நான் இதை மிகவும் யோசித்தே எழுதுகிறேன்.
அமெரிக்காவில் ட்ரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்காவால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கலிஃபோர்னியா அறிந்து கொண்டது. கலிஃபோர்னியாவின் வளங்கள் எல்லாம் அமெரிக்காவால் சுரண்டப்படுகின்றன. அமெரிக்கவிற்கே ஆப்பிள் கொடுப்பது நாங்கள் ஆனால் எங்களுக்கு ட்ரம்ப் அல்வா கொடுக்கிறார் என்று கலிஃபோர்னிய மக்கள் குமுறுகிறார்கள்.
எனவே கலிஃபோர்னியா தனியாகப் பிரிவதை நிச்சயம் பரிசீலனை செய்ய வேண்டும். மேலே இருக்கும் ஓரேகான், வாஷிங்டன் மாநிலங்கள், ஏன் கீழே இருக்கும் மெக்சிகோவோடு சேர்ந்து கூட தனி நாடு அமைப்பதற்கான திசையில் கலிஃபோர்னியா பயணம் செய்ய வேண்டும்.
மேற்கே இந்தப் புரட்சி நடந்தால் கிழக்கே மற்றொரு புரட்சி நடக்கும். நியூ ஜெர்சியில் இருக்கும் தமிழர்கள் தலைமையில் கிழக்கில் மறுபடியும் விடுதலைச் சூரியன் உதிக்கும் என்பது உறுதி. கீழை மாநிலங்கள் சேர்ந்து கிழக்கே இன்னொரு குடியரசை உருவாக்குவார்கள்.
இவை நடக்கும்போது இதே போன்று மாநிலங்களை இணைத்து உருவாகும் திராவிடநாடும் நிகழ்ந்திருக்கும்.
திராவிட நாடுதான் எங்களுக்கு வழிகாட்டியது, திராவிடநாட்டை எங்களுக்குக் காட்டியது நியூஜெர்சி தமிழர்கள்தாம் என்று கீழிலும் மேலிலும் விடுதலை அடைந்த மக்கள் பெருமிதத்தோடு கூறும் நாள் தொலைவில் இல்லை.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு, திராவிட நாடு என்று சொல்லிக் கொண்டிருப்பவரகள், இந்தியா உடைபட வேண்டும் என்று கனவு கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும் திராவிடநாட்டிற்கு வந்து போக வாழ்நாள் முழுவதும் இலவச முதல் வகுப்புப் பாஸ் வழங்கப்படுவதற்காக திராவிடத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் தொடங்கி விட்டதாக அறிகிறேன். சில தமிழ் எழுத்தாளர்கள்தான் இடைத்தரகர்களாக இருந்து வேலை செய்கிறார்களாம். இவர்களுக்கும் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்கு சென்று வர இலவச முதல் வகுப்புப் பாஸ்கள் கிடைக்கும் என்றும் அறிகிறேன்.
இது பிதற்றலாகத் தோன்றினால், அமெரிக்காவிலிருந்து திராவிட நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்று வரும் எழுத்துக்களை என்னவென்று கூறுவது?
அதை மனமகிழ்ந்து வரவேற்கும் தமிழ் எழுத்தாளர்களை எப்படி அழைப்பது?
மறுபடியும் சொல்கிறேன் இந்தியா உடைபடும் என்று கனவு காண்பவர்கள் உடைந்து போவார்கள்.
தங்களின் அறிவார்ந்த கட்டுரைகளை படித்து , எனது உலகஅறிவை விரித்துக்கொள்ளும் அதேசமயம் , நையாண்டி கலந்த இந்த கட்டுரை என்னுள் புன்முறுவல் பூக்க தவறவில்லை. # நன்றியுடன்,முத்துமணி சண்முகநாதன், பெங்களூரு.
LikeLike