பவிஷ்யவாணி சங்க்ரஹம்

பிரம்மஸ்ரீ கும்பகோணம் குமாரஸ்வாமி சாஸ்திரிகள் 5000 வருஷங்களுக்கும் முன்னால் தேவ பாஷையான சமஸ்கிருதத்தில் எழுதப் பட்ட பவிஷ்யவாணி சங்க்ரஹம் என்னு சொல்லப்படற பரம உத்தமமான புஸ்தகம் ஒண்ணை கண்டெடுத்திருக்கார். அது தங்கத் தகடுல எழுதப் பட்டிருக்குன்னு தெரியறது.
புத்தகத்தில் கலி முத்தும்போது லோக க்ஷேமத்துக்காக இரண்டு மகாபுருஷா அவதரிப்பார்னு சொல்லப்பட்டிருக்கு.

முன்னவர் ஜம்பூத்வீபத்துக்கு வடக்கில சிவபெருமானோட சாக்ஷாத் நந்தி தேவனால் ராக்ஷஸ விவாகம் பண்ணப்பட்ட யூரோப்பாங்கிற ஸ்திரியோட நாமம் கொண்ட குளிர் பிரதேசத்தில ஒரு மகான் பிறப்பர். ஹிட்லரேந்திரர் என்னு நாமகரணம் சூட்டப்படுவர். அவரை ஆசுரப் பிரகிருதிகள் சேர்ந்து படுத்தற பாடுல அவர் ஆத்ம சமர்ப்பணம் செய்துப்பர்.

அவரே ஜம்பூத்வீபத்தில முகத்தில் சுவேத ரோமங்களோடும் தடித்த சிவப்பான அதரங்களொடும் மறுபடியும் பிறப்பர். நரேந்திரர் என்னு நாமகரணம் சூட்டப்படுவர். அவர்தான் லோகத்தை புனருத்தாரணம் பண்ணப் போறார். அவரோட சிஷ்ய கோடிகளும் ஜம்பூத்வீபத்தின் தக்ஷிணப் பிரதேசத்திருந்து கடல்தாண்டி பல யோசனைகள் தள்ளி இருக்கிற அமெரிக்காங்கற பூலோக ஸ்வர்கத்தில் வாசம் செய்யற பிராப்தி இருக்கற பிராமணோத்தமர்களும் அவருக்கு யோசனை கொடுத்திண்டிருப்பர்.

காந்தியே இல்லாத, காந்தி என்னு பெயர் கொண்ட ஒரு நிர்மூடரும், ராவணேச்வரனின் அவதாரமான மகா பயங்கர நஹ்ரு என்னு நாமம் கொண்ட ஒரு ராக்ஷஸனும் எழுதி வைச்சத்தைக் கொண்டு தாண்டவம் ஆடிண்டிருக்கற துஷ்டாளைத் துவம்சம் பண்ணிட்டு சுவேதஸ்மச்ரு தரித்த மகாபுருஷரோட ராஜ்யத்தை கலியுகத்தில சிஷ்ய கோடிகளும் பிராம்மணோத்தமர்களும் நிலைநாட்டுவர்.

பூலோக ஸ்வர்கத்தில இருக்கற பிராமணோத்தமர்கள் எழுதறதுதான் சரித்ரம், சொன்னதுதான் வேதமே சொன்னமாதிரிங்கற நிலமை வந்து லோகத்தில இருக்கற எல்லாரும் அவா சொன்னதக் கேட்டுண்டு சுபிக்ஷமா இருக்கப் போறான்னு சங்கரஹம் சொல்லறதாம்.

1 thought on “பவிஷ்யவாணி சங்க்ரஹம்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s