தமிழகத்தில் விவசாயம் – சில உண்மைகள்

மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் எதிர்காலத்தில் தமிழகத்திற்கும் மற்றைய மாநிலங்களுக்கும் இடையே அதிகப் பிரச்சினைகள் வளராமல் தடுக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதை வைத்துக் கொண்டு திராவிட, தனித்தமிழ் சண்டியர்கள் ஆடும் பேயாட்டம் வெட்ககரமானது. பேயாட்டம் எந்தத் தீர்வையும் தராது. 1924ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் பிரச்சினையை மெதுவாகத்தான் தீர்வை நோக்கி நகர்த்த முடியும். மத்தியில் எந்த அரசு இருந்தாலும் இதே நிலைமைதான். சரி, மேலாண்மை வாரியம் நாளையே வருகிறது என்று வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் விடுவதில் ஏதாவது மாற்றம் நாளை ஏற்படுமா என்றால் ஏற்படாது என்றுதான் அறிவுள்ள எல்லோரும் சொல்வார்கள். வாரியம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் கர்நாடக அரசை உச்சநீதி மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட வறுபுறுத்த மத்திய அரசாலும் மாநில அரசாலும் முடியும். அவர்கள் திமிர்த்தனமாக முடியாது என்று வாரியம் அமைத்த பின்பும் சொல்ல முடியும். இந்தப் பிரச்சினையை போர் தொடுத்தோ, பேயாட்டம் ஆடியோ, தனிநாடு கேட்போம் என்று படம் காட்டியோ தீர்க்க முடியாது. அமைதியான முறையில்தான் தீர்க்க முடியும். அப்படி வாரியம் வந்தாலும் இழுபறிகள் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். சிறுகுழந்தைத்தனமாக அலறியோ, அல்லது திரு கருணாநிதி திரைப்படங்களில் வரும் மூன்றாம்தர வசனங்கள் பேசியோ தீர்வைப் பெற முடியாது.

தமிழகத்தின் நிலைமை நதிகளில் வால்புறங்களில் இருக்கும் எல்லா மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்படுவதுதான். மத்தியப் பிரதேசம் இன்னும் வளமடைந்தால் குஜராத்தும் தமிழகம் இன்று படும்பாடைத்தான் படும். இப்போது கூட நிலைமை சீராக இருக்கிறது என்று சொல்ல முடியாது. இது இந்தியா டுடே பத்திரிகையில் சமீபத்தில் வந்த கட்டுரையில் ஒரு பத்தி:
The Gujarat government first flagged the issue in October 2017, and in a more recent meeting of officials of four states-MP, Gujarat, Rajasthan and Maharashtra-in Delhi on February 9,(2018) demanded that MP release its full share of Narmada water. As per the original award apportioning the water, MP was to keep 18.25 MAF (million acre feet); Gujarat was to receive 14 MAF; and Rajasthan and Maharashtra 0.50 and 0.25 MAF, respectively. Gujarat claimed it had received only 4.71 MAF of its agreed quota.

எனவே மாநிலங்களுக்கு இடையே இது போன்ற பிரச்சினைகல் இருந்து கொண்டுதான் இருக்கும். அதை மத்தியில் எந்த அரசு இருந்தாலும் மாற்ற முடியாது.
ஆனால் தமிழகம் காவிரி நீர் பிரச்சினையால் பாலைவனம் ஆகி விட்டது போல ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

உண்மை என்ன?

தமிழ்நாட்டில் 1967க்கு முன்னால் ஒரு லட்சத்திற்கு மேல் நீர்நிலைகள் இருந்தன என அறிகிறேன். அவை இப்போது சுமார் நாற்பதாயிரமாகக் குறைந்து விட்டன. குளங்களை நம்பி அறுபதுகளில் சுமார் 9.5 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடந்து கொண்டிருந்தது. அது 2011ல் சுமார் 5 லட்சம் ஹெக்டேராகக் குறைந்து விட்டது என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. இது நடந்தது தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் வந்ததனாலும், நகரமயமானதாலும் மக்கள்தொகை பெருக்கத்தினாலும் என்று சொல்ல முடியும் என்றாலும, பல இடங்களில் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு மக்களுக்குப் பெருந்தொல்லைகளைத் தந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குடிதண்ணீருக்காக பாதள உலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் நீர்நிலைகள் அருகாமையில் இருந்தால் ஏற்பட்டிருக்காது.

நாட்டின் மொத்தப்பரப்பில் நான்கு சதவீதம் இருக்கும் தமிழ்நாட்டிற்கு நாட்டின் நீர்வள ஆதாரங்களில் மூன்று சதவீதமே இருக்கின்றன. நாட்டின் சராசரி வருட மழை அளவு 1200 மில்லி மீட்டர்கள் என்றால் தமிழகத்தில் 921 மில்லி மீட்டர்கள்தாம். இந்தியக் குடிமகனுக்கு கிடைக்கும் தண்ணீர் ஆண்டிற்கு சராசரியாக 2200 கனமீட்டர் என்றால் தமிழனுக்கு கிடைப்பது 750 கனமீட்டர்கள் மட்டும். ராஜஸ்தானில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் தண்ணீரை விடக் குறைவு. தமிழகத்தின் நில உடமையாளர்களில் 92 சதவீதம் சிறு அல்லது குறு விவசாயிகள். சராசரி நில உடமை இந்தியாவில் 1.2 ஹெக்டேர் என்றால் தமிழகத்தில் 0.80 ஹெக்டேர்தான்.

இவ்வளவு தடைகள் இருந்தும், இயற்கை அவனைத் தொடர்ந்து வஞ்சித்து வந்தாலும் தமிழன் விவசாயத்தில் பெரும் சாதனைகள் புரிந்திருக்கிறான்.

மக்காச்சோளம்,கம்பு, எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றில் தமிழகம்தான் உற்பத்தித் திறனில் முதல். அரிசியிலும், தென்னையிலும் இரண்டாவது, கரும்பு, சூரியகாந்தி, சோளம் போன்றவைகளில் மூன்றாவது.

உணவுதானிய உற்பத்தி 2010-11ல் 74.5 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. தமிழக்ம் புரிந்த சாதனையை தனது 2017-18 ஆண்டறிக்கையில் அரசு குறிப்பிடுகிறது:

The Government of Tamil Nadu has made impressive strides in agricultural sector and the State has almost achieved a two-fold increase in food grain production since the launch of Second Green Revolution in 2011-12. The technological breakthrough in increasing the productivity and the cultivable area has removed the impasse in Agriculture production and paved way for the State to surpass 100 Lakh MT of Food Grain production in 2011-12, 2013-14,2014-15 and 2015-16. As per the Final Estimate of 2015-16, the food grain production of the State is 113.69 Lakh MT which is 43% increase over the food grain production achieved in 2010-11.

Government has been lauded with “Krishi Karman award” four times in a period of five years by Government of India, once for the best performance in food grain production for the year 2011-12, once for the best performance in pulses production for the year 2013-14, once for the best performance in coarse cereals
production for the year 2014-15 and once for the best performance in food grain production for the year 2015-16. The State has also bagged the “State Agriculture Leadership Award 2013”, “Food Production Program Leadership Award 2015” and “Global Agriculture Leadership Award 2016” from the leading magazine, “Agriculture Today” and “Best Big Agriculture State Award” from the popular magazine “India Today” for its commendable performance across the nation.

2016- 17ம் ஆண்டில் பல ஆண்டுகளுக்குப் பின் வந்த கடுமையான வறட்சியால் உற்பத்த்தியில் பின்னடைவு நிகழ்ந்தது என்றாலும் இந்த வருடம் மறுபடியும் 100 லட்சம் டன் உற்பத்தியை எட்டி விடுவோம் என்ற நம்பிக்கையை அரசு அளித்திருக்கிறது. இந்த நிதி ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் 2018-19ல் உணவு உற்பத்தி இலக்கு 110 லட்சம் டன்னாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் புள்ளி விவரங்களினால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்ந்து நீடித்த போதிலும், நீர்நிலைகள் மறைந்த போதிலும் தமிழக விவசாயத்தில் நாடே வியக்கும் வண்ணம் சாதனை நடந்திருக்கிறது. இந்தியத் திருநாட்டின் ஓர் அங்கமாக இருப்பதால்தான் தமிழகம் இந்த நிலையை அடைந்திருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பம் தற்காலிகமானதுதான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. திராவிட, தனித்தமிழ் கோமாளிகள் போடும் கூச்சல்களையும் India betrays Tamilnadu என்று டிவிட்டர் பரப்புரை செய்யும் மூடர்களையும் தமிழ் மக்களும் இந்திய மக்களும் முற்றிலும் புரக்கணிப்பார்கள் என்பதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை.

2 thoughts on “தமிழகத்தில் விவசாயம் – சில உண்மைகள்”

Leave a comment