மிகைப்படுத்துவதை ஒரு கலையாக பல ஆண்டுகள் செய்து கொண்டிருப்பவர்கள் திராவிட முன்னேற்றக்கழகக் கோமாளிகள். உதவாக்கரைகளிலிருந்து சிறிது திறமை கொண்டவர்கள் வரை திராவிட இயக்கத்திற்கு கொடி பிடித்தவர்களையும், பெரியாரின் ஹிட்லரிய இனவெறி பிரச்சாரத்திற்கு துணை போனவர்களையும் உலகமகா மேதைகள் போலவும், நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள் போலவும் சித்தரிப்பதில் இவர்களுக்கு ஈடு கிடையாது. இன்று இவர்களுக்கு துணை போகின்றவர்கள் அரையாணா அறிஞர்கள். நேர்மை என்பதைத் துடைத்து விட்டு அலையும் கயவர்கள். கனவு இல்லம் கிடைக்காதா என்ற பேராசையில் மூன்றாம்தர விளம்பரங்கள் எழுதுபவர்களைப் போலச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
1967 லிருந்து இன்று வரை திமுக ஆட்சி இருந்த்து 20 வருடங்களுக்கும் குறைவுதான். எம்ஜியாரும், ஜெயலலிதாவும் பழனிச்சாமியும்தான் தமிழகத்தை மீதி ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். சென்ற பத்து ஆண்டுகளில் தமிழகம் வளர்ச்சியிலும் கல்வியிலும் முன்னிலையில் நிற்கிறது என்று இன்று செய்திகள் வந்திருக்கின்றன. அதிமுகவினர் யாரும் நாங்கள் வானத்தை வில்லாக வளைத்து விட்டோம் என்று புருடா விடவில்லை. அம்மா புகழ் பாடுவது Pavlovian response.
மாறாக திரு ஸ்டாலின் வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. தொற்று பல உயிர்களைக் குடித்து விட்டது. முடிவு என்று வரும் என்பது தெரியவில்லை. ஆனால் திமுக கோமாளிகளும் அவர்கள் அடியாட்களும் உதிரிப் பிரிவினைவாதிகளும் ஏதோ பொற்காலம் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் இருப்பது போலப் பேயாட்டம் ஆடுகிறார்கள். குறிப்பாக திரு ஜெயரஞ்சனையும் திரு தியாகராஜனையும் குறித்து இவர்கள் எழுதுவது குமட்டலை வரவழைக்கிறது. இதை நான் எழுதுவதால் ‘இவன் பார்ப்பான் இப்படித்தான் எழுதுவான்’ என்றும் ‘கதறுங்கள்’ என்றும் அரைகுறைகளும் தற்குறிகளும் பொறுக்கிகளும் வசை பாடுவார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் எழுத வேண்டிய கட்டாயம். யாராவது உண்மையைச் சொல்ல வேண்டும்.
திரு ஜெயரஞ்சனைப் பற்றிய தகவல்களை கூகிள் ஸ்காலரில் தேடினேன். சர்வதேச அளவில் அவர் எந்த குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிக் கட்டுரையையும் எழுதியதாகத் தெரியவில்லை. எழுதியிருந்தால் சுட்டிக் காட்டவும். திருத்திக் கொள்கிறேன். ஆனால் பில்லியன் என்றால் எத்தனை கோடி என்று எனக்குத் தெரியாது என்று அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். திமுகவின் ஊதுகுழலாகவும் பிராமண வெறுப்பைத் தூக்கிப் பிடிப்பவராகவும் செயல்பட்டிருக்கிறார். அவருடைய விடியோக்கள் சிலவற்றைப் பார்த்தேன். நான்காம்தர திராவிடப் பேச்சாளருக்கும் அவருக்கும் அதிக வித்தியாசம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தடாலடியாக அடித்து விடுவதை இயல்பாகச் செய்கிறார். உதாரணமாக மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதம் தேவை என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது என்று சொல்கிறார். எப்போது சொல்லப்பட்டது? யார் சொன்னார்கள்? எந்தத் தரவும் கிடையாது. நான் பல ஆண்டுகளாகத் தரவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இது போன்று பெரியார் திடல் உளறல்களை வாந்தி எடுக்கிறவர்தான் திராவிடப் பொருளாதார மேதை.
திரு ஜெயரஞ்சன் மேதையாக இருக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் வேண்டியதில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர் மிகத் திறமையோடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் தலைவராகச் செயலாற்றலாம். தமிழக மக்கள் நன்மை பெற உறுதுணையாக இருக்கலாம். அப்படி நடந்தால் அவருக்கு பாராட்டுகளை அளிப்பதில் நான் முதலில் நிற்பேன். ஆனால் அதனால் அவரை வானத்து அமரரைப் போலத் தூக்கிப் பிடிப்பதை எந்த வெட்கமும் இல்லாத திமுகவினராலும் அவர்களின் அடியாட்களாலும்தான் செய்ய முடியும். எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்த அளவிற்கு மேல் திறமையாகச் செயல்படவில்லையா? அவரை அரசியல் மேதை என்றோ, உலக அரசியல்தலைவர்களில் ஒருவர் என்றோ அதிமுக தூக்கிப் பிடித்த்தாகத் தெரியவில்லை.
ஆனால் திரு ஜெயரஞ்சனுக்கும் அவருடைய குழுவினருக்கும் அறிவுரைகள் வழங்கும் உரிமைகள் இருக்கின்றனவே தவிர அதிகாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த அளவு சுதந்திரமாக அவரும் அவருடைய குழுவினரும் செயல்பட முடியும் என்பதும் கேள்விக் குறியாக இருக்கிறது.
அடுத்தவர் திரு தியாகராஜன்.
திராவிடக் குஞ்சுகளும் அரையணா அறிஞர்களும் அவருக்கு மோசஸைப் போல அறிவுக் கொம்புகள் இருக்கின்றன என்று சொல்லாததுதான் மிச்சம். மீதி எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள்.
திரு சுந்தர் பிச்சைக்கு திரு மோதி இந்தியக் குடியுரிமை கொடுத்து நிதி அமைச்சராக நியமனம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். திராவிட முன்னேற்றக கழகமும் கலப்படக் கம்யூனிஸ்டுகளும் எவ்வளவு பெரிய ஆட்டம் ஆடுவார்கள்? “இவர் யார்? இவருடைய பின்புலம் என்ன? கார்ப்பரேட் கைக்கூலியாக இருந்தவருக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு? பூணூல் போட்டால் பழையதெல்லாம் மறந்து விடுமா? அமெரிக்காவில் இருந்து விட்டு வந்தால் போதுமா? ஆங்கிலம் அழகாகப் பேசத் தெரிந்தால் போதுமா?” போன்ற பல கேள்விகள் எழும். எல்லாம் முட்டாள்தனமான, அரைகுறைப் புரிதல்கள் இருப்பவர்களின் கேள்விகளாக இருக்கும். இவை போன்ற கேள்விகளை திரு தியாகராஜனைக் குறித்தும் எழுப்ப முடியும். “இவர் யார்? இவர் பின்புலம் என்ன? கார்ப்பரேட் கைக்கூலியாக இருந்தவருக்கும் தமிழகப் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு? முதலியாராக இருப்பதால் பழையதெல்லாம் மறந்து விடுமா? அமெரிக்காவில் இருந்து விட்டு வந்தால் போதுமா? ஆங்கிலம் அழகாகப் பேசத் தெரிந்தால் போதுமா?” போன்ற கேள்விகள். இவற்றை கழகத்தவர் யாரும் எழுப்ப மாட்டார்கள். திமுகவினருக்கும் அவர்கள் அடியாட்களுக்கும் என்றுமே தங்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு இன்னொரு நீதி. பெரியார் காலத்திலிருந்தே நேர்மை என்பதைப் பசையறத் துடைத்து விட்டு அலையும் கூட்டம் அது.
யோசித்துப் பாருங்கள்.
நிர்மலா சீதாராமன் திமிராகப் பேசுகிறார் என்று இவர்கள் வரிந்து வரிந்து எழுதவில்லையா? தியாகராஜன் அவர்கள் திருமதி சீதாராமனை விட பத்து மடங்கு திமிராகப் பேசுகிறார். இன்னும் பண்ணையார் போலத்தான் பேசுகிறார். இவர் தாத்தா யாராக இருந்தாலும் நமக்கு என்ன? பிரிட்டிஷ்காரனுக்கு துடைத்து விட்டுக் கொண்டிருந்த நீதி கட்சியில் அவர் இருந்தார் என்பது எவ்வாறு பெருமைக்கு உரியது? Low IQ என்றால் என்ன பொருள்? IQவை எது தீர்மானிக்கிறது? 80% சதவீதம் பிறப்புதான் தீர்மானிக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்லவில்லையா? பிறப்பு தீர்மானிக்கிறது என்றால் சமூகநீதி என்னவாயிற்று? வானதி ஸ்ரீனிவாசன் IQ பற்றிப் பேசுவது அடிப்படை நாகரிகத்திற்குப் புறம்பானது சமூகநீதிக்குப் புறம்பானது என்று இவருக்கு ஏன் தெரியவில்லை? இது போன்ற கேள்விகளைத்தான் அறவுணர்வு என்பது சிறிதளவாவது இருப்பவர்கள் கேட்பார்கள். ஆனால் திராவிட அரைகுறைகளுக்கு அவர்களுக்குத் தெரிந்த “சரி, சரி, கதறாதீர்கள்” என்றுதான் சொல்ல முடிந்தது.
திரு தியாகராஜன் திறமையாகச் செயல்பட மாட்டார் என்று நான் சொல்லவரவில்லை. அவர் திறமையாக, தமிழ்மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட்டால் Low IQ இருப்பவர்களும் அவரை வாழ்த்துவார்கள்.
இனி வரவு செலவிற்கு வருவோம்.
திமுகவினரும் அரையணா அறிஞர்களும் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். இதுவரை திரு ஸ்டாலின் அறிவித்தவற்றை எல்லாம் செலவு கணக்கில்தான் எழுத வேண்டும். வருவாய்க்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யாரும் அதிகம் பேசியதாகத் தெரியவில்லை. நான் பேச முயற்சிக்கிறேன்.
அரசின் வருவாய் முக்கியமாக ஐந்து விதங்களில் வரும்.
- மத்திய அரசிடம் இருந்து வருவது
- தமிழக அரசின் வரிப்பணத்தில் வருவது.
- கடன் வாங்கியதால் வருவது
- இருக்கும் அரசு சொத்துக்களை விற்பதால் வருவது.
- அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கிடைக்கும் லாபத்தால் வருவது.
இதில் பொதுத்துறை நிறுவனங்களை மறந்து விடலாம். நமது மின் துறை நிறுவனங்கள் மட்டும் ₹ ஒரு லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்குகின்றன.
இன்றைய தமிழகத்தில் 39 சதவீதம் GST மூலம் வருகிறது 38 சதவீதம் மாநில விற்பனை மற்றும் VAT மூலம் வருகிறது. 11 சதவீதம் பத்திர பதிவு 5 சதவீதம் வாகனப் பதிவு. எக்ஸைஸ் ட்யூடி 6 சதவீதம். உதிரி வருமானம் 1 சதவீதம். இவை எல்லாமே குறைய வாய்ப்பிருக்கிறது.
தமிழக அரசு வரிகளை கணிசமாக அதிகரிக்க முடியாது. கடன் வாங்கலாம். சொத்துக்களை விற்கலாம். ஆனால் விற்றப்பணத்தை கொண்டு என்ன செய்வது? அரசின் வருமானம் சம்பளம், ஓய்வூதியம் வட்டி செலுத்துதல் போன்றவற்றில் 65% சதவீதத்திற்கும் மேல் செலவிடப் படுகிறது. இதில் மிஞ்சுவது 35%. அதில்தான் கட்டுமானப் பணிகளுக்குச் செலவு செய்ய வேண்டும். கடன் வாங்கும் தொகையில் பெரும் பகுதியைக் கட்டுமானப் பணிகளுக்குச் செலவிட்டால் எதிர்காலம் நன்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது. சென்ற ஆண்டு அதிமுக அரசு கட்டுமானப் பணிகளுக்கு மிக அதிகமாகச் செலவிட்டது. Revised estimates for capital expenditure this year are 8.72% higher than original Budget estimates and 58.65% higher than that incurred in 2019-20, என்று தி இந்து சொல்கிறது.
தியாகராஜன் அவர்கள் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ₹ 5.7 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு அவரால் அதிகம் ஏதும் செய்ய முடியாது – அரசு ஊழியர்கள, ஆசிரியர் சம்பளங்களிலும் ஓய்வூதியங்களிலும் மாற்றங்கள் செய்தால் ஒழிய. உதாரணமாக அகவிலைப்படி 2021 ஜூலையில் 32 சதவீதமாக உயர வாய்ப்பு இருக்கிறது. இதை அமலுக்குக் கொண்டு வந்தால் இப்போது செலவிடுதை விட 15% அதிகம் செலவிட வேண்டும். குறைந்தது ₹ 15000 கோடி தேவைப்படும். இது போன்ற செலவினங்களை அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்துதான் திரு தியாகராஜன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை அளவிட முடியும்.
திமுகவினர்கள் பொறுத்திருக்க வேண்டும்.
ஒரு வேளை திரு ஜெயரஞ்சனுக்கு பொருளாதாரத்தில் நோபல் பரிசு கிடைக்கலாம். திரு தியாகராஜனின் திறமையைக் கண்டு வியந்து உலக வங்கி அவரைத் தலைமை தாங்க அழைக்கலாம். அப்படி நடந்தால் தமிழர்களுக்குப் பெருமை என்று நானும் திமுகவினருடன் சேர்ந்து மகிழ்ச்சியடைவேன். இன்று கூவுவதற்கு ஒன்றும் இல்லை.
தியாகராஜனின் பேச்சுகள், குறிப்பாக ஜக்கி வாசிதேவ் பற்றிப் பேசியவை, தரக்குறைவாக உள்ளன. நிதி அமைச்சர் பல முறை அற நிலையத் துறை பற்றியே பேசியுள்ளார். ‘தமிழ் இனம்’ என்றும் பேசுகிறார். மொழி வழி இனம் அமைவது தற்போதைய அறிவியல் முறைகளின் படி சாத்தியம் இல்லை என்று அவருக்கு யாராவது சொல்லவேண்டும். லேமேன், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிகளில் பணி புரிந்ததும், ஆங்கில பேசுவதும் தகுதி என்றால் எனக்கும் அந்தத் தகுதி உண்டு. தவிரவும், அற நிலையத்துறை அமைச்சர் மருத்துவம் பற்றிப் பேசுகிறார். கூடுதலாக வட இந்தியர்களை மிரட்டுகிறார். கல்வி அமைச்சர் எந்தப் புரிதலும் இல்லாமல் பத்மா சேஷாத்ரி பள்ளியை அரசு எடுத்துக்கொள்ளலாம் என்கிறார். திறமைக் குறைவா, பொய்யான அதிமேதாவித்தனமா என்பது புரியவில்லை.
LikeLike