பெரியாரை அறிவு தந்த ஆசானாக ஏற்றுக் கொண்ட பக்தர்கள் பலர் அலைகிறார்கள். இவர்களுக்கும் சத்ய சாயிபாபா பக்தர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர. சாயிபாபா பக்தர்களுக்கு நாசி இனவெறி கிடையாது.
விடுதலை கிடைக்கும் என்று தெரிந்த உடன், பெரியார் நடத்திய போராட்டங்களையும் அறிவுப்புகளையும் பெரியாரிய பக்தர்கள் அல்லாதவர் பார்வைக்கு வைக்கிறேன். பக்தர்கள் பெரியாரைப் பொறுத்தவரையில் பார்வையற்றவர்கள்.
1. சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தார்.
2. குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார்.
3. 53ல் பிள்ளையார் சிலையை உடைத்தார்.
4. 55ல் தேசியக் கொடியை எரிப்பது என்ற முடிவை எடுத்து பின்னால் மாற்றிக் கொண்டார்.
5. 56ல் ராமன் உருவப்படத்தை எரித்தார்.
6. 57 அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியை எரித்தார்.
7. 60ல் தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை எரித்தார்.
8.65ல் கண்ணீர் துளிகள் என்று அவரால் அன்போடு அழைக்கப்பட்ட திமுகவினர் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மீது வசை மாரி பொழிந்தார்.
9. 66ல் இராமாயணத்தை எரித்தார்.
10.69ல் பிராமணாள் என்ற பெயர் கொண்ட உணவு விடுதிகளில் பெயர் அழிப்புப் போராட்டம் நடத்தினார்.
11. 71 இராமன் படத்தை செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்துத் தீயிடச் செய்தார்.
இவைதான் அவர் நடத்திய போராட்டங்கள். சாதியை எதிர்த்து அவர் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அழிப்பது, அடிப்பது, எரிப்பது போன்றவைதான் அவர் செய்தவை. கட்டுமானம் குறித்தோ, மக்களை வளமுறச் செய்வது குறித்தோ அவர் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.