகமானால் தேசத்துரோகச் சட்டத்தில் உள்ளே போக வேண்டியதுதான். திமுக அரசு ஐந்து வருடம் ஆட்சி செய்து மக்களுக்கு நலம் செய்ய வேண்டும் என்று திரு ஸ்டாலின் நினைக்கிறார் என நானும் எண்ணுகிறேன். அதை இது போன்ற திசை திருப்பல்கள் இல்லாமல் அவர் செய்தால் நன்றாக இருக்கும். கட்சியிலும் வெளியிலும் அதிகம் துள்ளுபவர்களை அவர் அடக்கத்தோடு பேசச் சொல்ல வேண்டும்.

இனி அரசியல் சட்டத்திற்கு வருவோம்.

India that is Bharat shall be a Union of States என்று அது சொல்வது உண்மைதான். ஆனால் எது states என்பதை உறுதி செய்யும் உரிமை நாடாளுமன்றத்திற்குத்தான் இருக்கிறது. நாளைக்கே தமிழகத்தில் பிரிவினை வாதம் தலையெடுத்தால் ஆட்சியை கலைத்து ஆளுனர் ஆட்சியைக் கொண்டு வந்து மாநிலத்தைப் பிரிக்க முடியும். உதாரணமாக சென்னை நகரத்தை பாண்டிச்சேரியைப் போன்று யூனியன் பிரதேசமாக அறிவிக்க முடியும். தமிழகத்தைக் கூறு போட முடியும். இதுதான் சமீபத்தில் காஷ்மீரில் நடந்திருக்கிறது. இப்படிச் செய்தது சரியா, தவறா என்பது வேறு விவாதம். ஆனால் இப்படிச் செய்வதற்கு மத்திய அரசிற்கு அதிகாரம் நிச்சய்ம் இன்றைய அரசியல் சட்டத்தின்படி இருக்கிறது என்று அரசியல் சட்ட வல்லுனர்கள் கருதியதால்தான் பாஜக இந்த முடிவை எடுத்தது. தமிழ்நாட்டில் நிலைமை சீர் குலைந்தால் அதே முடிவை மத்திய அரசு எடுக்க முடியும் என்பதுதான் இன்றைய உண்மை. இது மத்திய அரசை ஒன்றியம் என்று பெயர் மாற்றி அழைப்பதால் பொய் ஆகி விடாது. எனவே இச்சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்றியம் என்று சொல்லிக் கொள்ளுங்கள். என்னைப் போன்றவர்கள் மத்திய அரசு என்று சொல்லிக் கொள்கிறோம். இது கூச்சலில்லாமல் நடந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

திமுக உண்மையில் செய்ய வேண்டியது என்ன?

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்ற கொள்கையை நானும் வரவேற்கிறேன். ஆனால் அது இந்தியா பிரிய முடியாத ஒரே நாடு என்ற அசைக்க முடியாத அடிப்படையில் இருக்க வேண்டும். எங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் இல்லையென்றால் பிரிந்து விடுவோம் என்ற மிரட்டல்களில் இருக்க முடியாது. தங்களை விட மிகப் பெரிய அளவில் மத்திய அரசால் மிரட்ட முடியும் என்பதை திமுக என்றும் மறந்து விடக் கூடாது. முதலில் திமுக முன்னுதாரணமாக மாநிலத்திடம் குவிந்து இருக்கும் அதிகாரங்களை நகராட்சிகளுக்கும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கும் தேவையான அளவு பிரித்துக் கொடுக்க வேண்டும். கொடுத்த பின், திமுக முன்னின்று என்னென்ன அதிகாரங்கள் மாநிலங்களுக்கு தேவை என்பதை வரையறுக்கும் ஆவணத்தை மற்றைய மாநிலங்களோடு ஒருங்கிணைந்து தயாரித்து மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். அவை அனைத்தும் உடனடியாகக் கிடைக்காது. ஒன்றொன்றாகத்தான் கிடைக்கும். சில கிடைக்காமலே போகலாம். அதற்குத் தயாராக இருக்க வேண்டும். அரசியல் அதிகாரங்களை மளிகைக்கடையில் பொருட்கள் வாங்குவதைப் போல வாங்க முடியாது. இது தன்மானப் பிரச்சினை அல்ல. தன்மானம் என்று குறுங்குழு இனவாதம் பேசும் முட்டாள்கள் மட்டுமே பேசுவார்கள். இது மக்களாட்சி எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைப் பற்றி மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து பேசி முடிவு செய்ய வேண்டிய பிரச்சினை. அவசரப்பட முடியாது. உள்நாட்டுப் போரை விரும்புபவர்களே அவசரப்படுவார்கள்.

திமுக நிச்சயம் போரை விரும்பவில்லை. அது அமைதியை விரும்பும் கட்சி என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் அவசரப்படுவதாகத் தோன்றுகிறது. அவசரத்தால் நேரும் இழப்பு கட்சிக்குத்தான் இருக்கும். அதை திரு ஸ்டாலின் விரும்ப மாட்டார் என்று எண்ணுகிறேன். எனவே கட்சிக்குள் பிரிவினை வாதம் பேசுபவர்களை கட்சியே ஒடுக்க வேண்டும். உளறும் பத்திரிகையாளர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும். செய்யவில்லையென்றால் மத்திய அரசு தலையிடும் நிலமை வந்து விடும்.

3 thoughts on “யார் மிரள்கிறார்கள்?”

  1. 2ஜி வழக்கு ஏன் தாமதமாகிறது, எப்போது முடிவு வரும் என்று தாங்கள் விளக்கமாக எழுத முடியுமா? இந்த நேரத்தில் அந்த வழக்கின் வீச்சு மாநில அரசின் கவனத்தில் இருப்பது நல்லது.

    Like

    1. 2G யில் எந்த தவறுகளும் இல்லை என்பதை BJP அரசு அறிந்தே இருக்கிறது and they know well they cannot prove it in the court … they already harvested by misleading the nation with false claims and used all institutions to propagate against then Govt and defeat in the election. your statement shows your ignorance … தவறு இருந்திருந்தால், how they will not use it against DMK and defeat them in the election ?? and that too, the state they want to get into power at any cost ??!!

      Like

  2. This is not the 50s.
    Not just TN in general, the DMK bigwigs themselves likely ​have business interests all over India. They don’t intend to make good on these ‘assertions’ in any serious manner. This flexing is just to make an impression on sections of the electorate. But that is precisely what is problematic.

    The question to muse about is why there is renewed buy-in for this kind of posturing? Why is there a sizeable section of the electorate feeling elated by this? Why is there a recrudescence of the opinion that there is something more ‘natural’ about the idea of TN as opposed to India?

    It is not the just rhetoric that is driving the re-normalization but the other way round too.

    Since the ascendancy of the BJP and the demise of the big two players who dominated TN politics, there is a perceptible shift in, what is known as the ‘Overton-Window’, so to speak. These noises – intrinsically empty as they are – still portend something more.

    As Keynes famously said: “The power of vested interests is vastly exaggerated as compared to that of the gradual encroachment of ideas”

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s