உயிரை வாங்குபவை எவை?

தமிழகத்தில் நியூட்ரினோ, கூடன்குளம், ஸ்டெர்லைட், நெடுவாசல் போராட்டங்களை முன்னின்று நடத்துபவர்கள் செய்ய வேண்டியது என்ன?

இதுவரை அப்படி நடந்து விடும் இப்படி நடந்து விடும் என்ற பயமுறுத்தல்கள் வருகின்றனவே தவிர, எதற்கும் அறிவியல் பூர்வமான சான்றுகள் இல்லை. உலகில் மற்றைய இடங்களில் இருக்கும் கிறுக்கர்கள் சொல்வதை உள்ளூர் கிறுக்கர்கள் எடுத்துப் போடுவது சான்று ஆகி விடாது.

ஆனால் இரண்டு காரணங்களால் உயிரிழப்புகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது.

முதலாவது ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் இன்றும் நிலப்பிரபுத்துவமும், ஆணாதிக்கமும், மொண்ணைத்தனமும் அப்படியே மாறாமல் இருக்கின்றன என்பதற்குச் சான்று. ஒவ்வொரு வருடமும் தவறாமல் உயிரிழப்புகளும், உடற்சேதங்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதை தமிழர் வீரம் என்று பிதற்றிக் கொண்டு தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது மனிதநேயத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் விடப்பட்டுக் கொண்டிருக்கும் சவால். எந்தப் புரிதலும் இல்லாத, அம்மிக்குழவி அறிவு கொண்டிருப்பவர்கள்தான் ஜல்லிக்கட்டை ஆதரிப்பார்கள். எனவே தமிழக ஊடகங்களும் திராவிட, தனித்தமிழ்ச் சண்டியர்களில் பலரும் இந்த உயிர்க்கொல்லியை தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருப்பதில் வியப்பே இல்லை.

இரண்டாவது மிக முக்கியமானது. இதைக் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டும்.

இந்தியாவில் 31.3. 2015ல் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் சுமார் 21 கோடி. இதில் தமிழ்நாட்டில் பதிவு செய்யபட்டவை சுமார் 2.3 கோடி. இந்தியாவில் 6 இந்தியர்களுக்கு ஒரு வாகனம் என்றால் மூன்றுக்கு ஒரு தமிழன் வாகனங்களை வைத்திருக்கிறான்.

இதனாலேயே இந்தியாவிலேயே சாலை விபத்துக்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. 2016 சாலை விபத்தில் இறந்து போனவர்கள மட்டும் பதினேழாயிரத்திற்கும் மேல். வருடத்திற்கு பத்து சதவீதம் – ஆமாம், பத்து சதவீதம் – அதிகரிப்பதாக தமிழ்நாடு காவல்துறையின் புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.

https://timesofindia.indiatimes.com/city/chennai/fatalities-in-road-accidents-rise-by-10-in-tamil-nadu/articleshow/59480458.cms

தமிழ்நாடு முழுவதும் புற்றுநோயால் மரணமடைபவர்கள் 30,000 இருக்கலாம். சாலை விபத்தில் மரணம் அடைபவர்கள் இதில் பாதிக்கும் மேல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்

புற்று நோய் மரணங்களுக்கு ஒரு காரணம் மோட்டார் வாகனங்கள் விடும் புகை.

தாமிரமோ, அல்லது SO2வோ புற்று நோயை விளைவிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் வாகனப் புகையால் புற்று நோய் வரக்கூடும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.

American Cancer Society சொல்வதைப் படியுங்கள்:
The International Agency for Research on Cancer (IARC) is part of the World Health Organization (WHO). Its major goal is to identify causes of cancer. IARC classifies diesel engine exhaust as “carcinogenic to humans,” based on sufficient evidence that it is linked to an increased risk of lung cancer. IARC also notes that there is “some evidence of a positive association” between diesel exhaust and bladder cancer.

The US Environmental Protection Agency (EPA) maintains the Integrated Risk Information System (IRIS), an electronic database that contains information on human health effects from exposure to various substances in the environment. The EPA classifies diesel exhaust as “likely to be carcinogenic to humans.”

The National Institute for Occupational Safety and Health (NIOSH) is part of the CDC that studies exposures in the workplace. NIOSH has determined that diesel exhaust is a “potential occupational carcinogen.”

இது புற்று நோய் மட்டும் பற்றிய புள்ளி விவரம். வாகனப்புகையால் ஏற்படக் கூடிய மற்றைய நோய்களைப் பற்றி நான் விளக்க்த் தேவையில்லை.

வாகனப்புகைக்கு ஊற்றுக் கண் எது? வாகனங்கள்தானே? வாகனங்கள் எங்கே தயாரிக்கப் படுகின்றன? குறிப்பாகத் தமிழகத்தில் வாகனங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன?
மறைமலை நகரில் ஃபோர்ட் இரண்டு லட்சம் வாகனங்கள் தயாரிக்கின்றது. திருப்பெரும்புதூரில் ஹுயுண்டாய் ஆறு லட்சம் வாகனங்கள் தயாரிக்கின்றது. இதே போன்று நிஸ்ஸான் ரெனால்ட், யமஹா போன்றவைகளும் லட்சக்கணக்கில் வாகனங்களைக் கொண்டு வருகின்றன. இது சென்னையின் சுற்றுப்புறத்தில் மட்டும். ஹோசூரில் கணக்கற்ற தொழிற்சாலைகள் வாகன உதிரிப் பாகங்களைத் தயாரிக்கின்றன. இவை அனைத்தும் காற்று மாசுபடுவதற்கும் புற்றுநோய் வருவதற்கும் நேரடியான காரணங்களாக இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் அல்ல. இந்தியா முழுவதும், ஏன் உலகின் பல இடங்களில் காற்று மாசுப்பாட்டிற்கும் புற்றுநோய்க்கும் காரணம் வாகனங்கள். வாகனங்களைக் குறைக்க வேண்டுமானல் அவற்றின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பயங்கரவாதிகளும் தமிழகத்தின் போலிப் போராளிகளும் காசுக்காக, குறிப்பாக புலிகள் விட்டுச் சென்ற பணத்திற்காக ஆட்டம் போடுபவர்களாக இல்லாது இருந்தால், அவர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியது

1. ஜல்லிக்கட்டு என்ற ஆட்கொல்லி விளையாட்டிற்கு எதிராக
2. சாலை விபத்துகளுக்கு எதிராக
3. புற்றுநோய் உண்டாக்கும் வாகனப்புகைக்கு எதிராக
4. வாகனங்கள் பெருகுவற்கு எதிராக
5. வாகனத் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு எதிராக.

நான் நிச்சயம் தொழிற்சாலைகள் பெருகுவதையோ, வாகனங்கள் அதிகரிப்பதையோ ஒற்றைப்பரிமாண முறையில் அணுக மாட்டேன். ஆனால் தமிழ்நாட்டின் சாபக்கேடான போலிப் போராளிகளுக்கும் முட்டாள் ஊடகங்களுக்கும் ஒன்றிற்கு மேல் எண்ணத் தெரியாது என்பதனால் இந்த அணுகுமுறையைப் பரிந்துரைக்கிறேன்.

ஸ்டெர்லைட்டை விட ஒரு லட்சம் மடங்காவது அபாயகரமானவை மேலே குறிப்பிட்டவை.

1 thought on “உயிரை வாங்குபவை எவை?”

  1. பூணுல் போட்ட ஒரு லூசுகூ வாள் மட்டுமே இப்படி ஒரு கட்டுரை எழுத முடியும். நீ சொன்ன வாகன விபத்து எல்லாம் உலக அளவில் உள்ள பிரச்சனை. விபத்தில் செத்தா செத்தவனோட முடிச்சது. ஆனா நாங்க போராடறது, அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து. பிஞ்சுகள் பிறக்கும் போதே புற்றுநோயோடு பிறக்க அது என்ன பாவம் செய்த்தது..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s