‘தீர்க்கவே முடியாத நோய்’ என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்னால் இந்து தமிழ் இதழுக்கு ஒரு கட்டுரை எழுதினேன். அது மாநில அரசைப் பற்றியது. இன்றைய நிலைமையைப் பார்ப்போம்.
மத்திய அரசில் மோதி வந்ததும் ஊழல் ஒழிந்து விடும், ஊழல் செய்பவர்கள் தண்டனை பெற்று விடுவார்கள் என்ற மாயை உருவாக்கப்பட்டது. புள்ளி விவரங்களைப் பாருங்கள்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது மொத்தம் நாடு முழுவதிலும் 62 மட்டும்தான். இது 2016ம் ஆண்டின் புள்ளி விவரம். நாடு முழுவதும் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இருப்பார்கள். மத்திய அரசு பொதுத் துறையில் 15 லட்சம் ஊழியர்கள் இருப்பார்கள். இவர்களில் 7 சதவீதம் உயர் பதவிகளில் (கெசட்) இருப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும் மொத்தம் 4.5 லட்சம் பேர்கள் உயர் பதவியில் இருப்பார்கள். எனவே வழக்குத் தொடரப் பட்டது 0.0015% அதிகாரிகள் மேல்தான். 4.5 லட்சம் அதிகாரிகளில் 62 பேர்கள் மீது மட்டும் வழக்குத் தொடரப் பட்டிருக்கிறது என்றால் உலகத்திலேயே மிகவும் ஊழல் குறைவாக இருக்கும் அரசு நமது மத்திய அரசாகத்தான் இருக்க வேண்டும்! நான் கீழ் நிலை ஊழியர்களை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. இதில் 20 பேர் தண்டனை பெற்றால் அதிசயம்.
சிபிஐ 2017 ல் 1174 நிகழ்வுகளை மட்டுமே புலன் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றது. CVC புள்ளி விவரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. 2012 ம் ஆண்டு அதன் அறிவுரை கேட்டு அனுப்பப்பட்ட கடிதங்கள் 5528. இவை 3980 ஆக 2016ல் குறைந்து பிட்டன.
இதுதான் மோதி ஊழலை ஒழிக்கும் லட்சணம். தான் மட்டும் ஊழல் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது.
இதற்கு தமிழக அரசு எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லலாம். 79 பேர்களுக்கு 2016-17ம் ஆண்டு தண்டனை பெற்றுத் தந்திருக்கிறது. 506 புலன் ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கிறது.
தி இந்துவில் வெளிவந்த கட்டுரை:
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/article7632318.ece