ஆஷ் கொலை

நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் செய்த செயல்களுக்குக் காரணங்களில் ஒன்று சாதி என்று சொல்வது தடித்தனத்தின் உச்சம்.

மனிதகுல விரோதிகளான பெரியாரிஸ்டுகள் அவ்வாறு சொல்வதில் வியப்பில்லை. பட்டியலினத்தவர்கள் அவ்வாறு சொல்வதிலும் வியப்பில்லை. அவர்களுக்கு அயோத்திதாசர் எழுதியதையெல்லாம் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம். திருமாவளவனுக்கு திராவிட இயக்கத்திற்கு வால் பிடிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் காந்தி, நேரு பெயரைச் சொல்லிக் கொண்டு அலைபவர்கள் இவ்வாறு சொல்வது வெட்கக் கேடு. காந்தியும் நேருவும் சாதியைத் தூக்கிப் பிடிப்பதற்காகத்தான், பார்ப்பன-பனியா ஆட்சியை அமைக்கத்தான், சுதந்திரம் வாங்கினார்கள் என்று சொல்வதற்கும் வாஞ்சி சாதிவெறி உந்துதலின் பெயரில் ஆஷைச் சுட்டார் என்று சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

சுதந்திரப் போராட்ட வீரர்களில் பலர் சாதிய நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதில் உண்மையிருக்கிறது. ஆனால் அவர்கள் வெள்ளையரை விரட்ட வேண்டும் என்று சொன்னதற்கும் அவர்களின் சாதிய நிலைப்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரிட்டிஷ் அரசு சாதிகளை மிகப் பாதுகாப்போடு வைத்திருந்தது. அவர்களுக்கு சட்டம் ஒழுங்கு முக்கியம். இந்தியப் பழக்க வழக்கங்களில் தலையிட மாட்டோம் என்று விக்டோரிய மகாராணி 1858லேயே வாக்குறுதி கொடுத்து விட்டார். தீண்டாமையைத் தடுக்கவும் பிரிட்டிஷார் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. தீண்டாமை ஒழிக்கப்பட்டது விடுதலைக்குப் பின்புதான்.

சாதிய பழக்க வழக்கங்களில் கை வைத்தால் கலகங்கள் நிகழும் என்பது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருந்தது. அதுவும் பட்டியலினத்தவரை ஆதரித்து எதைச் செய்தாலும் எல்லாச் சாதியினரும் சேர்ந்து கொள்வார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. திருநெல்வேலியில் பட்டியலினத்தவர் பிணத்தை சாதி இந்துக்கள் தெருவழியாக எடுத்து சென்றதனால் 1858ல் கலவரம் நிகழ்ந்து பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எனவே இது போன்ற நடவடிக்கையை ஆஷ் செய்திருக்க வாய்ப்பே இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல சாதிக் கலவரங்கள் நிகழ்ந்தன என்று பேட் தன் கெசட்டீரில் பதிவு செய்திருக்கிறார். ஆஷ் அருந்ததியருக்கு உதவியிருந்தால் அது மிகப் பெரிய சர்ச்சையாக பட்டியலினத்தவர்களுக்குள்ளேயே வெடித்திருக்கும். அது பதிவு செய்யப்படமால் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே ஆஷ் அருந்ததியருக்கு ஆதரவளித்தார், அருந்ததியரை பிராமணத் தெரு வழியாகச் செல்ல அனுமதித்தார் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. இக்கூற்றிற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆதாரம் இருந்தால் அதைக் காட்ட வேண்டும். அவ்வாறு ஆதாரம் இருந்தாலும் அதனால் வாஞ்சி பாதிக்கப்பட்டார் என்பதற்கும் ஆதாரம் வேண்டும். நடந்திருக்கலாம் என்று கதையளப்பது வரலாறு ஆகாது. அயோத்திதாசர் பிரிட்டிஷ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததனால் வாஞ்சி சாதி வெறியர் ஆகி விட மாட்டார்.

வாஞ்சிநாதன் பெரிய தத்துவவாதியல்ல. அவரை வெள்ளையரைக் கொலை செய்யத் தூண்டி விட்டது நீலகண்ட பிரம்மச்சாரி என்பது வழக்கு விசாரணையில் தெரிய வருகிறது. வாஞ்சி இக்கொலையைத் தனிமனிதனாகச் செய்யவில்லை. அவருக்கு துப்பாக்கி சுடுவதில் புதுச்சேரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆஷ் உயர்சாதியை அவமானப் படுத்தினார் என்பதற்காக அவரைச் சுடுவதற்கு வவேசு ஐயர் உட்பட நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாஞ்சிக்குப் பயிற்சி அளித்து அவருக்கு துப்பாக்கியும் கொடுத்தார்கள் என்று சொல்வது மூடத்தனம் மட்டுமல்ல. காலித்தனம்.

வாஞ்சி சனாதனம் என்று தன் கடிதத்தில் சொல்வதால் அவர் பட்டியலினத்தவரின் விரோதி என்று சொல்வதும் தற்குறித்தனம். அவர் சனாதன தர்மம் என்று சொல்வது அரவிந்தரின் தாக்கத்தால் என்பது தெளிவு. அவருக்கு பயிற்சி அளித்தவர்கள் அனைவரும் அரவிந்தரின் ஆளுமையால் கவரப் பட்டவர்கள்.

அரவிந்தர் என்ன சொல்கிறார்?

“The caste system was once productive of good, and as a fact has been a necessary phase of human progress through which all the civilisations1 of the world have had to pass. The autocratic form of Government has similarly had its use in the development of the world’s polity, for there was certainly a time when it was the only kind of political organisation that made the preservation of society possible. The Nationalist does not quarrel with the past, but he insists on its transformation, the transformation of individual or class autocracy into the autocracy, self-rule or Swaraj, of the nation and of the fixed, hereditary, anti-democratic caste-organisation into the pliable self-adapting, democratic distribution of function at which socialism aims. In the present absolutism in politics and the present narrow caste-organisation in society he finds a negation of that equality which his religion enjoins. Both must be transformed. The historic problem that the present attitude of Indian Nationalism at once brings to the mind, as to how a caste-governed society could co-exist with a democratic religion and philosophy, we do not propose to consider here today. We only point out that Indian Nationalism must by its inherent tendencies move towards the removal of unreasoning and arbitrary distinctions and inequalities. Ah! he will say, this is exactly what we Englishmen have been telling you all these years. You must get rid of your caste before you can have democracy. There is just a little flaw in this advice of the Anglo-Indian monitors, it puts the cart before the horse, and that is the reason why we have always refused to act upon it.”

The Unhindu Spirit of Caste Rigidity – Bande Mataram. September 20, 1907

சாதியை எவ்வாறு அணுகுவது என்பதில் அக்கால கட்டத்தில் பல சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தன. நம் விடுதலைப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அதை வெவ்வேறு கோணங்களில் அணுகினார்கள். வாஞ்சி போன்றவர்களுக்கு இது போன்ற விஷயங்களில் தெளிவு இருக்க வாய்ப்பில்லை என்று சொன்னால் அதில் உண்மையிருக்கலாம். ஆனால் அவருடைய ஒரே குறிக்கோள் ஆங்கில அரசைச் சாய்ப்பது என்பது அவருடைய கடித்தத்திலிருந்து மிகத் தெளிவாக விளங்குகிறது. அதற்காக தன்னைக் ‘கடையேன்’ என்று சொல்லிக் கொண்டு அவர் எடுத்த முயற்சிதான் ஆஷ் கொலை. அதற்கும் சாதி வெறிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

8 thoughts on “ஆஷ் கொலை”

 1. I was looking for your post on this.

  நான் வாஞ்சியை தலை மேல் தூக்கி தாங்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தத் தருணத்தில் ஆஷ் நினைவு தினம் என்று துக்கம் ஏந்துவது மிக அதிகம்.

  ஆஷ் கொலை ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் வீணாய் போயிருக்கலாம் ஆனால் அதை சாதியம் கொண்டு சாடுவது தவறு.

  Like

 2. வாஞ்சிநாதனை ஒரு சாதி வெறியராக கட்டமைப்பது, அவரது தேசபக்தியை கேள்விக்குள்ளாக்குவதும் ஏற்புக்குடையதல்ல. அவர் அந்த காலத்து சாதிய கட்டமைப்புக்குள் வாழ்ந்த மனிதர் என்றே பார்க்க வேண்டும். சிறிது காலம் முன்னர் வரை கீழ் சாதி பெயரை சொல்லி தங்களுக்குள் திட்டுவது தென்மாவட்டத்தில் இடைநிலை சாதிகளில் சாதாரணம் .ஆனால் என்று அவ்வாறு பொதுவெளியில் பேச அனைவரும் தயங்குவார்கள்.

  நெல்லை சதி வழக்கின் தீர்ப்பின் ஒரு பகுதியில் வரும் வெள்ளைக்கார நீதிபதியின் வாக்கியங்கள் ” இந்த அமைப்பை சேர்ந்த அங்கத்தினர்கள் சாதிய வேறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு சகோதரர்கள் போல் வாழ்ந்தனர் என்பது உறுதிப்படுகிறது “. வாஞ்சியுடன் இருந்தது மேல் சாதியினரும் இடைநிலை சாதியினரும் மட்டுமே, அதற்காக தி.க. வினர் போல மற்றவர்கள் இதை சாதி மேட்டிமையின் கொலையாக பார்ப்பது, இழிவான செயல்தான் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை

  Like

  1. The problem with Aravindan Kanniyan’s line is that he is confusing religion with caste. It is not my case that the guys who were leading Vanchi and Vanchi himself were not religious. They were in fact militantly religious and they were speaking the language of the present-day Hindutva guys. That doesn’t mean however that they were casteist. There was no dispute between them and the Dalits. In fact, I am not even sure Dalits were in their scheme of things. Aurobindo must have been thinking about such issues but not foot-soldiers like Vanchi. Their target was the British and their irrational, murderous hatred against them was very much evident in Vanchi’s letter and the pamphlet which was produced as an exhibit. Both were stridently Hindu but hardly casteist. In fact, none of the heroes mentioned by Vanchi in his letter, Rama, Krishna, Shivaji, Arjuna and Guru Govind Singh, were Brahmins. Also, Aravindan seems to forget an important thing. The murder of Ashe was an act of revenge against the punishment meted out to VOC who was not a Brahmin. Many of the conspirators were not Brahmins. If the bogus theory of Vanchi being angry against the Pro-Dalit action of Ashe is ruled out, which Aravindan too has done, there is no earthly reason for the murder to be on the caste basis.

   Like

 3. The casteist stories cooked up against Vanchinathan, as motivation for Ash’s killing is quite astonishing. The projection of the hatred of the DK half-pennies amplified by social media seems straight out of a George Orwell novel.

  Like

 4. I think the reference to George V as ஜார்ஜ் பஞ்சமன் in his letter is the one sticky point.
  Some have argued it is a straight up translation while critcs have maintained it was a sleight on the lines of the white man being a mlEchchA equivalent to a cow-eating panchama.

  While the other canards (pregnant lady, Kutralam etc) show the calculated campaigns of crooked petty DK minds, the explanation for the usage of the word panchama doesn’t seem convincing.

  Was the usage panchama to refer to ‘the fifth’ a common colloquialism them? Are there any references that back up that claim?

  Like

  1. Even Bharati has used it if I am not wrong. In Malayalam the usage was ஜார்ஜ் நான்காமன். In Hindi it is still George Pancham. Even if he meant to insult the Emperor it doesn’t follow that he was a caste fiend. He was perhaps abominably insensitive. Bharati uses நிர்மூடப் புலையர் as you know. Vanchi in all probability was a normal Brahmin in his speech and writing and the usual Brahmin way of using casteist slurs he too must have possessed, but that had nothing to with the murder of Ashe which was purely political.

   Like

 5. Vanchi was a militant nationalist, that traditional Hindu imagery was used by him is no surprise. After all, even the 1st War of Independence was also also triggered by insults to Hindu and muslim sensibilities as per the Sepoy rebels. Nationalism has many subcurrents , religion being one of them is no surprise. In an intensely religious country like India esp 110 years back , that is in the order of things. He is in the mold of militant nationalists in bengal like jatin or Chapekar brothers in Poona.
  Even A.R. Venkatachalapathy , who went to Ireland to talk to Ash’s descendents, does not see the far more violent Irish war of Independence 100 years back and the split in Ireland was and is between catholic south and Protestant Ulster. Ash , who was of protestant background , would have been spinning in his grave that few years after his death protestants were mostly cleared out of Irish Republic . One assasination is Tamilnadu is making so much news and social tensions shows the poverty of suitable talking points or issues among Dravidian parties and they want to keep muckracking caste issues

  Like

 6. /In Hindi it is still George Pancham/
  Oh, rather seals it.

  /Even if he meant to insult the Emperor it doesn’t follow that he was a caste fiend. He was perhaps abominably insensitive. Bharati uses நிர்மூடப் புலையர் as you know./

  Yes, in fact a few years back there were some assiduous gymnastics by the leader of BJP’s SC Ma.Venkadesan to defend Bharathi’s ஈனப் பறையர்கள் that he only meant the root meaning: weak/pitiable (ஹீன).

  It was quite unnecessary to go that far, especially in the poetic fervour and context of the poem the line did not need that kind of defence. If anything, those who were using it as a cudgel to beat Bharathi were the ones who stood exposed for their pettiness.

  / Vanchi in all probability was a normal Brahmin in his speech and writing and the usual Brahmin way of using casteist slurs he too must have possessed, but that had nothing to with the murder of Ashe which was purely political./

  Yes I agree with this.

  When mentioning this usage, A.Sivasubramanian, doesn’t charge Vanchi with overt casteism but rather shows this reflects a general attitude that actuated those who were drawn to the revolt then – who were from upper castes. And that is indicative of its inherent limitations which would have prevented it from becoming a mass-movement (even without the crackdown).

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s