பெருமாள் முருகனின் கவிதை

பஞ்சமர் என்றீர்கள்

சூத்திரர் என்றீர்கள்

வேசி மக்கள் என்றீர்கள்

வைப்பாட்டி பிள்ளைகள் என்றீர்கள்

கீழ்மக்கள் என்றீர்கள்

உங்கள் மொழியில் எத்தனை வசவுகள்

உங்கள் மொழி நாகரிகமற்றது

உங்கள் மொழி ஆபாசமானது

உங்கள் மொழி கேவலமானதுஉங்கள் மொழியை

ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது

இன்று என் சகோதரன்

கோபக் கணமொன்றில்

உங்களை நோக்கி

உங்கள் குரைக்கும் தன்மை கண்டு\

‘நாய், வெறிநாய்’ எனக் குறிப்பிட்டான்

உங்கள் மொழி இழிவானது

உங்களை நோக்கிக்கூட

உங்கள் மொழியை

ஒருபோதும் பயன்படுத்தக் கூடாதுதான்

ஆனால் எங்களுக்கோ

அப்படி ஒரு மகிழ்ச்சி

அப்படி ஒரு துள்ளல்

அப்படி ஒரு சமாதானம்

சகோதரன் முகத்தில் தெரிந்தது

வரலாற்றுக் கோபம் அல்லவா?”

இது பெருமாள் முருகனின் கவிதை.

அப்படியா?

வரலாற்றுக் கோபத்தை யார் மீது வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதாவது முன்னோர்களை இழிவு படுத்தினார்கள் என்று இவர் நினைக்கும் சாதியில் பிறந்த அனைவர் மீதும் வெளிப்படுத்தலாம் என்பதைக் இக்கவிதை தெளிவாக்குகிறது. காலச்சுவடு கண்ணன், இவர் புத்தகங்களை மொழிபெயர்த்து உலகமறியச் செய்த அனிருத்தன் வாசுதேவன், கல்யாண் போன்றவர்கள் மீதும் வெளிப்படுத்தலாம்.

உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி, துள்ளல், இருக்கும். ஏனென்றால் உங்கள் கோபம் வரலாற்றுக் கோபம். என்ன, வெளிப்படையாக இது போன்று கவிதை எழுத முடியாது. அவ்வளவுதான்.


இதே போன்ற வரலாற்று நோக்குடைய இந்துத்துவர் இஸ்லாமியரைக் குறித்து கவிதை எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம்

உங்கள் செயல் இழிவானது

உங்களை மீது

உங்கள் செயலை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாதுதான்

ஆனால் எங்களுக்கோ

அப்படி ஒரு மகிழ்ச்சி

அப்படி ஒரு துள்ளல்

அப்படி ஒரு சமாதானம்

சகோதரன் முகத்தில் தெரிந்தது

வரலாற்றுக் கோபம் அல்லவா?”

இப்படி இஸ்லாமியர்கள் மீது இந்துத்துவர் எழுதினாலும் அதை எதிர்த்துப் பேச இக்கவிதையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் யாருக்கும் தகுதியில்லை. பெருமாள் முருகனுக்கும் தகுதியில்லை. இவர் நாவலை எதிர்த்து சாதியைத் தூக்கிப் பிடித்துப் போராடியவர்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தங்கள் சாதியை தாங்குகிறார்கள். இவர் இனவெறியைத் தாங்குகிறார். அவ்வளவுதான். வரலாற்றுக் கோபம் என்பதெலாம் புருடா. அது இனவெறி அம்மணத்தை மறைத்து கொள்ள உதவும் என்று அவர் நினைக்கும் கோவணம். ஆனால் அது எதையும் மறைக்கவில்லை.

ராஜாவை இந்துத்துவ வெறியராக அடையாளப்படுத்துவதும் அவரை பிராமணராக அடையாளப்படுத்துவதும் வேறு என்று தெரியவிட்டால் மலினமான திராவிடச் சண்டியருக்கு இருக்கும் புரிதல்தான் பெருமாள் முருகனுக்கு இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இருக்காது. அதிலும் திரு தியாகராஜன் மிகப் பெரிய நிலவுடமைச் சமூகத்திலிருந்து வந்தவர். இவருடைய முன்னோர்கள் பஞ்சமர்களையும் உழைக்கும் இதர ஒடுக்கப்பட்ட சாதிகளையும் எப்படி நடத்தியிருப்பார்கள் என்பதைப் பற்றி நான் சொல்லத் தேவையேயில்லை. எனவே இது வரலாற்றுக் கோபம் அல்ல. மனதிற்குள் கனன்று கொண்டிருந்த இனவெறி இன்று திமுக அரசு வந்ததும் வெளியில் வருகிறது. அவ்வளவுதான்.

பெருமாள் முருகனுக்கு ஒரு பரிந்துரை. இக்கவிதையை திரு கிருஷ்ணா அவர்களைப் பாடச் சொல்லி பதிவு செய்யுங்கள். திராவிடக் கழக, திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சாரக் கூட்டங்களுக்குப் பயன்படும். பெரியாரின் அழித்தொழிப்புப் பிரச்சார ஒலிநாடாவுடன் இசைந்து ஒலிக்கும்.

5 thoughts on “பெருமாள் முருகனின் கவிதை”

 1. இது ‘கவித’யா ? ‘கவித’ எழுதுவது இவ்வளவு எளிது என்று இப்போதுதான் கண்டுகொண்டேன்.

  Like

 2. The political ascendancy of the BJP made many liberals initially make peace with the DMK as some sort of strategic defence in TN. But gradually all that pretence of hand-wringing reluctance eroded and recrudescence of the 60s era bigotry of DMK came to the fore.

  The uninhibited bigotry currently expressed is testament to the fact that it had never gone anywhere; it had remained barely sheathed under a thin veneer all along. Or to misquote CNA’s florid parliamentary expression: ‘we will not go underground, but our sullen discontent will’

  DMK has discovered that bigotry reaps rich electoral rewards. Stalin’s very opening remarks in the Erode mAnAdu referred to the ‘3% who have been oppressing us(!) for 2000 years’. The whole election was posited as a sort of civilisational battle. The bigot bard Bhārathidāsan was brought out from cold storage and his lines were used in electoral ad as an anthem (பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்..). This was something not seen in the rather post-ideological political space that TN had come to become over the decades.

  Many, otherwise seemingly reasonable folks too, don’t seem to have any qualms acquiescing with this blatant bigotry, or seem to have developed the developed the talent to deftly look the other way. I used to think this refusal to question, is only reluctance to be seen as emboldening the Hindutva side. But now, I think there is a serious animus even among the elite that is finding uninhibited expression rendered permissible, indeed even socially rewarding, in the new environment.

  The ‘us’ and ‘them’ are hollow, but is imbued with a certain legitimacy when it comes from these ‘intellectuals’. Even your usage of the word ‘இனவாதம்’ is for the lack of the better word. The very usage signals an in-limini acknowledgement of the tension being racial, when the whole thing is utterly bogus. I can’t think of any parallels at all to this. All other bigotries have at least some sort of religious, racial basis. But a completely imaginary cleavage and false monolithization of the other (both oppressed and oppressor are in one category!), having such an extraordinarily long political run must be simply without parallel in the world.

  What particularly gets my goat is how the Dravidianism supporters feel absolutely no dissonance whatsoever in strutting like progressives while critiquing Hindutva and Nam Tamilar Nazis, when their own foundational principles are right out of the Nazi textbook!

  Journalists gloat over a brahmin-free assembly.
  Mainstream journalist tweets comparing the similarity in vaccine uptake among Jews and Brahmins.
  The self-proclaimed liberals who otherwise support these chaps found such a blunt mention embarrassing. But this is not a ‘off-key’ turn. It is perfectly consistent with Dravidian ideological core.

  One can only imagine the liberal supporters have not read what EVR and CNA have themselves written invoking the Brahmin-Jew comparisons.

  The ideological conquest of Dravideology is so complete that even the Congress and Communists speak the same tongue as the Dravidians. One would expect at least the Communists to speak in terms of dialectics when talking about history and evolution of social systems, with some sort of rigour. But they are hopelessly indistinguishable from the average DK pamphleteers.

  It is only a matter of time before the BJP pivots to the electorally rewarding strategy in Tamilnadu to stoke the animus rather than bother to counter it. For starters, BJP too doesn’t bother to change the fraudulent mistranslation of Backward to பிற்படுத்தப்பட்ட even in their intra-party organization structure.

  Like

 3. PM completely unmasked. Strange psychology this is, coming from a person who was humiliated by casteist pride and rationalize everything as Brahmin hatred. What will he say to his Brahmin friends? Or, more importantly what will his Brahmin friends not say to him?…

  Like

 4. வணக்கம். ஏதோ பேரதிச்சி போல் எழுதியுள்ளீர்கள். பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நூல் கருத்துச் சுதந்திரம் என்கிற அளவுகோலில் வெளிவந்தே ஆக வேண்டும், படைப்புச் சுதந்திரம் என்றும் தாங்கள் எழுதினீர்கள். காலச்சுவடும் அப்படியே நின்றது. அப்போதும் பெருமாள் முருகன் எழுதியதும், தற்போது ‘கவிதை’ என்கிற பிம்பத்தின் பின் நின்று ( அரசின் விருத்துக்காக என்று ஜெயமோகன் சொல்கிறார்) எழுதுவதும் ஒரே தரமே. அவரிடம் மாற்றம் இல்லை. அவரது எழுத்துக்களுக்காக, ஒரு குறிக்கோளோடு காலச்சுவடு அவரது நூல்களைத் தூக்கிப் பிடித்து, உலகறியச் செய்து கொண்டாடியது. தற்போது இக்கவிதையையும் ஒரு தொகுதியாகக் கொண்டு வந்து வெளியிட்டு, ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்து அழகு பார்க்கலாம். கருத்துச் சுதந்திரம் ஆயிற்றே, விட்டுவிட முடியுமா என்ன?

  Like

  1. இதுதான் இந்துத்துவத் திமிர்த்தனம். நேர்மையே இல்லாத கயமை. கருத்துச் சுதந்திரம் என்பதும் எழுதுவதை விமரிசிப்பது என்பதும் வேறு என்பது அரைகுறைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும். ஆனால் இந்துத்துவ வெறியர்களுக்குத் தெரியாததில் வியப்பே இல்லை.

   Like

Leave a Reply to dagalti Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s