கமல் என்ன நினைக்கிறார்?

கமலுடன் சென்ற வாரம் அனேகமாகத் தினமும் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னவை இவை.
1. பாஜக வெற்றி எதிர்பார்க்காதது என்றாலும் எதிர்கொள்ள வேண்டியது.
2. தமிழகத்தில் அவருடைய கட்சியினருக்கு கடுமையான பணத்தட்டுபாடு. பல நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் அடிப்படைச் செலவுகளுக்கே பணம் இல்லை. சிலருக்கு அவரே பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
3. பல இடங்களிலிருந்து பணத்தாசை காட்டப்பட்டது, ஆனால் பணம் வாங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்படி ஒரு நிலைமை வரவே வராது. வந்தால் கட்சியைக் கலைப்பேனே தவிர பணம் வாங்க மாட்டேன் என்கிறார்.
4. இந்தியத் தலைவர்களில் பலர் அவருடைய கட்சியை மதிக்கிறார்கள். அவருக்காக எந்த அரசியல் உதவியும் (பண உதவி அல்ல!) செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
5. பல ஆலோசகர்கள் அவர் காலூன்ற 15 ஆண்டுகளாவது ஆகும் என்றார்கள். அவர் மிகச் சிலமாதங்களில் தமிழகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்து விட்டார்.
6. கூட்டம் வருகிறது. வந்தவர்கள் கட்சிக்கு ஓட்டும் போட்டனர். எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.
7. சினிமாவில் நிச்சயம் நடித்துக் கொண்டிருப்பார். அது அவர் தொழில். அரசியல் அல்ல. அரசியல் அவருக்கு நிச்சயம் பணம் தராது.சினிமா தரும்.
8. அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரும்போது அவருடைய கட்சி நிச்சயம் தயார் நிலையில் இருக்கும். கிராமம் கிராமமாக கட்சியை அவருடைய தொண்டர்கள் எடுத்துச் செல்வார்கள். கிராமங்களுக்கு அதிகாரம் என்பதை நனவாக்கும் பாதையில் அவர் கட்சி தொடர்ந்து செல்லும். உண்மையான மக்கள் ஆட்சி கிராமங்களில்தான் துவங்குகிறது என்பதை அவருடைய கட்சி கிராம மக்களுக்குப் புரிய வைக்கும்.
8. கோட்சே விவகாரத்தைப் பற்றியும் பலதடவைகள் பேசி விட்டோம். கோட்சே கும்பலைப் பற்றி அவருக்கு தெரிந்திருப்பதை விட அதிகமாக இந்தியாவில் யாருக்கும் தெரியாது. மதன்லால் பாவாவைத் தேடிச் சென்று பேச முயன்றார். ஆனால் அவர் பேச மறுத்து விட்டார். காந்தியை ஏளனம் செய்பவர்கள் ஒன்று அசடுகளாக இருக்க வேண்டும்; அல்லது அயோக்கியர்களாக இருக்க வேண்டும்.

பெரியாரைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது அவருக்கும் அவர் என்ன நினைக்கிறார் என்பது எனக்கும் தெரியும்.

2 thoughts on “கமல் என்ன நினைக்கிறார்?”

  1. First, கமல் என்ன சொல்கிறார்?.

    Now, கமல் என்ன நினைக்கிறார்?.

    Waiting for the next sir. Make it soon (just a wish)

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s