மற்றைய மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பணியாற்றக் கூடாதா?

“தமிழ்நாட்டில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்” என்று இன்றையச் செய்திகள் சொல்கின்றன. இது அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது. திமுகவினர் அரசியல் சட்டத்தை மதிக்காமல் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் மற்றைய கட்சியினர், குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் வாயை மூடிக் கொண்டு இருக்கக் கூடாது. ஆனால் அவர்கள் வாயைத் திறப்பார்களா என்பது ஐயத்திற்குரியது.

இனி அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

Article 16(2) states that “no citizen shall, on grounds only of religion, race, caste, sex, descent, place of birth, residence or any of them, be ineligible for, or discriminated against in respect or, any employment or office under the State”

இது மிகத் தெளிவாக இந்தியக் குடிமகனுக்கும் எந்த மாநிலத்திலும் வேலை செய்ய உரிமை உண்டு என்பதைச் சொல்கிறது. இதற்கு மாறாக ஏதாவது விதி விலக்கு அளிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்குத்தான் இருக்கிறது.

பிரதீப் ஜெயின் வழக்கில் (1984) உச்சநீதி மன்றம் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

“Some of the States are adopting ‘sons of the soil’ policies prescribing reservation or preference based on domicile or residence requirement for employment or appointment… Prima facie this would seem to be constitutionally impermissible though we do not wish to express any definite opinion upon it, since it does not directly arise for consideration.”

2002ல் உச்சநீதி மன்றம் இவ்வாறு சொல்லியிருக்கிறது:

We have no doubt that such a sweeping argument which has the overtones of parochialism is liable to be rejected on the plain terms of Article 16(2) and in the light of Article 16(3). An argument of this nature flies in the face of peremptory language of Article 16(2) and runs counter to our constitutional ethos founded on unity and integrity of the nation.

உத்திரப் பிரதேசத்தில் உள்ளூர் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ததை அலகாபாத் உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

எனவே தமிழ் நாட்டுச் சட்டமன்றத்திற்குள் வாட்களைச் சுழற்றினாலும் உச்சநீதி மன்றத்திற்கு முன்னால் பணிந்துதான் ஆக வேண்டும். இது போன்று பல மாநிலங்களில் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற முட்டாள்தனமான கொள்கை தூக்கிப் பிடிக்கப் பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் எங்கும் இது நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இதையும் மீறி திமுக அரசு செயற்பட்டால் உச்சநீதி மன்றம் சொல்லியிருக்கும்படி அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகத்தான் இருக்கும். அதற்கு எதிராக மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி.

இந்திய மக்கள் எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிலை. இதை குறுங்குழு இனவாதிகளால் மாற்றவே முடியாது.

3 thoughts on “மற்றைய மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பணியாற்றக் கூடாதா?”

 1. நானும் கவனித்தேன். மத்திய அரசுப் பணிகளில் குறிப்பாக ரெயில்வேக்கான தகுதித் தேர்வில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். தமிழ் தெரியாத வட இந்தியர்கள் தமிழ் கேள்வித்தாளில் அதிக மதிப்பெண்கள் வாங்கியதாகக் கூறப்படும். இந்த ஆய்வு அரசுப் பணிகளுக்கானது. ஆய்வு செய்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

  Like

  1. How do you say that? If is Railways then the state government has no jurisdiction. If there is corruption then the comment should be confine to it. Is it OK if Tamils are involved in corruption?

   Like

 2. நிதியமைச்சர் சிங்கப்பூரில் பணியாற்றலாமா? அமெரிக்காவில் பணி புரிந்திருக்கலாமா? அதை அந்த நாடுகளின் சட்டங்கள் அனுமதித்தன. அதைப்போன்று இந்தியச் சட்டம் தேசத்திற்குள் யாரும் எங்கும் எந்த வேலையும் செய்யலாம் என்கிறது. தமிழ் நாட்டில் தமிழர்கள் தான் பணி செய்ய வேண்டும் என்பது 1970களின் பால் தாக்கரே பாணி அரசியல்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s