நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி

நேற்று நடந்த விவாதத்தில் நான் திரு வெங்கடேசனைக் குறை சொல்ல மாட்டேன். அவர் அரசியல்வாதி. கீழடி அரசியல் அவருக்குப் பிழைப்பு. ஆனால் ராஜவேலு அவர்கள் தொல்லியல் துறையில் பேராசிரியராக இருந்திருக்கிறார். அவர் பேச்சுத்தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. கரிமப்பகுப்பாய்வு பற்றிய இப்படி ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருப்பார்?

நான் என்னுடைய வாதத்தை மறுபடியும் தெளிவாக வைக்கிறேன்.

1. கீழடியில் பகுப்பாய்வு செய்யப்பட்டது கரித்துண்டு. கரித்துண்டின் வயது என்ன என்பதுதான் கண்டறியப்பட்டது. அதன் வயதை சுற்றியிருக்கும் பொருட்கள் மீது ஏற்ற முடியாது.
2. ஏன் அவ்வாறு சொல்கிறேன்? நான் சொல்லவில்லை. அகழ்வாராய்வு பாடப்புத்தகம் சொல்கிறது? We can never date archaeological sites by simple equivalences. The radiocarbon lab, for instance, takes a chunk of charcoal and tells you how long ago that tree died. By itself, this date says nothing important about your site. However, if we can show that the charcoal came from a tree used as a roof beam in a pueblo, then we have a date that matters – page 90, Archaeology, Kelly and Thomas. எனவே கரித்துண்டின் வயது பொருட்கள் கிடைத்திருக்கும் தளம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருக்க முடியாது என்ற தகவலை மட்டும் அளிக்கிறது. அது நிச்சயமாக தளத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் கரித்துண்டின் வயதுதான் என்று சொல்லவில்லை.
3. இன்னொன்று. அகழ்வாராய்ச்சியின் அடிப்படை விதிகள் இவை:
Archaeological stratigraphy is based on a series of axiomatic principles or “laws”. They are derived from the principles of stratigraphy in geology but have been adapted to reflect the different nature of archaeological deposits. Harris notes two principles that were widely recognised by archaeologists by the 1970s:
The principle of superposition establishes that within a series of layers and interfacial features, as originally created, the upper units of stratification are younger and the lower are older, for each must have been deposited on, or created by the removal of, a pre-existing mass of archaeological stratification.
The principle that layers can be no older than the age of the most recent artefact discovered within them. This is the basis for the relative dating of layers using artefact typologies.

அதாவது, ஒரு கலைக்கப்படாத அடுக்கில் (கலைக்கப்படாத என்பது முக்கியமானது) மேல் தளங்கள் வயதில் இளையவை கீழ்த்தளங்கள் வயதில் மூத்தவை என்பது முதல் விதி. இரண்டாவது விதி ஓர் அடுக்கின் வயது அதில் ஆக இளையதான பொருளின் வயதாகத்தான் இருக்க முடியும். இந்த விதி தெளிவாக ஓர் அடுக்கில் இருக்கும் எல்லாப் பொருட்களும் ஒரே வயதாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது.

4. இந்த விதிகளை வைத்துக் கொண்டு கீழடியைப் பார்ப்போம். நான்காம் கட்டத்தில் அகழ்வாய்வு செய்த பகுதி கலைக்கப்படாததா? இது அரசு அகழ்வாராய்ச்சி அறிக்கை சொல்வது:
In fact, the top portion was completely filled and packed with cart load of ceramic tiles and to everyone’s surprise an almost full shape like Black and red ware vessel was found embedded. The clear cut marks vertically on the western end was suggestive of the dig at a later period and dumped with such huge amount of discarded potsherds. Rest of that level running correspondingly on the northwest, south and east was of high compact yellowish gritty clay sterile deposit with few sherds and brickbats. The large pieces found over the lower rings in full shapes indicate the crumbled nature of the upper rings of the well probably crushed due to heavy loading and dumping of the unwanted materials thrown in to the well due to its non-utility.
எனவே நான்காம் கட்ட அகழ்வாய்வு செய்யப்பட்ட பகுதி கலைக்கப்பட்ட பகுதி என்பது தெளிவு. எனவே மேலே சொன்ன முதல் விதி இங்கு பொருந்துமா என்பதே கேள்விக்குறி. சரி பொருந்தும் என்றே வைத்துக் கொள்வோம். அடுத்த விதிக்கு வருவோம்.
5. பிராமி எழுத்துகள் கொண்ட பானைத்துண்டுகள் எந்த தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன என்பது தெரியவில்லை. கடைசித் தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம். இத்தளத்தின் காலம் என்ன? அறிக்கை சொல்கிறது:
So the chronology of this site keeladi with three periods could be scientifically fixed between 6th century BCE and 11, 12th century CE. In this context, period-I represented the cultural settings of the site from 6 century BCE to 3rd century BCE. Period-II existed between 3rd century BCE and 4, 5th century CE, while the last phase, period-III consituted the finds belonging to date from 4, 5th century CE t0 11, 12th century CE. Hence period-I is the earliest phase found at the lower level of the deposit and consequently the other two over it.

இரண்டாம் விதிப்படி அடித்தளத்தின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று அரசு அறிக்கையே சொல்கிறது. எனவே கரித்துண்டின் வயது அதைச் சுற்றியிருக்கும் பொருட்களுக்கு ஏற்ற முடியாது. அவற்றின் காலகட்டத்தை வேறு விதமாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அரசு அறிக்கை கொடுத்த கால அளவு சரி என்று வைத்துக் கொண்டாலும் பானைத்துண்டுகளின் வயது மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை என்றுதான் சொல்ல முடியும்.

6. பானைத்துண்டுகளின் வயதும் ஆறாம் நூற்றாண்டுதான் என்று சொல்வதற்கு நாம் எத்தனை தர்க்கரீதியான தாண்டல்களை நிகழ்த்த வேண்டும் என்பதைப் பாருங்கள்.
1. முதலில் தளம் கலைக்கப்பட்டதல்ல என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பிராமி எழுதப்பட்ட கீறல்கள் அடித்தளத்தில் கிடைத்தன என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. அவை கரித்துண்டிற்கு மிக அருகாமையில் கிடைத்ததென்று வைத்துக் கொள்ள வேண்டும்.
4. கரித்துண்டின் வயதை பானைக்கீறல்களுக்கு ஏற்ற வேண்டும்
5. தளத்தில் கிடைத்த எல்லாப் பொருட்களுக்கும் வயது கி மு ஆறாம் நூற்றான்டு என்று சொல்ல வேண்டும்.
6. தளத்தின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று அரசு அறிக்கை சொல்வது கரித்துண்டு கிடைத்த இடத்திற்கு பொருந்தாது என்று கொள்ள வேண்டும்.

இத்தாண்டல்களைக் கேள்வி கேட்பவர்கள் மட்டுமே அறிவியல் சார்பாகப் பேசுகிறவர்கள்.

ஆனால் நேற்று விவாதத்திற்கு வந்திருந்த பேராசிரியர்களுக்கு அறிவியல் பூர்வமான வாதம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை. திரு ராஜவேலு உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியாள்ர்கள் கரித்துண்டின் வயதைத்தான் சுற்றுபுறத்திற்கும் அளிக்கிறார்கள் என்று கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இது பொது அறிவிற்கு புறம்பானது, அறிவியலையே இழிவு செய்வது என்ற புரிதல் கூட அவருக்கு இல்லை. திரு ராஜேந்திரன் ‘ராஜவேலுவிற்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா/’ என்று கேட்டார். இவர் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்வதே அப்பதவிக்கு இழுக்கு. பேராசிரியர்கள் சட்டாம்பிள்ளைகள் அல்ல. கேள்வி கேட்காதே என்று சொல்லி அடக்குவதற்கு. பதில் தெரியவில்லையென்றால் தெரியவில்லை என்று சொல்ல தைரியம் வேண்டும்.

இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போதா என்றுதான் நான் சொல்கிறேன். அறிவியலின் அடிப்படை தெரிந்த எல்லோரும் அவ்வாறுதான் சொல்வார்கள்.

தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகள் மார்க்சை மறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. திராவிட இயக்கத்தினருக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரியாருக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை விட அதிகம். ஆனால் தமிழ்நாட்டில் இவ்விருதரப்பினரையும் தவிர அறிவியல் அணுகுமுறையை ஆதரிக்கும் சிலராவது இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கக்கூடாது – தமிழகத்திற்கு என்று தனி அறிவியல் விதி முறைகள், அணுகுமுறைகள் இருக்கிறது என்று நினைத்தால் ஒழிய. அப்படி வாயை மூடிக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் மொழி வெறி பிடித்தாட்டுகிறது என்றுதான் பொருள்.

9 thoughts on “நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி”

  1. அறிவியல் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள்
    அறிஞர்கள் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள்
    அரசியல்வாதி சொல்வதையும் கேட்க மாட்டீர்கள்
    பத்திரிக்கையாளர் சொல்வதையும் கேட்க மாட்டீர்கள்…
    நீங்கள் சொல்வதை கையது கொண்டு மெய்யது பொத்தி அனைவரும் கேட்க வேண்டும் என்ற சிந்தனையே தவறு என்பது உங்களுக்கு ஒரு நாளும் புரியப்போவதில்லை.

    Like

  2. நான் எனது நண்பர்களிடம் கூறுவதும் இது தான். தமிழ் நாட்டில் மத சகிப்பு தன்மை உள்ளது. ஆனால் அதை பகுத்தறிவு எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர். சில வருடங்கள் முன்னர் ஒரு காணொளியில், ஏதோ ஒரு ஆப்பிரிக்க மொழியில் ஒரு 30 வார்த்தைகள் தமிழ் போல் இருப்பதால் அந்த ஆப்பிரிக்க மொழியை dialect என அடித்து கூறினர். இங்கு தமிழ் ஒரு மதம், கேள்வி கேட்டால் மத்த மத வெறியர்களை போல் கொதறிவிடுவார்கள்.

    Like

  3. Suresh K: உங்களுக்கு திரு.கிருஷ்ணன் மீது எந்த விமர்சனம் வேண்டுமானாலும் இருக்கலாம் – ஆனால் ‘அறிவியல் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள்’ என்று நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கூற்று, உண்மைக்கு முற்றிலும் புறம்பான ஒன்று. கரித்துண்டின் வயதை பானைக்கீறல்களுக்கு ஏற்றுவது தான் உங்கள் பார்வையில் அறிவியலா?

    Like

  4. ஆம் அவர்களுக்கு அறிவு வறட்சி , உமக்கு பார்ப்பன கொழுப்பு. சு.வெங்கடேசன் அரசியல்வாதி மட்டுமல்ல. உங்களை விட சிறந்த வரலாற்று ஆய்வறிஞரும் கூட. உமது பிரச்சனை என்னவென்றால் கீழடியில் ஒரு நடராஜர் சிலையோ அல்லது தசாவதார கோட்பாட்டை நிறுவும் ஆதாரமோ கிடைக்கவில்லை என்கிற காழ்ப்புணர்ச்சி தான். அது தான் உம்மை இவ்வாறு எழுத வைக்கின்றது..

    Like

  5. யார் எழுதினாலும், நாசி, மூடர், முட்டாள்கள், இனவெறியர் என்ற மேலாண்மை கொண்ட கருத்தை வைத்து மற்றவர்களை காயடிப்பது எதற்காக?

    Like

  6. Re. your assertion that there was no archeological evidence for the ‘Sangam’ era:

    Didn’t the famous pukalūr inscription discovered by Iravatam Mahadevan mention 3 Chera kings whose names corroborate with those in patirruppattu.

    It was a bit of breakthrough wasn’t it? It established a hitherto nonexistent link between the ‘Sangam’ literary corpus and any sort physical detail of that era.

    Of course, your larger point that we simply don’t have enough archeological evidence to paint a clear picture of the era to match with the literature, is taken.

    .

    Like

  7. Kelly Long, Associate State Archaeologist, USA has this to say on radiocarbon dating
    As long as there is organic material present, radiocarbon dating is a universal dating technique that can be applied anywhere in the world. It is good for dating for the last 50,000 years to about 400 years ago and can create chronologies for areas that previously lacked calendars. In 1949, American chemist Willard Libby, who worked on the development of the atomic bomb, published the first set of radiocarbon dates. His radiocarbon dating technique is the most important development in absolute dating in archaeology and remains the main tool for dating the past 50,000 years. (Long) Long, K. (2019). Why Is Radiocarbon Dating Important To Archaeology?. [online] Available at: https://www.parks.ca.gov/?page_id=24000 [Accessed 2 Oct. 2019].
    R E Taylor in his ‘The contribution of radiocarbon dating to New World archaeology’ describes the relevance of the method.
    When introduced almost five decades ago, radiocarbon ( (super 14) C) dating provided New World archaeologists with a common chronometric scale that transcended the countless site-specific and regional schemes that had been developed by four generations of field researchers employing a wide array of criteria for distinguishing relative chronological phases. A topic of long standing interest in New World studies where (super 14) C values have played an especially critical role is the temporal framework for the initial peopling of the New World. Other important issues where (super 14) C results have been of particular importance include the origins and development of New World agriculture and the determination of the relationship between the western and Mayan calendars. It has been suggested that the great success of (super 14) C was an important factor in redirecting the focus of American archaeological scholarship in the 1960s from chronology building to theory building, led to a noticeable improvement in US archaeological field methods, and provided a major catalyst that moved American archaeologists increasingly to direct attention to analytical and statistical approaches in the manipulation and evaluation of archaeological data. (Taylor) Taylor, R. (2000). The contribution of radiocarbon dating to New World archaeology.. [online] Journals.uair.arizona.edu. Available at: https://journals.uair.arizona.edu/index.php/radiocarbon/article/view/3850 [Accessed 2 Oct. 2019]. 

    Like

    1. You completely miss my point. I am not doubting the accuracy of carbon dating at all. I am only questioning the wisdom of imposing that date on other artefacts. I have quoted the text book verbatim. Let us say we bury that bit of carbon and a plaque with the slogan Long Live Periyar today. If it is excavated 2000 years from now, both will be at the same level and it will be stupid to say that the plaque’s date is that of the carbon.

      Like

    2. For Christ’s sake! He wasn’t dismissing ‘Carbon dating’ itself! That much ought to be clear to anyone who watched the discussion. Of course the gents on the panel misrepresented his opinion repeatedly. He made a very specific point which he has explained in the posts here too. Kindly re-read.

      Like

Leave a comment