தினமும் பெரியாரிய நாசி இனவெறியர்கள் சாக்கடைத்தனமாகப் பேசி வருகிறார்கள். இன்று அது எல்லை மீறிப் போய்விட்டது என்பதற்கு ஓர் உதாரணம்:
“தமிழ்நாட்டில் விலைவாசி, பேருந்து கட்டண விலையேற்றம், நீட் தேர்வு, கூடங்குளம், ஸ்டெர்லைட் என்று ஆயிரம் பிரச்சினைகள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு சமூகமும் தனியாகவோ கூட்டாகவோ போராட்டம் செய்வார்கள். ஆனால் கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றை பார்த்தால் ஒரேயொரு சமூகம் மட்டும் அவர்கள் சொந்தப்பிரச்சினை தவிர வேறெந்த போராட்டத்துக்கும் தெருவில் இறங்கி போராடியதே இல்லை. இதைத்தான் பலமுறை பலவடிவங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம்.
காவிரி கரையோரத்தில் இருக்கும் ஊர்களில் முக்கியமான ஊர் ஸ்ரீரங்கம். அங்கு வசிப்பவர்கள் யாராவது காவிரி பிரச்சினைக்காக இதுவரை குரல் கொடுத்துள்ளார்களா? இதில் சிறப்பு என்னவென்றால் இந்த சமூகம்தான் தங்கள் வாழ்வாதார பிரச்சினைகள் ஏற்படும்போது சோடாபாட்டில் வீச கூட தயங்காதவர்கள்.
– விநாயக முருகன்”
. இதுதான் பெரியார் கற்றுக் கொடுத்த சாக்கடைத்தனமான நாசி இனவெறி.
எனக்குத் தெரிந்து பல பிராமணர்கள் காவிரிப் பிரச்சினைக்காக, ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். போராடி வருகிறார்கள். என்னோடு பெரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
போராடுவது என்பது சமூகம் சார்ந்து செய்வதல்ல – ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அது பாதித்தால் ஒழிய. தேவர் சிலையை உடைத்தால் முன்னால் வருவது தேவர் சமூகத்தினர்தாம். அம்பேத்கார் சிலையை உடைத்தால் முன்னல் வருவது தலித்துகள்தாம். அதே போலத்தான் ஆண்டாள் பிரச்சினையில் பிராமணர்கள் முன்னால் வந்தார்கள். மற்றப்படி எல்லாப் போராட்டங்களிலும் பிராமணர்கள் அவரவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்றபடி குரல் கொடுத்து வருகிறார்கள். அது அவர்களுக்கு ஜனநாயகம் அளித்த உரிமை. பெரியாரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஆதரிக்கும் பிராமணர்களும் இருக்கிறார்கள். பெரியாரிய நாசி இனவெறி மூர்க்கர்கள் போராடுகிறார்கள் என்பதற்காக அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் யாருக்கும் கிடையாது.
இனி காவிர் நீர் பிரச்சினையைப் பற்றிய உண்மையைப் பார்ப்போம். நண்பர் ஒருவர் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பைப் பற்றி எழுதியிருக்கிறார. அதை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தவர் ரங்கநாதன் என்ற பிராமணர். பத்திரிகையாள நண்பர் ஒருவர் நாங்கள் காவிரிப் பிரச்சினை என்றாலே முதலில் அணுகுவது மன்னார்குடி ரங்கநாதனைத்தான் என்கிறார். இன்னும் பல பிராமண நில உடைமையாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். காவிரி டெல்டா பகுதியில் தலித்துகளையும் மற்றைய ஒடுக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைத்து போர்க்குரல் கொடுக்க வைத்தவர் சீனிவாச ராவ் என்ற பிராமணர். பெரியார் கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று சொன்னவர்.
இதே போன்று ஸ்டெர்லைட் பிரச்சினையில் ஆலைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களில் – நான் சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் என்று அமைப்பவர்களில் முதன்மையானவர் நித்யானந்த் ஜெயராமன். அவர் பிறப்பால் பிராமணர் என்று அறிகிறேன். (இது உறுதியான தகவல் அல்ல). ஸ்டெர்லைட் முதற் போராட்டத்தைப் படம் பிடித்தவர் சசிகாந்த் அனந்தாச்சாரி. இவரும் பிராமணர்தான்.
இது போன்ற பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் பிற்போக்குத்தனமான போராட்டம் என்று நான் கருதுகிறேன். ஆனால் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் பலர் அந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
பெரியாரிய நாசி இனவெறி மூடர்களுக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கும் இஸ்லாமிய தாலிபான்களுக்கும் இன, மதவெறியைப் பொறுத்த அளவில் எந்த வித்தியாசமும் கிடையாது.
தமிழ்நாட்டில் இந்த நாசி இனவெறி வாதத்தின் மூலவர் பெரியார்.
பெரியாரீயர்கள் பற்றிய உங்கள் தொடர் கட்டுரைகளை படித்து வருகிறேன். தமிழில் main stream_ல் அந்த கட்டுரைகள் வரும் அளவு இங்கு சூழல் இல்லை என்பது துரதிர்ஷ்டமே. சோ ஒருவர் தான் சில ஆண்டுகளுக்கு முன் துக்ளக்கில் இந்த விஷயங்களை உடைத்து எழுதிக் கொண்டிருந்தார். அதீத புனிதப் படுத்தப் பட்டிருக்கும் பொய்யான பிம்பங்கள் , கட்டுமானங்கள் உடைபட வேண்டியவையே என நினைக்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
LikeLike