ஹிட்லர் கூறியது:
யூதர்கள்தான் ஜெர்மனியின் சீரழிவுக்குக் காரணம்
இஸ்லாமிய வெறியர்கள் கூறுவது:
இஸ்லாமியர் அல்லாதவர்கள்தாம் இஸ்லாமிய நாடுகளின் சீரழிவுக்குக் காரணம்.
இந்துத்துவ வெறியர்கள் கூறுவது:
இந்து அல்லாதவர்கள்தாம் இந்தியாவின் சீரழ்விற்குக் காரணம்
திராவிட பெரியாரிய வெறியர்கள் கூறுவது:
பிராமணர்கள்தாம் தமிழ்நாட்டின் சீரழிவுக்குக் காரணம்.
ஹிட்லர் கூறியது:
யூதர்கள் எங்கள் வாழ்க்கை முறையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்
இஸ்லாமிய வெறியர்கள் கூறுவது:
இஸ்லாமியர் அல்லாதவர்கள் எங்கள் வாழ்க்கை முறையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்துத்துவ வெறியர்கள் கூறுவது:
இந்து அல்லாதவர் எங்கள் வாழ்க்கை முறையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிட பெரியாரிய வெறியர்கள் கூறுவது:
பிராமணர்கள் எங்கள் வாழ்க்கை முறையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஹிட்லர் கூறியது:
எங்கள் வரலாறு மாற்றி எழுதப் படவேண்டும். யூதர்களின் அட்டகாசங்கள் வெளியில் வரவேண்டும்
இஸ்லாமிய வெறியர்கள் கூறுவது:
எங்கள் வரலாறு மாற்றி எழுதப் படவேண்டும், இஸ்லாமியர் அல்லாதவர்களின் அட்டகாசங்கள் வெளியில் வர வேண்டும்
இந்துத்துவ வெறியர்கள் கூறுவது:
எங்கள் வரலாறு மாற்றி எழுதப்படவேண்டும். இந்து அல்லாதவர்களின் அட்டகாசங்கள் வெளியே வர வேண்டும்
திராவிட, பெரியாரிய வெறியர்கள் கூறுவது:
எங்கள் வரலாறு மாற்றி எழுதப் படவேண்டும். பிராமணர்களின் அட்டகாசங்கள் வெளியே வர வேண்டும்.
ஹிட்லர் கூறியது:
யூதர்களை எங்களுக்குச் சேர வேண்டியதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விரட்ட வேண்டும்.
இஸ்லாமிய வெறியர்கள் கூறுவது:
இஸ்லாமியர் அல்லாதவர்கள் எங்களுக்குச் சேர வேண்டியதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விரட்ட வேண்டும்
இந்துதுவ வெறியர்கள் கூறுவது:
இந்து அல்லாதவர்கள் எங்களுக்குச் சேர வேண்டியதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்க்ள். அவர்களை விரட்ட வேண்டும்
திராவிட பெரியாரிய வெறியர்கள் கூறுவது:
பிராமணர்கள் எங்களுக்குச் சேர வேண்டியதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விரட்ட வேண்டும்.
ஹிட்லர் கூறியது:
நாங்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம்,
இஸ்லாமிய வெறியர்கள் கூறுவது:
நாங்கள் வஞ்சிக்கப் பட்டிருக்கிறோம்
இந்துத்துவ வெறியர்கள் கூறுவது:
நாங்கள் வஞ்சிக்கப் பட்டிருக்கிறோம்
திராவிட, பெரியாரிய வெறியர்கள் கூறுவது:
நாங்கள் வஞ்சிக்கப் பட்டிருக்கிறோம்.
வெறியர்கள் கனவுகள் ஏறத்தாழ ஒன்றுதான். சிலர் கனவுகள் நனவாகி மனிதகுலத்தின் மிகப் பெரிய படுகொலைகள் நிகழ்வதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன. சிலர் கனவுகள் பாதி நிறைவேறியிருக்கின்றன. சிலர் தங்கள் கனவுகள் நிறைவேறும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகளை ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழலாம். வெறி பிடித்து கம்யூனிசத்தை இயந்திரத்தனமாக அணுகும் கம்யூனிஸ்டுகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசங்கள் அதிகம் இல்லை என்ற எண்ணம் தோன்றலாம் ஆனால் இவர்களை இயக்குவது போல வெறுப்பு உண்மையான கம்யூனிஸ்டுகளை அதிகம் இயக்குவது இல்லை. வர்க்கப் போராட்டம் என்பது வர்க்க வெறுப்பாகச் சுருங்குவதை கம்யூனிசத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் ஆதரிக்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகள் இது பற்றிச் சிந்தித்த பிறகு அனார்கிஸ்டுகளே இதைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
“Let there be as much class struggle as one wishes, if by class struggle one means the struggle of the exploited against the exploiters for the abolition of exploitation. That struggle is a way of moral and material elevation, and it is the main revolutionary force that can be relied on.
Let there be no hatred, though, because love and justice cannot arise from hatred. Hatred brings about revenge, desire to be over the enemy, need to consolidate one’s superiority.” Errico Malatesta
காந்திக்கும் இந்தப் புரிதல் இருந்தது. ஆனால் என்னால் அகிம்சை முறையால் மட்டுமே எல்லாப் போராட்டங்களும் வெற்றி அடைய முடியும் என்ற முடிவுக்கு இன்று வரை வர முடியவில்லை.
படுகொலைகளின் மூலமும் ஒரு குழுவினரை ஒடுக்குவதன் மூலமும் பிரச்சினைகளை முடிவிற்குக் கொண்டு வரமுடியாது என்பதையும் உலக வரலாறு நமக்குச் சொல்கிறது. இன அழித்தொழிப்பு மூலம் கொண்டு வர முடியும். அதை மேற்கத்தியர் அமெரிக்காவில் முயன்று பார்த்து ஓரளவு வெற்றியும் கண்டிருக்கின்றனர். ஹிட்லரின் முயற்சி வெற்றி பெற முடியவில்லை. மற்றைய வெறியர்களின் முயற்சி வெற்றி பெறாமல் இருக்கும் என்று நாம் நம்புவோம்.