கிஷோர் கே சுவாமி கைது

பேசியதற்காகவும் எழுதியதற்காகவும் கைது செய்யப்படுவதை நான் என்றும் ஆதரித்ததில்லை. பல ஆண்டுகளாக என் நிலைப்பாடு இதுதான். கறுப்பர் கூட்டத்தினரைக் கைது செய்த போதும் அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று நான் கண்டித்தேன்.
இன்று கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் சாக்கடைத்தனமாகப் பேசியும் எழுதியும் வந்தார் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அவர் வன்முறையைத் தூண்டி விடவில்லை. அவர் மீது வழக்குத் தொடரலாம். வழக்கில் நீதி மன்றம் தண்டனை கொடுத்தால் வரவேற்கலாம். மாறாக அவரை கைது செய்து சிறையில் அடைப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கு நேர்மாறானது. அவர் சாட்சிகளைக் கலைப்பார் என்று கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் அவர் கைது செய்யப்பட்து அவர் பேசியது, எழுதியதின் அடிப்படையில். எனவே எந்த வகையிலும் அவர் கைது செய்யபட்டதை நியாயப்படுத்த முடியாது.

இதை யார் நியாயப்படுத்துகிறார்கள்?

திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள். இவர்கள் அடிப்படையில் ஜனநாயகத்தில் எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள். திராவிடத் தலைவர்கள் பிராமணர்களைப் பற்றியும் பாரதப் பிரதமர் மோதியைப் பற்றியும் திரு எடப்பாடி பழனிசாமியைப் பற்றியும் கொச்சையாகப் பேசப்பட்டபோதும் வரவேற்றவர்கள். வெளிப்படையாக மிரட்டுபவர்கள்

இவரால் அவதூறு செய்யப்பட்ட பெண்கள். இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஆனால் நியாயம் குறுக்குவழியில் வரக்கூடாது. நீதிமன்றம் வழியாகத்தான் வர வேண்டும்.

கலப்படக் கம்யூனிஸ்டுகள். இவர்கள் தினமும் மார்க்ஸை அவமரியாதை செய்கிறார்கள். நாளை தமிழகத்தின் வரலாறு எழுதப்படும் போது இவர்கள் ஹிட்லரியத்திற்குக் குடை பிடித்தவர்கள் என்றுதான் அழைக்கப்படுவார்கள்.

கடைசியாக சில தமிழ்நாட்டின் அரையணா அறிஞர்கள். கீழ்மையின் அடிமட்டத்தை தொட்டு விட்ட பின்னும் இன்னும் கீழே போக மண்ணைத் தோண்டிக் கொண்டிருப்பவர்கள். கனவு இல்லத்திற்காக வாயில் வாளியைக் கட்டிக் கொண்டு காத்துக் கொண்டிருப்பவர்கள்.

இவர்கள் எல்லோரையும் (சில பெண்களைத் தவிர) ஒன்று சேர்ப்பது இன வெறி. ஜனநாயகப் பண்புகளை இவர்கள் தங்களுக்கு வசதியாக இருந்தால் தூக்கிப் பிடிப்பார்கள். இல்லையென்றால் ஒதுக்கித் தள்ளி வ்டுவார்கள். கிஷோர் கே சுவாமி பிராமணராக இருப்பது இவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

வெட்கக்கேடு!

1 thought on “கிஷோர் கே சுவாமி கைது”

  1. நேர்மையான சொற்கள். ‘வாயில் வாளியைக் கட்டிக்கொண்டு காத்திருப்பவர்கள்’ – அருமை. ஆனால், கிஷோர் சாமி பெண்களை மிகவும் கீழ்த்தரமாகவே பேசியுள்ளார். புகார் அளிக்கப்பட்டும், வழக்குகள் நடந்தும் பொருட்படுத்தத்தக்க எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நீதி மன்றங்கள் ஆமை வேகத்தில் செயல்படுவதால் இவ்வகையான அத்துமீறல்களுக்குத் துளிர் விட்டுப் போகிறது.
    அதே நேரம், ஐரோப்பாவில் வரையப்பட்ட கார்ட்டூன் விஷயத்தில் தாங்கள் இந்த நிலையை எடுக்கவில்லை என்பது வருத்தம்.

    Like

Leave a comment