பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?

பத்மா சேஷாத்திரி பள்ளியைக் குறித்து திரு சுப்ரமணியன் சுவாமி ஆளுனருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் நாட்டின் பிராமணர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதியது:

The targetting of Brahmins in the state and the verbal terrorizing of this hapless disorganized community is very much like as happened during the early period of Nazi government led by Hitler in Germany.

நான் திரு சுவாமியோடு உடன்படவில்லை. ஹிட்லரின் முதலாண்டுகளில் நடந்ததுதான் இப்போது நடப்பது என்ற கூற்றோடு நான் ஒத்துப் போகவில்லை. இன்று வரை அரசு பிராமணர்களுக்கு எதிராகவோ, அல்லது தமிழ்நாட்டின் எந்த சமூகத்திற்கும் எதிராகவோ நடந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. திரு ஸ்டாலின் மிகத் தெளிவாக இது எல்லோருக்குமான அரசு என்று சொல்லியிருக்கிறார். அவர் தன் சொல்லை மீறமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் நீர்த்துப் போகவில்லை.

ஆனால் ஸ்டாலினே 3 சதவீதம் என்று பேசியிருக்கிறார் என்பதை எளிதாக மறந்து விட முடியாது. திமுகவினர் பலர் பிராமணர்களை ஒரு கை பார்த்து விடுவோம் என்று சமூக ஊடகங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதி வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக திராவிட இயக்கத்தின் மூலவரான பெரியார் மிகத் தெளிவாக நான் ஒழிக்க விரும்பவது பிராமணர்களைத்தான் பிராமணத்துவத்தை அல்ல என்று பல தடவைகள் சொல்லியிருக்கிறார். எனவே பெரியாரைத் தூக்கிப் பிடிக்கும் எந்த இயக்கத்தையும் ஹிட்லரின் நாஜி இயக்கத்தோடுதான் ஒப்பிட்டுப் பேசுவதில் எந்த வியப்பும் ஏற்பட முடியாது. திராவிட இயக்கத்தினர் நாங்கள் ஒரு சாதியைக் குறிப்பிட்டுப் பேச மாட்டோம் என்று சொல்லும் வரை, அவர்கள் மீது ஹிட்லரின் நிழல் விழுந்து கொண்டுதான் இருக்கும். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் திரு விஜயசங்கர் திராவிட நாஜிகள் என்று சொல்வது அயோக்கியத்தனம் என்று திரும்பச் சொல்லியிருக்கிறார். அடிப்படை நேர்மையையோடு மார்க்சியத்தையும் விலைக்கு கொடுத்து விட்ட மண்ணாங்கட்டி மார்க்சியர்களால் மட்டுமே இது போன்று எழுத முடியும். இது மார்க்சியத்திற்குச் செய்யப்படும் வெட்ககரமான துரோகம். நாஜிகளைப் போன்று பேசுபவர்களை நாஜிகள் போன்று பேசுகிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். உதாரணமாக திரு கரு. பழனியப்பனும் திரு சுப. வீரபாண்டியனும் பேசிக் கொள்ளும் விடியோ ஒன்றைப் பார்த்தேன். பத்து ஆண்டுகளில் பிராமணர்களின் மூக்கு வெளுத்து விட்டதாம. பிராமணர்களை அரசு அண்ட விடக் கூடாதாம். இது அப்பட்டமான நாஜிப் பேச்சு. இனவெறிப் போதையில் இருப்பவர்கள் பேசும் பேச்சு. தமிழ் பிராமணர்கள் பிரச்சினைகளை திமுக அரசு கண்டு கொள்ளக் கூடாது என்பதை இவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெளிவு. இவர்கள் நாஜிகளைப் போலப் பேசுகிறார்கள் என்றால் அழித்தொழிப்பு எங்கே நடந்திருக்கிறது என்று கேட்பது வரலாற்றை அறியாதவர்கள் கேட்கும் கேள்வி. அவ்வாறு நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் திராவிட இயக்கத்தினரிடம் பெரியாரின் பிராமண வெறுப்பு நிலைப்பாடு அப்பட்டமான நாஜிகளின் நிலைப்பாடு அதை நீங்கள் தூக்கிப் பிடித்தால் நீங்களும் நாஜிகள்தாம் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய கட்டாயம் வரலாற்றை அறிந்தவர்களுக்கும இருக்கிறது. குறிப்பாக உண்மையான மார்க்சியர்களுக்கு இருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன்.

இவ்வாறு சொல்வதனால் இன்று தமிழகத்தில் நாஜி ஆட்சி நடக்கிறது என்ற பொருளல்ல. தமிழகத்தில் இன்று நடப்பது மக்களாட்சி. திரு ஸ்டாலின் மக்களாட்சி கொள்கைகளுக்கு எதிராக இன்று வரை நடந்து கொள்ளவில்லை. தமிழ் பிராமணர்கள் தங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய உரிமைகளை ஜனநாயக வழியில் அமைதியாகப் போராடிப் பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதனால்தான் திராவிட நாஜிகள் பேசுவதையும் செய்வதையும் அரசின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் நாஜி கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவருக்கும் இருக்கிறது. பிராமணர்கள் தமிழ்நாட்டில் இருக்க, அரசு வேலைகளில் தங்களுக்கு உரிய பங்கை கேட்க எல்லா உரிமைகளும் இருக்கிறது. அரசும் அவ்வுரிமைகள் பிராமணர்களுக்குக் கிடையாது என்று சொல்லவில்லை.

இந்த நோக்கில் பார்க்கும் போது திரு சுவாமி எழுதியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, எந்த மாநில அரசையும் அரசியல் சட்டம் எண் 356ல் கீழ் கலைப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.

இனி பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு வருவோம்:

பள்ளி நிர்வாகம் இதுவரை தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். நான் பலதடவைகள் சொல்லியிருப்பது போல பாலியல் அத்துமீறலை இன்று கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது நிர்வாகம் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமமானது. எந்த நிர்வாகமும் அவ்வாறு செய்யாது. ஆனால் எந்த நிர்வாகமும் விசாரணை செய்யாமல் ஒருதலைப் பட்சமான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அமைச்சர் மகேஷ் கூட திரும்பத் திரும்ப, நல்ல ஆசிரியர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சாட்டப்படுவதையும் அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனவே தீர விசாரிக்காமல் திரு ராஜகோபாலனைக் கழுவில் ஏற்றுவது தவறு.

பள்ளியின் அறிக்கை இது:

Padma Seshadri School acts swiftly, extends full cooperation to authorities. Padma Seshadri’s KK Nagar School, where a male teacher has allegedly behaved in an inappropriate behaviour with students, has moved swiftly to suspend the teacher and take appropriate steps to avoid recurrence in the future. The issue was first brought to the School’s attention through Social Media. A formal enquiry into the conduct of the teacher has been initiated, and the School will take the necessary action based on the findings. The School welcomes all assistance from the concerned authorities to deal with this situation and take needed action.

Said Mrs Geeta Govindarajan, Principal, PSBB KK Nagar School: “We have never received any written complaint on this matter from anyone. The behaviour of one teacher does not in any way detract from the highest standards of professionalism that our teachers uphold. For us, our students’ welfare is absolutely sacrosanct.”

இவ்வறிக்கையில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

வாய்வழியாக ஏதாவது நிர்வாகத்திற்குப் புகார் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுவது இயற்கை. வாய்வழியாக யாரிடம் புகார் செய்யப்பட்டதா, அது நிர்வாகத்திடம் போய்ச் சேர்ந்ததா என்பதெல்லாம் விசாரணையின் போதுதான் வெளி வரும். பள்ளி நிர்வாகம் மெத்தனமாக நடந்து கொண்டது என்பது விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நானும் வலியுறுத்துகிறேன். அதற்கு முன்னால் அலறுவதைத்தான் அப்பட்டமான நாஜி வெறிக் கூச்சல், பிராமணர்கள் மீது இருக்கும் அடிப்படை வெறுப்பினால் எழுவது என்று நான் சொல்கிறேன்.

இனி பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்குவது பற்றி.

என்னைக் கேட்டால் எல்லாப்பள்ளிகளையும் அரசுதான் நடத்த வேண்டும் என்று சொல்லுவேன். ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாது என்பது எனக்குத் தெரியும். என் கருத்தை மக்கள் மீது திணிக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். மேலும் பள்ளி தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஓரளவு ஏற்ப நடந்து கொள்கிறதா என்பதைத் தீர்மானிப்பவர்கள் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள். எனவே பதமா சேஷாத்திரி பள்ளி சரியாக நடக்கிறதா இல்லையா என்பதை அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்களிடம் மட்டும் இல்லை, தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் எல்லாப் பெற்றோர்களையும் கேட்க வேண்டும்.

உண்மையாகவே சரியாக நடத்தப்படாத பள்ளிகளை அரசுடைமை ஆக்கப் படவேண்டும் வேண்டும் என்று அரசு நினைத்தால், ஒவ்வொரு தனியார் பள்ளிகளின் படிக்கும் குழந்தைகளின் தாய் தந்தையரிடம் அப்பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா வேண்டாமா என்பதைக் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பெரும்பான்மையான தாய் தந்தையர் அவ்வாறு நினைத்தால் மட்டுமே பள்ளிகள் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். இது பத்மா சேஷாத்திரி பள்ளிக்கும் பொருந்தும். மற்றைய தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

பத்மா சேஷாத்திரி மட்டும் குறி வைத்து அதை மட்டும் அரசுடைமை ஆக்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான் நாஜி நிலைப்பாடு. இதை எந்த வெட்கமும் இன்றிச் செய்துக் கொண்டிருப்பவர்களை திராவிட நாஜிகள் என்றுதான் அழைக்க முடியும். இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் மார்க்சியர்களை மண்ணாங்கட்டி மார்க்சியர்கள் என்றுதான் அழைக்க முடியும்.

1 thought on “பத்மா சேஷாத்திரி பள்ளியை அரசுடைமை ஆக்க வேண்டுமா?”

 1. /நாஜிப் பேச்சு/
  அப்பட்டமான வெறுப்பு பேச்சு, ஓரவஞ்சனைகளை மட்டும் வைத்து அளவிடுவது மிக தாட்சண்யமான பார்வை.  திராவிட கருத்தியலுக்கும் லிபரல் சமுதாயத்துக்கும் அடிப்படை முரண் உண்டு என்பது பற்றியே   பரவலான புரியாமையும், புரிந்தவர்களிடையே கள்ளமௌனமும் தான் காண்கிறோம்.

  அப்பட்டமான வெளிப்பாடு தவிற, பொதுவெளியில் நார்மலைஸ் ஆகிவிட்ட வெறுப்பு பேராபத்து.
  ஒரு உதாரணம்:
  சென்ற ஆட்சியில்  இசைக்கல்லூரி’க்கு முதல்வராக ‘பிரமிளா குருமூர்த்தி’ நியமிக்கப்பட்டார்.   அவரை விட தகுதி இருந்தும் தான் தேர்ந்தெடுக்கபடாததற்குக் காரணம் தான் பிராமணராக இல்லாதது தான் என்று புஷ்பவனம் குப்புசாமி குற்றம்சாட்டினார்.

  தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் பாண்டியராஜன் இதற்கு பதிலளிக்கையில் ‘தகுதி அடிப்படையில் தான் பிரமிளா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும். அத்துடன் அவர் பிராமணர் இல்லை எனவும் தெளிவுபடுத்தினார்’.

  பாண்டியராஜன் பாஜக’வில் இருந்தவர். ஹிந்துத்வ சார்புடையவராக அறியப்பட்டு அதனாலேயே திராவிடத் தரப்பால் வெறுக்கப்பட்டவர். 

  ஆனால் அவரே ‘இன்னார் பிராமணர் அல்லர்’ என்று சொல்வதில் எந்தவித தயக்கமும் காட்டவில்லை.
  அதாவது,  நாளை அப்பதவிக்கு – எப்பதிவுக்கும் – ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், இத்தகைய குற்றச்சாட்டுகளில் உள்ளீடு இருப்பதாகக் கொள்ளலாம், என்றே அச்சொற்கள் குறிக்கின்றன. இது அவருக்குப் புரியாமல் இல்லை.
  ஒரு அமைச்சர், திராவிட கருத்தியலை வாயளவிலேனும் ஒதுக்கும் ஒருவர், திராவிடத்தின் எதிர்விசையின் கைப்பாவை என்று விமர்சிக்கப்படுபவரின் சொற்கள் இவை.

  Is there any liberal society ,where such hate-fueled discourse is normalised like this? 
  And worse, the proponents of such a discourse revel in a genuine delusion that they are progressive chaps!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s