காஷ்மீர் – இந்துத்துவப் புளுகுகளும் உண்மைகளும்

இந்துத்துவக் கூட்டம் வரலாறு தெரியாத வெறி பிடித்த கயவர்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 370 பற்றி எழுதும் முழுப் பொய்கள் இணையம் முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, இந்துத்துவ நாசி ஆட்சியை சீக்கிரம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இயங்கும் கேடுகெட்டவர்கள் இவர்கள். எந்தப் பொய்யையும் கூசாமல் சொல்வார்கள்.
இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் இவை:

1. காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கும் மற்றவர்கள் கையெழுத்திட்ட ஒப்பத்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்லப்படுகிறதே?
எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் மற்ற சிறிய மன்னர்கள் merger agreement என்ற ஆவணத்தில் கையெழுத்திட்டார்கள். பெரிய மன்னர்கள் புது ஒப்பந்தத்தில் 1948ல் கையெழுத்திட்டார்கள். புது ஒப்பந்தம் இந்திய அரசியல் சட்டத்தை அப்படியே அவரவர்கள் மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள வகை செய்தது. கையெழுத்திடாத ஒரே அரசர் காஷ்மீரின் அரசர். இந்திய அரசை அன்று ஆண்டவர்கள் உண்மையிலேயே மக்களாட்சியில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். காஷ்மீர மக்களின் விருப்பத்திறகு எதிராக அவர்கள் எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை.
2. நேருவால்தான் காஷ்மீர் ஐநாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பது உண்மையா?

காஷ்மீரை ஐநாவிற்கு எடுத்துச் சென்ற காரணம் அன்றைய இந்திய ராணுவம் போரை மற்ற பகுதிகளுக்கு விரிவு படுத்தாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியைத் திரும்ப மீட்கும் நிலையில் இல்லை என்பதுதான். போரை விரிவு படுத்தினால் அது மிகப் பெரிய போராக மாறியிருக்கும். இந்தியாவின் பேரழிவுகள் ஏற்பட்டிருக்கும். நேருவின் மந்திரிசபையில் இருந்த யாரும் அதற்குத் தயாராக இல்லை – படேல் உட்பட. ஐநாவிற்கு முழு கேபினட் ஒப்புதலுக்குப் பிறகுதான் எடுத்துச் செல்லப்பட்டது.

3. அரசியல் சட்டப்பிரிவு 370க்கு படேல் ஒப்புதல் தரத் தயங்கினார் என்று கூறப்படுகிறதே. அது உண்மையா?
ஆவணங்கள் அவ்வாறு சொல்லவில்லை. நேருவிற்காக அவர் ஒப்புக் கொண்டார் என்று சொல்வது அயோக்கியத்தனம் மட்டுமல்லாமல் படேலை இழிவுசெய்வதும் கூட. படேல் தேசத்தின் எதிர்காலத்தை நேருவிற்காக அடகு வைக்கத் தயாராக இருந்தார் என்று சொல்வதை விட படேலுக்கு பெரிய அவமதிப்பு கிடையாது.

மார்ச் 1950 படேல் தலைமையில் இயங்கிய மாநிலங்கள் அமைச்சகம் ஒரு வெள்ளை அறிக்கையைக் கொண்டு வந்தது. அது தெளிவாகச் சொல்கிறது:

The form of the Instrument of Accession executed by the Ruler of the State is the same as that of the Instruments executed by the Rulers of other acceding States. Legally and constitutionally therefore the position of this State is the same as that of the other acceding States. The Government of India, no doubt, stand committed to the position that the accession of this State is subject to confirmation by the people of the State. This, however, does not detract from the legal fact of accession. The State has therefore been included in Part B States. In view of the special problems arising in respect of this State and the fact that the Government of India have assured its people that they would themselves finally determine their political future…..
அறிக்கை மேலும் சொல்கிறது:

The effect of this provision is that the State of Jammu and Kashmir, continues to be a part of India. It is a unit of the Indian Union and the Union Parliament will have jurisdiction to make laws for this State on matters specified either in the Instrument of Accession or by later additions with the concurrence of the Government of the State.

கடைசியாக அது சொல்வது இது:

Steps will be taken for the purpose of convening a Constituent Assembly which will go into these matters in detail and when it comes to a decision on them, it will make a recommendation to the President who will either abrogate Article 370 or direct that it shall apply with such modifications and exceptions as he may specify.

எனவே மாநில அரசியல் சட்ட நிர்ணய சபையின் பரிந்துரையைப் பொறுத்துதான் 370 நீக்கப்படுமா படாதா என்ற முடிவு எடுக்கப்படும் என்று அன்றைய அரசின் வெள்ளை அறிக்கை உறுதியாகக் கூறுகிறது. காரணம் மிக எளிமையானது. மாநில மக்களின் எண்ணங்களை மாநில அரசியல் சட்ட நிர்ணயசபை பிரதிபலிக்கும் என்ற காரணம்தான் அது. காஷ்மீரின் சபை மக்களால்(adult franchise) தேர்ந்தெடுக்கப்பட்டது. 1951ல் கூடி 1957ல் கலைக்கப்பட்டது. அது மாநிலத்தின் அரசியல் சட்டத்தை அமைத்தது. இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370ஐக் குறித்து அது எந்தப் பரிந்துரைகளையும் குடியரசுத் தலைவருக்குச் செய்யவில்லை. காஷ்மீர் மக்கள் ஒப்புதல் அல்லாமல் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது எந்த வகையிலும் அறமாகாது. அது முழுமையான அரசியல் சட்ட விதிமுறை மீறல்.

அம்பேத்கர் அரசியல் சட்டம் 370 அமைக்க விரும்பவில்லை என்று கூறப்படுவது உண்மையா?
இது மிகப் பெரிய புளுகு. அம்பேத்கரின் எந்த எழுத்துகளிலும் இது இல்லை. அவர் சொன்னார் என்று இன்னொருவர் சொன்னதை எடுத்துக் கொண்டு புலம்புவது வரலாறாகாது. மாறாக அம்பேத்கர் தெளிவாக காஷ்மீரைப் பிரித்து பாகிஸ்தானுக்கு முஸ்லிம் பெரும்பான்மை பள்ளத்தாக்கைக் கொடுக்க வேண்டும் அல்லது அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்: Taking that to be the main question, my view has always been that the right solution is to partition Kashmir. Give the Hindu and Buddhist part to India and the Muslim part to Pakistan as we did in the case of India. We are really not concerned with the Muslim part of Kashmir. It is a matter between the Muslims of Kashmir and Pakistan. They may decide the issue as they like. Or if you like, divide it into three parts; the Cease-fire zone, the Valley and the Jammu-Ladhak Region and have a plebiscite only in the Valley.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s