பெரியார் – ஐம்பெரும் புளுகுகள்

1. பெரியார் இல்லாவிட்டால் தமிழகத்தில் கல்வி இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காது.

இது அண்டப் புளுகு. தமிழ்நாடு கடந்த இருநூறு ஆண்டுகளாக கல்வியில் மற்றைய மாநிலங்களை விட முன்னால் இருந்தது. இது அனில் ஸீல் தனது “The Emergence of Indian Nationalism புத்தகத்தில் சொல்வது:

Despite its reputation as the ‘benighted’ Presidency, Madras possessed a level of literacy higher than any other province. By 1886 it had five more English colleges than Bengal, and it had as many arts students. With twenty-three more colleges, and three times as many students, it was far ahead of Bombay.

1961ல் அது பெரிய மாநிலங்களில் கேரளாவிற்கும் மகராஷ்டிராவிற்கும் அடுத்தபடியாக இருந்தது. இன்றும் அதே நிலைமைதான். இது நிச்சயமாக பெரியாரால் நிகழ்ந்தது அல்ல. அவர் கல்வியைப் பற்றி அதிகம் பேசியதேயில்லை. அழி, ஒழி எரி என்று பேசிக் கொண்டிருந்தவருக்குக் கல்வியைப் பற்றிப் பேச நேரமில்லாத்தில் வியப்பே இல்லை.

2. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் போராடினார்.

இது ஆகாசப் புளுகு. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் பேசினார் என்பது உண்மை. ஆனால் அவர் கடைசிவரை சாதி ஒழிப்பிற்காக எந்தப் போராட்டமும் நட்த்தவில்லை. அவரது ஈரோட்டுப் பாதை திட்டத்தில் சாதியை ஒழிப்பதற்கான எந்த வழிமுறையும் சொல்லப்படவில்லை. இன்று வரை அவரது சீடர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சாதியற்ற திருமணங்களின் வீதம் மிகவும் அடிமட்டத்தில் இருக்கிறது. செயற்திட்டம் ஏதும் இல்லாமல் சவடால் விட்டுக் கொண்டே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு முன்னோடி பெரியார்.

3. பெரியார் இல்லாவிட்டால் பெண்விடுதலை நிகழ்ந்திருக்காது.

இது கோட்டைப் புளுகு. தமிழகத்தில் பெண்விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்கள் 19ம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து வந்து கொன்டிருக்கிறார்கள். இந்துவின் ஆசிரியரான ஜி சுப்ரமணிய ஐயர் 1889 தனது விதவை மகளுக்கு மறுதிருமணம் செய்வித்தார். பாரதி தொடர்ந்து பாடியும் எழுதியும் வந்தான். காங்கிரஸ் இயக்கம் காந்தியின் தலைமையின் கீழ் வந்த பின்பு பெண்கள் பொது இயக்கங்களில் பெருவாரியாகப் பங்கு கொள்ளத் துவங்கினார்கள். இவர் தடலாடியாகப் பேசினார். ஆனால் தேவடியாள், விபச்சாரி, குச்சுக்காரி, போன்ற அலங்காரச் சொற்கள் இல்லாமல் அவர் பொதுக்கூட்டங்களில் பேசியதே இல்லை என்று சொல்லலாம். எனக்குத் தெரிந்து வேலைக்கு செல்லும் பிராமணப் பெண்களை கீழ்த்தரமாகக் கேலி செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர். இவர்களின் பெண் விடுதலை என்பது ஆகப் போலித்தனமானது. இன்றும் சின்மயி போன்றவர்களை மிகவும் ஆபாசமாக வசை பாடுபவர்கள் திராவிடப் பொறுக்கிகள்.

சுதந்திர இந்தியாவில் பெண் விடுதலையின் அடித்தளம் இடப்பட்டது இந்துச் சட்டங்கள் திருத்தப்பட்ட போதுதான். பெண் விடுதலைக்கு மற்றையக் காரணங்கள் கருத்தடைச் சாதனங்கள், நகரங்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் அதிகரித்தமை. இவற்றிற்கும் பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த புத்தகம் என்று சொல்லலாம்.

4. பெரியார் இல்லாவிட்டால் இடஒதுக்கீடு வந்திருக்காது.

இது சமுத்திரப் புளுகு. இட ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார் என்பது உண்மை. ஆனால் முதன்முதலில் இட ஒதுக்கீடு வந்த போது அவர் நீதிக் கட்சியில் இல்லை. 1947ல் இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்தியது மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சி. இவர் அப்போது சுதந்திரம் அடைந்ததற்காகத் துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தார். 1951ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்த்து மத்தியில் இருந்த நேரு அரசு. அந்தக் காலகட்டத்தில் பெரியாரை கண்டு கொள்ளக்கூட யாரும் இல்லை. காங்கிரசுக்கு அவர் எதிரி. திமுக அவருக்குக் கண்ணீர்துளிகளாகத் தெரிந்தார்கள். மாறாக தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த கோபத்தில் அம்பேத்காரை விலை போய் விட்டார் என்று திட்டியவர் பெரியர்.

5. பெரியாரால்தான் தமிழனுக்குத் தன்மானம் வந்தது.

இது புளுகுகளுக்கெல்லாம் பெரிய புளுகு. தமிழனை அவமானம் செய்யும் புளுகு. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் தமிழருக்குத் தன்மானத்தைக் கொடுத்தார் என்று வெட்கமே இல்லாதவர்கள்தாம் சொல்வார்கள்.

தமிழனுக்கு தமிழைப் பற்றிய பெருமிதம் என்றும் இருந்தது.

“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ்” என்று பெரியார் பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கவிஞன் ஒருவன் பாடி விட்டான்.

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் உண்மையாக களத்தில் இறங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். சர்வோதயத் தொண்டர்கள்.

பெரியார் உண்மையாக தமிழகத்திற்கு அளித்தது என்ன?

இவர் தமிழகத்திற்குக் கொடுத்தது நாஜி இனவெறி. இன்று வரை நாஜி இயக்கம் உயிரோடு இருக்கும் மிகச் சில இடங்களில் தமிழ்நாடு ஒன்று. அதற்கு நாம் பெரியாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வன்முறைகள் ஏறத்தாழ இல்லாத நாஜி இயக்கமாக இருப்பதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். வெட்டுங்கள் குத்துங்கள் என்று அவர் பேசிக் கொண்டிருந்தாலும் அவருக்கு உண்மையில் வன்முறையில் நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் கொடுத்த இனவெறியும் வெறுப்பும் எந்த வடிவத்தை எடுக்கும் என்று சொல்ல முடியாது. யூதர்களுக்கு எதிராக இருந்த வெறுப்பு அழித்தொழிப்பு வெறியாக மாறியதற்கு 1800 ஆண்டுகள் வரலாறு இருக்கின்றது. ஹிட்லரின் நாஜி கட்சி கூட  1942க்கு பின்புதான் அழித்தொழிப்பு நிலைப்பாடை எடுத்தது.

பெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை. ஆனால் நினைப்பைச் செயல்படுத்துவதற்கு தேவையான பொறுமை அவரிடம் இல்லை. இந்தியா போன்ற நாட்டிலும் தமிழகம் போன்ற சாதி வேற்றுமைப் பேய்கள் ஆடும் மாநிலத்திலும் எல்லோரையும் அணைத்து செல்ல வேண்டும் என்ற அடிப்ப்டைப் புரிதல் அவரிடம் இல்லை. தடாலடித் தீர்வுகளை அவிழ்த்து விடுவது எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம் என்ற ஞானம் அவரிடம் இல்லவே இல்லை. நாஜி இனவெறி என்ற பூதம் வேறு அவரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.

பெரியாரின் சீடர்கள் பலரிடம் பெரியாரின் நல்ல பண்புகள் இல்லை. நாஜி இனவெறி மட்டும் இருக்கிறது.

6 thoughts on “பெரியார் – ஐம்பெரும் புளுகுகள்”

 1. //பெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை. ஆனால் நினைப்பைச் செயல்படுத்துவதற்கு தேவையான பொறுமை அவரிடம் இல்லை. இந்தியா போன்ற நாட்டிலும் தமிழகம் போன்ற சாதி வேற்றுமைப் பேய்கள் ஆடும் மாநிலத்திலும் எல்லோரையும் அணைத்து செல்ல வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் அவரிடம் இல்லை. // தங்களின் புரிதல் வியப்பாக இருக்கிறது. வாசித்த நூல்களையும் இணைய பக்கங்களையும் கடைசியில் இணைத்தால், கற்பனையில்லை கட்டுரை என்பது புலனாகும். நன்றி.

  Like

 2. I guess you don’t know the extreme of Nazi’s atrocities. If you know, you wouldn’t have compared it to the ideology of Periyar. If you are saying Periyar is spewing venom on Brahmins, then what you do is the same by comparing Dravidian ideology to Nazism.

  Like

 3. தமிழர்களை மதத்தாலும், சாதியாலும் அடிமைப்படுத்தி வைத்துவிட்டு, தமிழகத்தின் அனைத்து துறையிலும் தாங்கள் மட்டுமே செலுத்தி வந்த முழுமையான ஆதிக்கம், ‘பெரியார்’ என்ற மனிதரால் சற்றே தளர்ந்து விட்டதே என்ற விரக்தியில், அவர் மீதான காழ்ப்புணர்ச்சியால் வெறுப்பைக் கொட்டுவதற்காகவே ஒரு பார்ப்பனரால் எழுதப்பட்ட ஒரு பொய்ப் பரப்புரையில், அவரை அறியாமல் அவரே ஒத்துக்கொண்ட ஐந்து விசயங்களைக் கவனிக்க..!

  1. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் பேசினார் என்பது உண்மை.

  2. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த புத்தகம் என்று சொல்லலாம்.

  3. இட ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார் என்பது உண்மை.

  4. பெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை.

  5. பலரிடம் பெரியாரின் நல்ல பண்புகள் இல்லை.

  நன்றி ஐயா…🙏🙏🙏

  Like

 4. பெரியார் புத்தர் காலத்தில் வாழ்ந்திருந்தால் ஒருவேளை அவரது வரலாற்றையும், சாதனைகளையும் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் திரித்திருக்கலாம்/ மறைத்திருக்கலாம். ஆனால் இன்றைய அறிவியல் உலகில் அது முடியவே முடியாது:))

  அவரது எழுத்துக்களும், பேச்சுக்களும், சாதனைகளும் வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டு விட்டது. அவர் வாழ்ந்த காலத்தில் பேசத் துணிவற்று பதுங்கியிருந்த பார்ப்பனர் கூட்டத்தை, அவர் மறைந்து அரை நூற்றாண்டு நெருங்கும் காலத்திலும் தினமும் புலம்ப வைத்திருக்கிறார் என்பதே அவரது இமாலயச் சாதனைதான். அதையே உங்கள் பதிவும் மெய்ப்பிக்கிறது :))

  உங்களது புளுகுகளையும், புரட்டுகளையும் உங்களது பார்ப்பனக் கூட்டம் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் மற்றவர்களை விட மெத்தப் படித்த அறிவாளிகளானஅவர்கள் உண்மை நன்கறிவர். இருப்பினும், அவர் மீது வெறுப்பைக் கொட்டவே செய்வர்.. தங்கள் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த சுகபோகங்களும், அதிகாரங்களும் சற்றே குறைந்த விட்ட வெறுப்பில் பார்ப்பனக் கூட்டம் புலம்புவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

  பெரியார் 1925ல் தனது ‘குடியரசு’ நாளேட்டை தொடங்கிய காலத்தில் தமிழகத்தின் கல்வியறிவு பெற்றவர்கள் எத்தனை விழுக்காடு? அதிலும் பார்ப்பனரல்லாதாரின் கல்வியறிவு எத்தனை விழுக்காடு என்பதை இன்று எவரும் எளிதாக அறிந்து கொள்ளலாம் :))

  சுதந்திர இந்தியாவில் முதல் சட்டத்திருத்தம் இட ஒதுக்கீட்டிற்காக பெரியாரின் மாபெரும் போராட்டத்திற்குப் பணிந்தே செய்யப்பட்டது. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் பெரியார் இயக்கம் தான் சாதித்து, அதற்கு ஏற்றாற்போல் சட்டத்திருத்தமும் செய்ய வைத்தது. தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த கோபத்தில் அம்பேத்காரை விலை போய் விட்டார் என்று திட்டியவர் *பெரியர்* என்று ஒரு பார்ப்பனர் எழுதப் படித்ததும் சிரித்தே விட்டேன்.

  ‘தென் மாநிலங்களில் சாதி ஒழிப்பைப் பற்றி நான் பேசத் தேவையில்லை. ஏனெனில் அங்கே பெரியார் இருக்கிறார்’ என்று அம்பேத்கரே கூறியிருப்பதும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

  பெரியாரால் தான் தமிழகத்தில் ‘பெண்களுக்குச் சொத்துரிமை’ சட்டமானதும் தாங்கள் அறிந்ததே! அவரது எழுத்துக்கள் இன்றும் ஆணாதிக்ககத்தை ஆட்டம் காணச் செய்கிறது. பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை போன்றவைகள் அடிப்படைத் தேவை என்றும் கைம்மை வாழ்வு, வரதட்சணை கொடுமை போன்றவை அகற்றப்பட வேண்டியவை என்றும் கர்ஜித்ததற்காகவே ஈ.வெ.ராமசாமிக்கு 1938 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்டது.

  மதத்தின் பெயரால் பார்ப்பன அடிமைகளாய் இருந்த தமிழர்களுக்கு ‘இது உனது விதியல்ல, பார்ப்பனச் சதி’ என்று புரியும்படி உரைத்து தன்மானம் புகட்டியவரும் பெரியார் தான். தமிழ் அறிவியல் மொழியாகாமல் வெறும் பொய்ப் புராணங்களையும், ஆபாசங்களையும் மட்டுமே ‘பக்தி இலக்கியம்’ என்ற பெயரில் கொண்டிருந்ததால் ‘காட்டுமிராண்டி மொழி’ என்று உரிமையுடன் கண்டித்தவரும் அவரே! தமிழை எளிமையாக எழுத எழுத்துச் சீர்திருத்தம் செய்ததும் அவரே! திருக்குறளுக்காக மாநாடுகள் நடத்தி தமிழர்களிடம் பரப்பியதும் பெரியார் தான்!

  உண்மையில் தமிழ்நாட்டில் பக்தியை பெரிய அளவில் வளர்த்தது ஆழ்வார்களும், நாயன்மார்களும் அல்ல.. பெரியார்தான்! காரணம், பெரும்பான்மையான மக்கள் கோவிலுக்கு வெளியில் நின்றுகொண்டு, உள்ளே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்த காலத்தில், இவர்தான் போராடி உள்ளே நுழையும் உரிமையை வாங்கிக் கொடுத்து அனைவரையும் உள்ளே அனுப்பி வைத்தார். என்னதான் பெரியார் நாத்திகராக இருந்தாலும், தாழ்த்தப்பட்டர்களுக்கு ‘கடவுளை காட்டிய தெய்வம்’ அவர் தானே!

  இதுபோல் பெரியாரை எழுதத் தொடங்கினால் பக்கங்கள் போதாது. அவரது சோர்வில்லாத போராட்டத்தின் பயனாய் என்னால் எந்த கோவிலுக்குள்ளும், முதல் தலைமுறைப் பட்டதாரியாக அரசு வேலையில் நுழைய முடிகிறது.

  உங்களுக்கு வைக்கும் கோரிக்கை எல்லாம் ஒன்று தான். தொடர்ந்து இதுபோல் பெரியாரைப் பற்றி எழுதுங்கள்.. எங்களுக்கும் மற்றவர்களிடம் பெரியாரைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு வசதியாக இருக்கும்! நன்றி 🙏

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s